இரவை சுடும் வெளிச்சம் - 2

(88)
  • 2.7k
  • 1k

இரவு 2 சதா சிந்தித்து கொண்டிருப்பது ஜானுவின் பழக்கமல்ல. ஆனால் வருண் குறித்து அவள் ரொம்பவே சிந்தித்தாள். அவளுடைய மாற்றம் அவளுக்கே ஆச்சரியமாய் இருந்தது. தான் ஒரு பெண் போலீஸ் அதிகாரியாய் இருந்த போதும் வருணுக்கு மனைவி தானே என்ற நினைப்பும் தோன்றாமல் இல்லை. என்ன செய்தாலும் எத்தனை சந்திப்புகள் நிகழ்ந்தாலும் ஒரு ஏக்கம் மனதில் இருந்த படி இருந்தது. காலப்போக்கில் அது மாறிவிடும் எனினும் அந்த தற்காலிக சலனம் அவளுக்கு பிடித்திருந்தது. நிச்சயதார்த்த நாள் குறித்து விட்டார்கள். அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் ஜானு அம்மா செய்ய தொடங்கி விட்டாள். ஜானு இரண்டு நாள் லீவு கேட்டிருந்தாள் . கொடுத்திருந்தார்கள்.மீராதான் இவளை கிண்டல் செய்தபடி இருந்தாள். ஆனால் ஜானு அதை பொருட்படுத்தவில்லை. வருண் அவ்வப்போது ஃபோன் செய்து வந்தான். அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் என்ற போதும் பரபரப்புக்கு பஞ்சமில்லை.திவ்யா நிச்சயத்துக்கு வருவதாக சொல்லி இருந்தாள். அவளுக்கு இன்னும் திருமணம் ஆகி இருக்கவில்லை.