இரவு 11 ராம் தன்னுடைய புதிய அலுவலக திறப்பு விழாவிற்கு ஜானுவை கூப்பிட்டிருந்தான். திவ்யாவும் வந்திருந்தாள். வருண்,ஜானுவோடு வந்திருந்தான். நன்றாக வந்திருக்கிறது ஆபீஸ் வாழ்ததுக்கள் என்றாள் ஜானு. வருண் எப்போ ஜானு நமக்கு ப்ரமோஷன் என்றான் . மதியம் லஞ்ச் அரேஞ்ச் பண்ணியிருந்தான் ராம். தீபுவுக்கு பெருமையாய் இருந்தது. ஒரு ஆபீஸ் அதுவும் அவர்களுக்கென ஒரு சொந்த ஆபீஸ் .அவள் வந்தவர்களை வரவேற்று கவனித்து கொண்டிருந்தாள். ராம் அந்த கீதா என்னதான் பிரச்சனை அவளுக்கு என்றாள் ஜானு. அவளே அவளுக்கு பிரச்சனை. அவளால் இந்த சைல்ட் டிராஃபிக் ஃபீல்ட் விட்டு விலக முடியவில்லை என்றான்.சுமதி வீட்டுக்கு அவள் பையன் எப்படி போனான். அதுதான் மர்மமாய் இருக்கிறது என்றான் ராம்.இப்படியே போனால் பிரேமா மேடத்தை ட்ரான்ஸ்பர் செய்து விடுவார்கள் என்றாள் திவ்யா. திவ்யா சற்றே டல் ஆக இருப்பதை ராம் உணர்ந்திருந்தான். அவள் அந்த பிரியாணி விவகாரத்தில் கலந்து இருக்கக்கூடாது என்றே நினைத்தான்.