இரவை சுடும் வெளிச்சம் - 18

  • 1.6k
  • 567

இரவு 18 ஸ்ரீதர் உயிருக்கு குமாரால் ஆபத்து இருப்பதை குறித்து ராம் ஆழ்ந்த கவலையில் இருந்தான். தீபு அவனுக்கு தைரியம் சொன்னாள். எபடியும் போலீஸ் குமாரை அரெஸ்ட் செய்துவிடும் என்று நம்புகிறேன் என்றும் சொன்னாள். ஒருபுறம் கந்தவேலும்,குமாரும். மறுபுறம் குமரஜோதி .இருவரது தொல்லைகளிலும் இருந்து தப்பித்தாக வேண்டும். பார்வதி ராமுடைய ஆபீஸ் வந்திருந்தாள். அடுத்து என்ன செய்வதாக உத்தேசம் என்றான் ராம். சொந்தமா டெக்ஸ்டைல் பிஸினஸ் பண்ண போகிறேன் என்றாள். அதெல்லாம் சரியாக வருமா பார்வதி ? நிறைய பணம் தேவைப்படுமே என்றாள் தீபு. ஸ்ரீதர் உதவி செய்வதாக சொல்லி இருக்கிறான். பாங்க் லோன் அப்ளை செய்யலாம் என இருக்கிறேன். ம் நல்ல விஷயம் அதை கடைசி வரை விடாமல் காப்பாற்ற வேண்டும் என்றான் ராம். சுமதி கொலையில் சம்பந்தப்பட்ட டிரைவரையும் போலீஸ் தேடியது. அவனும் போலீசுக்கு சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தான்.வருணுக்கு ஜாமீன் வாங்க குமரஜோதி வக்கீல் மூலமாக ரொம்பவே