இரவை சுடும் வெளிச்சம் - 20

  • 717
  • 198

இரவு 20 ஆபத்து வரும் முன் களைவதே நல்லது என ராம் தீர்மானித்தான். மீரா விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என உள்ளுணர்வு சொன்னது. அஜய் படித்த அகாடமியில் அவன் வீட்டு அட்ரஸ் வாங்கினான். ஜானுவிடம் இது பற்றி சொல்லலாமா என யோசித்தான். அவளுக்கு ஃபோன் பண்ணினான். என்னாச்சு ராம் சார் அந்த அஜய் விஷயத்துல என்ன முடிவு எடுத்து இருக்கீங்க ஜானு? ஏதோ சின்ன பையன் அப்படின்னு பார்த்தேன். நீங்க எனக்காக ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா ராம் சார் சொல்லுங்க ஜானு . அஜய் ஃபேமிலியை பார்த்து ஒரு ஒரு வார்த்தை சொல்லிட்டு வாங்க . அப்படியும் அவன் கேட்கலை அப்படின்னா பார்த்துக்கலாம் என்றாள் . சரி ஜானு நான் பார்த்துக்கிறேன் . ராம் காலை 8 மணிக்கெல்லாம் அஜய் வீட்டுக்கு போய்விட்டான். சராசரியான குடும்பம். வீட்டுக்கு ஒரே பிள்ளை. யார் சார் வேணும் என்றார் அஜய் அப்பா.