கனவு 12 சௌமியா , ஹரிதா இருவரும் கம்ப்யூட்டர் கோச்சிங் சென்டர் ஒன்றில் சேர்ந்தனர். இருவருக்கும் நீண்ட நாளாக இருந்த ஆசைதான் அது. அங்கே ரம்யா என்ற பெண் டியூடர் சொல்லிக்கொடுத்து வந்தார். இருவரும் பேசிக்ஸ் ஆஃப் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்திருந்தார்கள். நேரம் சரியாக இருந்தது ஹரிதாவுக்கு . காலையிலும் மாலையிலும் விளையாட்டு அதோடு வாரக்கடைசியில் கம்ப்யூட்டர் கிளாஸ் . ஹரிதாவுக்கு நிற்க நேரம் இல்லை. ஹரிதாவின் பர்த்டேவுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருந்தது. அதை சிறப்பாக கொண்டாட ஆறுமுகமும், சௌமியாவும் முடிவு செய்திருந்தனர். ஹரிதா விளையாட்டு போட்டிகளில் தொடர்ந்து முன்னேற இளங்கோ ஊக்கமளித்து வந்தார். கம்ப்யூட்டர் டீச்சர் ரம்யா நல்ல சோசியல் டைப் என்பதால் இவர்கள் கேட்கும் சிறிய சிறிய சந்தேகங்களை கூட தீர்த்து வைத்தார். கூடிய சீக்கிரம் கவர்ன்மெண்ட் லேப்டாப் கிடைக்குமென்று மாணவ மாணவிகள் பேசிக்கொண்டர். இது எல்லோருக்கும் மகிழ்வளிக்க கூடியது என ஹரிதா சௌமியாவிடம் சொன்னாள்.