கனவு 13 ஹரிதா மனதில் சலன அலை அடிக்கத்தொடங்கியது. இது அவளுக்கே புதிராய் இருந்தது. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு லேப்டாப்பை எடுத்தாள். அவள் மனம் திடுக்கிட்டது . நாம் செய்வது சரியா தவறா என பல யோசனைகள் ஓடியது. வெப்சைட் அட்ரஸ் போட்டு பார்த்ததும் சீ இதற்குத்தான் இத்தனை அக்கப்போரா ? என்றாகிவிட்டது. லேப்டாப்பை அணைத்தாள். ஹிஸ்டரி டெலீட் செய்தாள் . சௌமியாவுக்கு ஃபோன் பண்ணினாள். என்னடி என்ன ஆச்சு ஏன் பதட்டமாய் இருக்கிறாய் எனக் கேட்டாள் சௌமியா. இவள் விஷயத்தை சொன்னாள். உனக்கு பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடு நான் ஒன்றும் உன்னை கட்டாயப்படுத்தவில்லையே என்று சொன்னாள் சௌமியா. சரி நான் நாளைக்கு பேசுகிறேன் என்றாள் ஹரிதா. சௌமியா சிரித்து கொண்டாள் ஹரிதா பயந்துவிட்டாள் போல என்றெண்ணிக்கொண்டாள் . இவள் பதட்டம் அப்போதைக்கு குறைந்திருந்தது. யாருக்காவது இது தெரிந்தால் ?தெரிந்தால் என்ன அவர்கள் பார்த்திருக்க மாட்டார்களா என்ன? இப்படியாக அந்த இரவு கடந்தது.