கனவு 15இளங்கோ சார் பள்ளியை விட்டு போன பிறகு ஹரிதாவுக்கு பெரிதாக விளையாட்டில் ஆர்வமில்லாமல் போய்விடுமோ என சௌமியாவும் ஆறுமுகமும் நினைத்தனர். ஆனால் நடந்த சம்பவத்தை கொஞ்சம் கொஞ்சமாக மறக்க தொடங்கியிருந்தாள் ஹரிதா. இப்போது நல்ல முன்னேற்றம் இருந்தது. அடுத்து என்ன செய்வது என்பதில் ஹரிதாவின் ஆர்வம் இருந்தது. எக்ஸாம்ஸ் எல்லாம் நல்லபடியாக எழுதி முடித்தாள். 20 நாள் போல கோடைவிடுமுறை விட்டிருந்தார்கள். சௌமியா அவளை தன்னோடு தஞ்சாவூர் வரும்படி அழைத்தாள் . சௌமியாவுடைய சித்தப்பா வீடு அங்கு இருந்தது அவளுடைய கசின் ஒருத்தி இன்ஜினியரிங் 3 ம் வருடம் படித்துக்கொண்டிருந்தாள். அவள் பெயர் கீர்த்தி.ஹரிதா அப்பா. அம்மா மறுப்பேதும் சொல்லவில்லை. ஆறுமுகம் லீவுக்காக சொந்த ஊருக்கு போயிருந்தான். அந்த கோடை விடுமுறையை நல்ல விதமாக அமைதியாக கழிக்க ஹரிதா விரும்பினாள். சௌமியாவும், ஹரிதாவும் டிரைன் மூலம் தஞ்சாவூர் சென்றடைந்தனர். சௌமியா கீர்த்தியையும் அவள் அப்பா , அம்மாவையும் அறிமுகப்படுத்தி