ஹரிதாவின் பகல் கனவுகள் part 17

  • 288
  • 99

கனவு 17 ரஞ்சித் அவளை நேரில் சந்திப்பதாக சொல்லியிருந்தான். என்ன அப்படி முக்கியமான விஷயமாக இருக்கும் என்று ஹரிதாவிற்கு புரியவில்லை. அவள் ஸ்கூல் முடிந்தவுடன் அவனை சந்தித்தாள். என்ன ஆச்சு ரஞ்சித் என்ன விஷயம் என்றாள் . நான் நேரிடையாகவே விஷயத்துக்கு வருகிறேன் நான் சௌமியாவுடன் பிரேக்அப் செய்து கொள்ளலாம் என இருக்கிறேன் என்றான். எதற்காக இந்த அவசர முடிவு என்றாள் ஹரிதா. எல்லாம் யோசித்து எடுத்த முடிவுதான் . நீதான் அவளிடம் பக்குவமாக எடுத்து சொல்ல வேண்டும் என்றான். நான் எப்படி ? அதெல்லாம் உன்னால் முடியும் . அவள் எதற்கும் ஒத்து வர மாட்டாள் அதனால் தான் நான் உன்னிடம் சொல்கிறேன் என்றான். சரி நான் அவளிடம் சொல்கிறேன். தாங்க்ஸ் என்றான். அவள் விடைபெற்றுக்கொண்டாள்.என்ன ஆச்சு ரஞ்சித்துக்கு நல்லாத்தானே பழகினான் சௌமியாவோடு .. அவன் என்னதான் எதிர்பார்க்கிறான் சௌமியாவிடம் என யோசித்தாள் ஹரிதா. இதை எப்படி சௌமியாவிடம் சொல்வது