கனவு 19 ரஞ்சித் பீச் வியூ ரிசார்ட் ஒன்றை புக் செய்திருந்தான். இது எல்லோருக்கும் மகிழ்ச்சியை அளித்தது. 11 மணி போல ஆசிரமம் போன்றவற்றை பார்வையிட்டார்கள். மதியம் 1 மணிக்கு ரிசார்ட் போனார்கள். அங்கே தங்க இரு ரூம்கள் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஒரு ரூமில் சௌமியா, கீர்த்தி, ஹரிதா எல்லோரும் தங்கியிருந்தனர். இன்னொரு ரூமில் ஆறுமுகமும், ரஞ்சித்தும் தங்கி இருந்தனர். பீச் ரிசார்ட்டில் மதிய சாப்பாடு அருமையாக இருந்தது. கடல் உணவு சிறப்பாக இருந்ததாக ஹரிதா சொன்னாள். மதியம் 3 மணி போல போட்டிங் சென்றார்கள். கீர்த்தி, ஆறுமுகம் இருவரும் ஒரு போட்டிலும் சௌமியா, ரஞ்சித் மற்றும் ஹரிதா மற்றொரு போட்டிலும் பயணித்தனர். ரம்யமான இயற்கை சூழலாக இருந்தது. மழை 4 மணிக்கு வந்துவிட்டது. லேசான மழைதான் பெய்தது என்றாலும் வெப்ப சூழ்நிலையை அது குளிர்விக்க போதுமானதாய் இருந்தது.சில்வர் பீச் சுற்றி பார்த்தார்கள்.மாலை 7 மணிக்கெல்லாம் அங்கிருந்து கிளம்பி ஊர் திரும்ப