ஹரிதாவின் பகல் கனவுகள் part 20

  • 114

கனவு 20 ஆறுமுகத்தின் பிரிவு ஹரிதாவுக்கு வருத்தத்தை தந்தாலும் அவளுடைய உலகத்தை பற்றிய பார்வை விரிவடைந்திருந்தது. எல்லவற்றையும் கடக்க தான் பழகிக் கொள்ள வேண்டும் என அவள் உறுதி எடுத்துக்கொண்டாள் . முதலில் சமர் தன்னிடம் நன்றாக பழகினான் ஆனால் அவனுடைய தேவைகள் வேறாய் இருந்தவுடன் அவளை விட்டு விலகினான். பிறகு இளங்கோ அவர் மீது வீண் பழி சுமத்தினார்கள். இப்போது ஆறுமுகத்தின் பிரிவு. எல்லாவற்றிலும் இவள் வெறும் பார்வையாளராகவே இருந்திருக்கிறாள். அவள் செய்யாத தப்புக்கு அவள் துன்பம் அனுபவித்து வந்தாள். அவள் அதிகம் இது குறித்து யாரிடமும் பேச விரும்பவில்லை. பாவம் கீர்த்திதான் எத்தனை பிரியம் அவளுக்கு ஆறுமுகம் மீது. அவள் எதையும் எதிர்பார்க்காமலே கொண்ட பிரியம் கடைசியில் கேள்விக்குறியாய் போனது போனது தான் வேதனை. சௌமியா அவளும் அப்படித்தான். ரஞ்சித் அவளை எத்தனை தூரம் நேசித்தானோ அத்தனை தூரம் இப்போது வெறுக்கிறான் அல்லது அவளை தவிர்க்கிறான். காலப்போக்கில் எல்லாம்