இரவை சுடும் வெளிச்சம் - 21

  • 552
  • 186

இரவு 21ஒரு சின்னப்பய என் மேல கைய வெச்சுட்டான் .. எவ்வளவு திமிர் அவனுக்கு என்றான் கந்தவேல். ஆமா தலைவரே அவனை எங்க கிட்ட விட்டுடுங்க தலைவரே நாங்க பார்த்துக்கிறோம் என்றனர் அவனது சகாக்கள். அதெல்லாம் நேரம் வரும்போது பார்த்து பண்ணுங்க என்றான் கந்தவேல். ராம் பரிதியின் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்டை போராடி பெற்றான். அதில் கழுத்து இறுக்கப்பட்டு மரணம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது அதோடு சந்தேக மரணம் என குறிப்பிடப்பட்டு போலீஸ் ரெகார்ட்களிலும் பதியப்பட்டது. ராம் பரிதியின் மகனை சந்தித்தான். அவன் நான் யாரிடமும் பேச விரும்பவில்லை என்றான். உனக்கு ஏதாவது ஹெல்ப் தேவைப்பட்டால் இந்த நம்பரில் கூப்பிடு என்று சொல்லி கார்ட் ஒன்றை அவன் பாக்கெட்டில் வைத்தான். அவன் கோபம் தீர்ந்ததும் நிச்சயம் கூப்பிடுவான் என எதிர்பார்த்தான். சற்றும் எதிர்பாராத விதமாக அமைச்சர் குழந்தைவேலு போலீஸ் காவலில் இறந்த பரிதி குடும்பத்துக்கு 2 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்தார். ஜானு