இரவை சுடும் வெளிச்சம் - 24

  • 465
  • 135

இரவு 24அந்த பெண்ணின் பெயர் ஹரிதா என்பது தெரிந்தது. கீதாவின் ஃபோன் ரிப்பேர் செய்தது அவள் தான் என சொன்னார்கள். ஜானு தன்னுடைய போனில் சில பிரச்சனைகளை சொன்னாள். ஹரிதா அதை சரி செய்து கொடுத்தாள். அவளுக்கு ஒரு அண்ணன் இருந்தான். அதே கடையில் சேல்ஸ் பிரிவில் வேலை பார்த்து வந்தான் அவன் பெயர் சேகர். அவனும் எந்த பதட்டமும் இல்லாமல் இருந்தான். ஹரிதா , சேகர் இருவரையும் தனியாக கூப்பிட்டு விசாரித்தாள் ஜானு. நாங்க எதுவும் செய்யல மேடம் என்றார்கள். உங்க ஃபோன் நம்பர் ,வீட்டு அட்ரஸ் எழுதி கொடுங்க என வாங்கிகொண்டாள். தீபு அந்த வாய்ஸ் ரெகார்டிங்கை பழைய குற்றவாளிகளின் குரலோடு ஒப்பிட்டு பார்த்தாள். குறிப்பாக குழந்தை கடத்தலில் ஈடுபடுவோரோடு ஒப்பிட்டு பார்த்தாள் . ஒரு குரல் மேட்ச் ஆனது . அவன் பெயர் சுதாகர். தற்போது சிறையில் இருக்கும் சுதாகர் குழந்தை கடத்தல் வழக்கில் கைதானவன். 5