இரவை சுடும் வெளிச்சம் - 26

இரவு 26 ராம் முத்துவை அந்த பில்டிங் வாசலில் சந்தித்தான். என்னாச்சு முத்து ஜி ஆரும் மத்தவங்களும் பில்டிங் மேலே போனவங்க இன்னும் கீழே வரலை என்றான். சரி வா மேலே போய் பார்ப்போம் என்றான் ராம். இருங்க சார் அவங்க லிப்ட்ல வந்துகிட்டு இருக்கலாம் என்றான் முத்து. அதே சமயம் பவர் கட் ஆனது. எங்கு பார்த்தாலும் கும்மிருட்டு. ராம் முத்து முத்து என குரல் கொடுத்தான் அவனை காணவில்லை. பதட்டமானான். சரியாய் 5 நிமிடம் கழித்து யாரோ அம்மா என அலறும் சத்தம் கேட்டது. ராம் மேலே போகும் பாதையை தேடினான். லைட்டர் வெளிச்சத்தின் துணை கொண்டு படிக்கட்டுகளில் ஏறினான். எதிரே திபு திபுவென ஆட்கள் இறங்கினார்கள். இறங்கி ஓடினார்கள். எதற்காக இப்படி ஓடுகிறார்கள் என்றே தெரியவில்லை. அலறல் சத்தம் எந்த திசையில் இருந்து வந்தது என்றும் புரியவில்லை. இவன் 5வது மாடிக்கு போன போது போலீஸ் வாகன