DNA ☠️ கொலைகள்-7
'ப்ளு பேரட் சாட்ஸ் & காஃபி ஷாப்'.
ரகுவும் பர்ஃபீனாவும் வேலை சம்பந்தமாக வெளியில் எங்கேனும் சென்று வந்தால் வீட்டிற்கு செல்வதற்கு முன் வழக்கமாக காஃபி சாப்பிடும் காஃபி ஷாப் அது.
அன்றும் அப்படித்தான் இருவரும் வேலை நிமித்தமாக வெளியில் சென்று விட்டு திரும்பும் போது.,
பர்ஃபீனா இப்பவே வீட்டுக்கு போகனுமா இல்ல ஒரு பத்து நிமிஷம் ப்ளு பேரட்டுக்கு போயிட்டு போகலாமா?
ஏன் ரகு டீ சாப்பிடறதுக்காகத்தான்னா வேணாம் வீட்டுல கொஞ்சம் வேலையிருக்கு பட் ஏதாவது முக்கியமான விஷயமாயிருந்தா கண்டிப்பா போகலாம்.
ஆமா.. ஒரு முக்கியமான விஷயம் பர்ஃபீனா அதனால்தான் கேட்கறேன். நம்மோட இண்வஸ்டிகேஷன்ல அடுத்த ஸ்டெப் எனக்கு நேத்து எதேச்சையா கிடைச்சது. அதைப் பத்தி பேசத்தான் கூப்பிடுறேன்.. என்ன போகலாமா.
அப்படினா வாங்க போகலாம் என்று பர்ஃபீனா சொன்னதும் இருவரும் அந்த காபி ஷாப்பிற்கு வந்தனர். வந்ததும்.,
என்ன ரகு? ஏதோ பேசணும்னு சொல்லிட்டு அமைதியாக இருக்கீங்க.
இல்ல வா.. அந்த கார்னர் சீட்டுக்கு போயிடலாம்.
என்னாச்சு இங்கேயே பேசலாமே இங்கயுந்தான் இடம் இருக்கே.
இல்ல பர்ஃபீனா. நாம பண்றது சீக்ரெட் ஆன விஷயம். தெரிஞ்சும் தெரியாமயும் கூட யாரும் ஸ்மெல் பண்ணிடக்கூடாது அதனாலதான்.
என்ன அவ்வளவு சீக்ரெட்டான விஷயமா.
ஆமா பர்ஃபீனா நான் சொல்றது கொஞ்சம் கவனமா கேட்டுக்க ஏன்னா நம்ம டாக்டர் பண்றது பத்தின மிகமுக்கியமான தகவல் தானா வந்து கிடைச்சிருக்கு அதாவது முதல்ல ஹீயூமன் பத்தினதுன்னு கண்டுபிடிச்சோம் அப்புறம் அது எது சம்பந்தப்பட்டதுனு கண்டுபிடிச்சோம் அடுத்ததாக யாருக்கு செய்றாங்கன்னு கண்டுபிடிச்சாச்சு. அதனால்தான் சொல்ற கார்னர் டேபிளுக்கு போயி பேசலாம்னு.
அப்படினா சரி வாங்க போகலாம் என்றவள் ரகு சொன்ன கார்னர் சீட் வந்ததும் சொல்லுங்க என்றாள்.
சரி சொல்லுங்க என்று கேட்ட பர்ஃபீனா.. அதற்கு மேல் ரகு சொல்ல சொல்ல கையில் இருந்த காஃபியைக் கூட குடிக்க முடியாமல் உறைந்து போய் அமர்ந்திருந்தாள்.
பர்ஃபீனா உறைந்து போய் உட்கார்ந்திருந்தை பார்த்த ரகு கேட்டான் என்ன பர்ஃபீனா இப்படி உறைஞ்சு போய் பார்க்குற.
பின்ன என்ன பண்ண சொல்றீங்க ரகு. இந்தளவுக்கு பக்காவா பிளான் பண்ணி செஞ்சிக்கிட்டிருக்காருனா, விஷயம் பெரிய அளவுல இருக்கும் போலிருக்கே.
உண்மைதான் பர்ஃபீனா. நான் கூட வேற ஏதாவது ஆதாயத்துக்காக பிலாக் ரிசர்ச் பண்றாருன்னுதா நெனைச்சேன். அது வெளியில தெரிஞ்சு ஏதாவது பிரச்சனை வந்தா, அதுக்கு நான் தான் காரணம்னு மொத்த கோபமும் என் மேல திரும்பினாலும் திரும்பும்னு நினைச்சுதா.. ஒரு வேலை உயிருக்கு ஆபத்து வந்தால் வருமுன்னு அன்னைக்கு உன்கிட்ட நான் அப்படி சொன்ன.
இப்ப மட்டும் என்ன வாழுதாம். விஷயம் அதைவிட ரொம்ப சீரியஸாவே இருக்கு. ரகு, எனக்கு என்னமோ பயமா இருக்கு இதனால உங்களுக்கு பெரிய ரிஸ்க்தானு என் மனசுக்கு தோணுது. தேவையில்லாம உங்க லைஃபை ஸ்பாயில் பண்ணிக்காதீங்க. பேசாம நாம போலீஸ்கிட்ட போயிடலாமே.
அப்படி இல்ல பர்ஃபினா அப்படி போலீஸ் கிட்ட போனாலும் நமக்கு கூட சிக்கல் தான்.
நமக்கும் சிக்கலா.. தப்பு பண்றது அவரு. அதத்தானே சொல்ல போறோம் அதுல நமக்கு என்ன சிக்கல்.
அப்படி இல்ல, போலீஸ் கிட்ட போனா முழுமையான தகவலோட போகனும். அவர் மாஃபியா மூலம் பிசினஸ் பண்ண போறாருங்கறது மட்டும் தான் இப்போதைக்கு நமக்கு தெரியும். அது எந்த மாதிரி பிசினஸ், எப்படிப்பட்ட பிசினஸ், அதுல ஹியூமன் டிஎன்ஏ எங்க சம்பந்தப்பட்டிருக்கு அப்படிங்கற விஷயம் எதுவும் நமக்கு தெரியாது. அதனால எடுத்தோம் கவுத்தோம்னு சொன்னம்னா, நமக்கும் இதுல ஏதோ தொடர்பு இருக்கு, ரெண்டு பேருக்கு நடுவில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டிருக்கு, அதனால அவர மாட்டி விட பார்க்கிறோம்னு சொல்லிட்டு, ஒரு வேளை பிரச்சனை நம்ம பக்கமுமே திரும்ப வாய்ப்பிருக்கு. அப்புறம் தேவையில்லாமல் வேலையை பார்த்த மாதிரியாகி பிள்ளையார் பிடிக்க குரங்காக முடிஞ்ச கதையா மாறிடும். வீசுற பூமராங்க சரியான விதத்தில் சரியான திசையில் வீசணும், இல்லனா அது திருப்பி வந்து நம்மளையே தாக்கும். அந்த மாதிரி தான் இதுவும். போலீஸ்கிட்ட போனோம்னா எல்லாத்தையும் டீட்டெய்லா தெரிஞ்சுக்கிட்டு போகணும் இல்லேனா நாமலே தேவையில்லாத சிக்கல்ல மாட்டிக்குவோம்.
சரி அதுக்கு ஏதாவது பிளான் வச்சிருக்கீங்களா.
இருக்கு, பட் அதுக்கு உன்னோட ஹெல்ப் வேணும். நீ மனசு வச்சா கண்டிப்பா செஞ்சிடலாம்.
என்ன ஹெல்ப் வேணுனாலும் செய்யறேன். இவ்ளோ தூரம் நீங்க கஷ்டப்பட்டு டீட்டெய்ல்ஸ் எடுக்கும்போது அதுக்கு என்னால முடிஞ்ச ஹெல்ப் கூட பண்ண மாட்டேனா, கண்டிப்பா பண்றேன். என்ன ஹெல்ப் வேணும், எப்படி வேணும் சொல்லுங்க.
இல்ல பர்ஃபீனா நீ பண்ண போற ஹெல்ப் தான் மிகப்பெருசு. நான் எடுத்த டீடெய்ல்ஸ்ஸ விட ரொம்ப பெருசு. ஏன்னா அவரோட பர்சனல் கேபின்ல கன்குலூஷனான என்கோடீங்கோட டீட்டெய்ல டாக்குமெண்டேஷன் பண்றது நீதான். சில சமயம் அவரு இல்லாத சமயத்துல கூட டாக்குமெண்டேஷன் பிரிப்பரேஷனுக்கு உன்ன விட்டுட்டு போயிடறாரு. அந்தளவுக்கு உன்மேல நம்பிக்கை இருக்கு. ஸோ அந்த நம்பிக்கையை வச்சிதான் அவர் இல்லாத சமயத்துலதான் இந்த வேலை செய்ய முடியும்.
அங்க நான் என்ன பண்ணனும்.
அங்க டாக்டரோட சீட்டுக்கு எதிர்ல நேரா பார்த்தா ஒரு கபோர்ட் இருக்கும். உனக்கும் தெரியும்னு நினைக்கிறே. அந்த கபோர்டுல தான் அவரு தன்னுடைய முக்கியமான பைல்கள் எல்லாத்தையும் வச்சு சேவ் பண்ணிட்டு வராரு. அதுல மெருனும் பிலாக்கும் கலந்த மாதிரி ஒரு கலர்ல ஒரு ஃபைல் இருக்கும். அதுல தான் அவரோட மிக மிக முக்கியமான பைல்கள் இருக்கிறதாகவும் அதை பத்திரமா பாத்துக்கிட்டாலே போதுமானதும்னு ஒரு முறை பாதர் மோசஸ் கிட்ட டாக்டர் பேசிட்டு இருக்கும்போது நான் எதேச்சையா கேட்ட. பட் அது ஒரு எலக்ட்ரானிக் கம் டிஜிட்டல் லாக் சிஸ்டம் கொண்ட ஃபோல்டர். அந்த ஃபோல்டர மட்டும் எப்படியாச்சும் எடுத்துட்டு வந்துட்டினா இல்லனா அதை காப்பி எடுத்து வந்துட்டினாலும் போதும். நாம அவர் என்ன பண்றாரு, எதுக்கு மாஃபியாஸ் மூலம் பிசினஸ் பண்ண நினைக்கிறாரு, அதனால இந்த சொசைட்டிக்கு என்ன பிரச்சனைங்கிறத நாம கண்டுபிடிக்க முடியும். அத வச்சு நாம போலீஸ்கிட்ட போகலாம். அப்படி போனாத்தான் நமக்கும் சேஃப்டி நாட்டுக்கும் நல்லது.
ஆனா ரொம்ப ரிஸ்க்கான வேலை பர்ஃபீனா. கரணம் தப்பின மரணம்ங்கற மாதிரி. ஆனா உன்ன தவிர வேறு யாராலும் அங்க போகவே முடியாது. இந்த ஒரு சிக்களாலதா என் மனசுக்கு ரொம்ப சங்கடமாவும் இருக்கு.
அதெல்லாம் சரி தான். ஆனா அந்த கபோர்டோட கீ இல்லாம அத எப்படி ஓபன் பண்றது. அதுபோல அந்த போல்டருக்கும் ஏதாவது பாஸ்வேர்ட் வச்சிருந்தா.
அதுக்கும் வழி இருக்கு டாக்டரோட கட்டை விரல் ஃபிங்கர் பிரிண்ட் தான் அந்த ரெண்டுத்தோட ஓப்பனிங் கீ.
இது எப்படி உங்களுக்கு தெரியும்.
ஆரம்பத்துல டாக்டர் கொடுத்த கோடிங் சரியா ரிசல்ட் வரலன்னு சொல்லிட்டு இருந்தேன் இல்ல, அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்துல தான் அவர் ரூமுக்கு போகும்போது, அவர் அந்த கபோர்டையும் ஃபோல்டரையும் ஓபன் பண்ணத பார்த்த. ஆனா கவனிக்காத மாதிரி நடந்துக்கிட்ட.
சரி ஆனா அவருடைய பிங்கர் பிரிண்ட்ட எப்படி வாங்குறது.
அவர்கிட்டயேத்தான்.
என்ன விளையாடுறீங்களா. டாக்டர்கிட்டேயே போயி.. சார்.. சார், உங்க கபோர்டையும் அதுக்குள்ள இருக்கிற முக்கியமான ஃபோல்டரையும் ஓப்பன் பண்ண போறோம். அதுக்கு உங்க பிங்கர் பிரிண்ட் வேணும் தாங்கன்னு போய் கேக்க போறீங்களா இல்ல கேக்க போறமா.
ஹா ஹா ஹா... நல்ல காமெடி பண்ற இருந்தாலும், அவர்கிட்டதான் வாங்க போறோம் ஆனா அவருக்கு தெரியாமலேயே.
அதுதான் எப்படி?
நீயும் தான 'இருமுகன்' படத்த பார்த்த அதுக்கு பிறகுமா இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேட்கிறேன்.
ஓகே, ஓகே, புரியுது.. புரியுது.. பட் ஆனா யார் வாங்குறது, எப்படி வாங்குறது, எப்ப வாங்குறது.
அதுக்கு ஒரு ஐடியா இருக்குது பர்ஃபீனா.
என்ன ஐடியா.
சிம்பிளான.. சீப்பான ஐடியா தான். சொல்லுவேன் ஆனா சிரிக்க கூடாது.
ஹ்ம்... (மெல்ல சிரித்துக் கொண்டே) சிரிக்க மாட்ட சொல்லுங்க. என்றவள் ஒரு ஃபோன் கால் வர டிஸ்பிளேயை பார்த்துவிட்டு வேலையா இருக்கேன் அப்புறம் கூப்பிடுறேன் என்றவள் காலை கட் பண்ணுவதாக நினைத்து வெறும் ப்ளாஷ் சுவிட்சை மட்டும் அனைத்து விட்டு காலை கட் பண்ணாமல் விட அவர்கள் பேசியது அனைத்தும் எதிர்முனைக்கு ஒலிப்பரப்பாகிக் கொண்டிருந்தது. ரகுவும் பர்ஃபீனா காலை கட் பண்ணிவிட்டாள் என்று நினைத்து யார் பர்ஃபீனா பேச வேண்டியதுதானே என்றான். நீங்க வேற என் ஃப்ரெண்டு ஒருத்தி சரியான வலவலா பார்ட்டி அதனால்தான் கட் பண்ணேன் நீங்க சொல்லுங்க என்றாள். ரகு சொல்ல ஆரம்பித்தான்.
நான் எப்பவுமே என் டூட்டியை முடிச்சிட்டு கிளம்பும்போது டாக்டர் இருந்தா.. அவர பார்த்து சொல்லிட்டு தான் போவேன். அப்படி நான் போகும்போது கோடிங் ரிசல்ட் டேட்டா அவர் நினைச்ச படியே வந்திருந்தாலும் அவர் என்ன பண்ணுவாரு சொல்லு பாப்போம்.
மை பாய், பரவால்ல.. ஆனா இது எனக்கு திருப்தி தரல இருந்தாலும் ஓகே. பட் உன்கிட்ட இருந்து இன்னும் பெஸ்ட்டா எதிர்பார்க்கிறேன் அப்படின்னு சொல்லுவாரு கையை குலுக்கி தோளை தட்டுவாருன்னு அடிக்கடி சொல்லியிருக்கீங்க.
எஸ்... வேணும்னே திரிக்காத கோடிங்க-தான் இந்த முறை கொடுத்திருக்காரு. அது ஏன்னும் தெரியல. அது மாதிரி அதோட ரிசல்ட்டும் அவர் சொன்ன மாதிரியே வந்திருக்கு.
அதாவது அவர் மேல் டவுட்டு வந்திரக்கூடாதுனு மொக்க கோடிங் அதான.
எஸ்.. ஆமா..
ரெண்டும் ஒன்னுதா. மேல சொல்லுங்க.
நாளைக்கு அதோட ரிசல்ட்ட கொடுக்க போறேன். எப்பவும் போலவே என்கிட்ட இருந்து ரிசல்ட்டையும் வாங்குவாரு, வழக்கம்போல கையைக் குலுக்கி.. தோளை தட்டி கொடுத்து.. அட்வைஸ் பண்ணுவாரு, கூடவே சேர்த்து பிங்கர் பிரிண்டும் கொடுப்பாரு.
ஓகே ரகு நான் என்னால முடிஞ்ச வரைக்கும் பெஸ்ட்டா பண்றேன். இப்ப நான் கிளம்பறேன். இதுக்கு மேல நேரம் ஆச்சுன்னா வாப்பா என்னை தேடுவாரு.
ஓகே, பர்ஃபீனா நீ கிளம்பு.
**********
காலை 5:30 மணி, தேவன் திருச்சபை சர்ச், ஃபாதர் மோசஸ் பிரேயரை முடித்துக் கொண்டு நடை பயிற்சிகாக வெளியே வந்த நேரம், அவரின் அறையில் தொலைபேசி அடித்தது, இந்நேரத்தில் யாராக இருக்கும் என்று யோசித்து கொண்டே, அதன் டிஸ்பிளே போர்டில் பார்த்தவர், ஒருமுறை மகிழ்ந்து மறுமுறை சிந்தனையில் ஆழ்ந்தார்.
அதற்குள் மோசஸ்... மோசஸ்.. என ரோஸ்லின் மேரி குரல் கொடுக்க, சுதாரித்துக் கொண்டவர் ஆ..ங் சொல்லுக்கா என்றார்.
இல்ல.. பேச்சையே காணோம்.
இல்லக்கா இவ்வளவு யர்லி மார்னிங்கே ஃபோன் பண்ணியிருக்கியா.. அதான் சட்டுனு ஒன்னும் புரியல. எனிதிங் ஸ்பெஷலாக்கா.
ஆமாப்பா. நீ ரொம்ப நாள் கேட்டுக்கிட்டிருந்தது நடக்கப் போகுது.
என்னதுக்கா?
ரோஸ்லின் மேரி சொன்ன வார்த்தையில் ஃபாதர் மோசஸ் ஆதி முதல் அந்தம் வரை அதிர்ந்தார்.
கொலைகள் நடக்கும்