கனவு 12
சௌமியா , ஹரிதா இருவரும் கம்ப்யூட்டர் கோச்சிங் சென்டர் ஒன்றில் சேர்ந்தனர். இருவருக்கும் நீண்ட நாளாக இருந்த ஆசைதான் அது. அங்கே ரம்யா என்ற பெண் டியூடர் சொல்லிக்கொடுத்து வந்தார். இருவரும் பேசிக்ஸ் ஆஃப் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்திருந்தார்கள். நேரம் சரியாக இருந்தது ஹரிதாவுக்கு . காலையிலும் மாலையிலும் விளையாட்டு அதோடு வாரக்கடைசியில் கம்ப்யூட்டர் கிளாஸ் . ஹரிதாவுக்கு நிற்க நேரம் இல்லை. ஹரிதாவின் பர்த்டேவுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருந்தது. அதை சிறப்பாக கொண்டாட ஆறுமுகமும், சௌமியாவும் முடிவு செய்திருந்தனர். ஹரிதா விளையாட்டு போட்டிகளில் தொடர்ந்து முன்னேற இளங்கோ ஊக்கமளித்து வந்தார். கம்ப்யூட்டர் டீச்சர் ரம்யா நல்ல சோசியல் டைப் என்பதால் இவர்கள் கேட்கும் சிறிய சிறிய சந்தேகங்களை கூட தீர்த்து வைத்தார். கூடிய சீக்கிரம் கவர்ன்மெண்ட் லேப்டாப் கிடைக்குமென்று மாணவ மாணவிகள் பேசிக்கொண்டர். இது எல்லோருக்கும் மகிழ்வளிக்க கூடியது என ஹரிதா சௌமியாவிடம் சொன்னாள். அப்புறம் நீ உலகத்தையே மறந்துவிடலாம் என சௌமியா சொன்னாள்.
பாடங்கள், கம்ப்யூட்டர், விளையாட்டு என ஹரிதா உலகம் விரிவடைந்தது. ஆனால் அவள் மனதளவில் இன்னும் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது, நாம் இப்போதுதான் இந்த உலகத்தின் பாதையில் கால் வைத்திருக்கிறோம் என்ற எண்ணமும் எழுந்தது. ஆறுமுகத்திடம் இது பற்றி சொன்ன போது இந்த வயதில் இதெல்லாம் சகஜம் நம் வாழ்க்கை எப்படி போகுமென்று யாருக்கு தெரியும். நாம் அதனையொட்டி அட்ஜஸ்ட் பண்ணி போக வேண்டும் என்றான். என்னை பார் நான் சைக்கிள் கூட இல்லாமல் சிரமப்பட்டேன் . நீ பார்த்து உதவி செய்யாவிட்டால் நான் தினமும் இன்னும் நடந்து கொண்டிருப்பேன். இதெல்லாம் நமக்கான ஒரு டைம் அந்த டையத்தை நாம் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றான். அவளுக்கு புரிந்தும் புரியாதமாதிரி இருந்தது. அன்று அவளுக்கு பிறந்த நாள். அவள் அப்பா அவளுக்கு சிறப்பு பரிசு வாங்கி தருவதாக சொல்லியிருந்தார். இவள் என்ன அது என்று கேட்டபோதும் அவர் சொல்லவில்லை. காலையில் அவள் எழுந்ததும் அந்த ரிங்டோன் அவள் அறையில் கெட்டது. புது ரிங்டோன் ஆக அது இருந்தது. அவள் அப்பா அவளுக்காக வாங்கிய புத்தம்புது ஃபோன் ரிங்க்டோன் தான் அது.
பள்ளிக்கூடத்தில் ஃபோன் பயன்படுத்த தடை இருந்தது. ஆனால் தெரியாமல் சில மாணவர்கள் வைத்திருந்தனர். இவள் போனை பள்ளிக்கு எடுத்து செல்லவில்லை. ஈமெயில் ஐ டி ஒன்றை உருவாக்கி கொடுத்தாள் கம்ப்யூட்டர் டீச்சர் ரம்யா. இவளுக்கு சந்தோஷம் . ஆறுமுகம், சௌமியாவுடன் வீட்டில் கேக் வெட்டி பர்த்டேவை கொண்டாடினாள் ஹரிதா. இவள் instagram மற்றும் பேஸ்புக் அக்கவுண்ட் ஓபன் பண்ணினாள். ஃபிரண்ட்ஸ் request தெரிந்த சிலருக்கு கொடுத்தாள். எதிர்பார்த்த அளவு response இல்லை. அதனால் அவள் வருத்தப்படவில்லை. ஹரிதாவின் போட்டோவை வைக்குமாறு சௌமியா சொன்னாள். அதெல்லாம் வேண்டாம் என ஹரிதா மறுத்துவிட்டாள் . ரஞ்சித், சிந்து, பிருந்தா டீச்சர் என ஓரளவு தெரிந்தவர்களுக்கே ஃப்ரெண்ட் request கொடுத்திருந்தாள் . ரஞ்சித் அக்சப்ட் பண்ணியிருந்தான். அவனுடைய நாடு வேறு நேரம் இங்கே வேறு நேரம் என்பதால் நடு இரவில்தான் அவனுடன் பேச முடியும். சீக்கிரமே சிந்துவும், பிருந்தாவும் இவளுடைய ஃப்ரெண்ட் request ஏற்றுக்கொண்டார்கள்.
ஆறுமுகத்திற்கு ஒரு செகண்ட் ஹேண்ட் ஃபோன் வாங்கி கொடுக்க சௌமியாவும், ஹரிதாவும் முடிவு செய்திருந்தனர். அவனிடம் சொன்னால் அவன் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பதால் இவர்களே முடிவு செய்து வாங்கினார்கள் . ஹரிதாவின் ஃபோன் நம்பர் தெரிந்தவர்களுக்கெல்லாம் கொடுத்தாள் . அவள் வாழ்க்கையையே அந்த ஃபோன் மாற்றியது. ஹரிதா போனுக்கு இன்டர்நெட் கனெக்ஷன் ஏற்பாடு செய்திருந்தார் ஹரிதா அப்பா . போனை கவனமாக பயன்படுத்த வேண்டும் என்று சொல்லியிருந்தார். ஹரிதாவும், சௌமியாவும் அந்த ஃபோன் ஆறுமுகத்திடம் கொடுத்த போது அவன் ரொம்ப சங்கடப்பட்டான். ஆனால் ரொம்ப நன்றி என்று சொன்னான். அவனுடைய நம்பர் என்று ஒன்று எல்லோரிடத்தும் இப்போது இருக்கும் அது அவசியமானது என்று ஹரிதா சொன்னாள். ரஞ்சித் உடன் நட்பாக பேசி வந்தாள் ஹரிதா. அவள் அப்படி பேசியதை சௌமியாவிடமும் சொன்னாள். அவன் என்னிடம் சரியாக பேசுவதில்லை என்றாள் சௌமியா. இதை கேட்ட ஹரிதா இதை ஏன் முன்னமே சொல்லவில்லை நானே அவனிடம் கேட்கிறேன் என்றாள். அதெல்லாம் வேண்டாம் இதெல்லாம் அவனுக்கு ஒரு பெரிய விஷயமே இல்லை. புரிகிறது சௌமியா. நான் அதையெல்லாம் கடந்து விட்டேன் என்றாள் சௌமியா.
மறுநாள் ரஞ்சித்துடன் சாட் செய்யும்போது சௌமியா பற்றி விசாரித்தாள் ஹரிதா அவள் possesive ஆக இருக்கிறாள் அவளைத்தவிர வேறு யாரிடமும் பேசக்கூடாது என நினைக்கிறாள் என்றான். இவள் அமைதியாய் இருந்தாள். அவன் எனக்கு உன்னை பிடித்திருக்கிறது ஹரிதா என்றான். இதெல்லாம் சௌமியாவுக்கு தெரியுமா தெரிந்தால் என்னை விட்டு விலகி விடுவாள் என்றாள் சௌமியா. நான் உண்மையைத்தான் சொல்கிறேன் உன்னை மாதிரி சௌமியா இல்லை என்றான். இவள் சாட் குளோஸ் செய்தாள். அவன் நம்பர் பிளாக் பண்ணிவிட்டாள் . இப்போதுதான் சமர் பற்றி நினைக்காமல் இருந்தாள் மறுபடி ரஞ்சித். ரஞ்சித் அப்படி சொன்னதில் எந்த உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் சௌமியா நிலை என்னவாக இருக்கும். சௌமியாவை பார்த்து விஷயத்தை சொன்னாள். அவன் உன்னை விரும்புவது எனக்கு முன்பே தெரியும் என்றாள். ஆனால் உன் மீது எனக்கு எந்த பொறாமையோ கோபமோ இல்லை. உனக்கு அவன் மீது விருப்பம் இருந்தால் நீ அவனிடம் பேசு எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை என்றாள். சே சே நான் அப்படிப்பட்டவள் இல்லை. எனக்கு உன்னுடைய நட்புதான் முக்கியம் என்றாள் ஹரிதா.
நாட்கள் வேகமாக ஓடின. அன்று மாணவ மாணவியருக்கு லேப்டாப் வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. உள்ளூர் எம் எல் ஏ வந்து விழாவில் கலந்து கொண்டு எல்லோருக்கும் லேப்டாப் கொடுத்தார். சௌமியா, ஆறுமுகம். ஹரிதா மூவரும் தங்களுடைய லேப்டாப்பை உற்சாகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆறுமுகம் லேப்டாப் ஆன் பண்ணி பார்த்தான். நன்றாகவே இருப்பதாக சொன்னான். ஹரிதா உற்சாகத்துடன் வீட்டுக்கு வந்து அம்மா, அப்பாவிடம் லேப்டாப் காட்டினாள் . அப்பா எப்பவும் போல இருந்தார். அம்மா அதை சாமியிடம் வைத்து பிறகு பயன்படுத்த கொடுத்தார். இவள் லேப்டாப் டிப்ஸ் சௌமியாவிடம் கேட்டாள் அவளும் சொல்லிக்கொடுத்தாள் . மியூசிக், வீடியோ என பல ஆப்ஷன்கள் அவளுக்கு இருந்தன. ஹரிதா அந்த லேப்டாப் இன்னும் பல ஆண்டுகளுக்கு தன்னுடன் பயணிக்க வேண்டும் என நினைத்தாள். ரஞ்சித்தை பிளாக்கில் இருந்து எடுக்க வேண்டுமென்று நினைத்தாள். ஆனால் அவன் கொஞ்சநாளில் நம்மை மறந்துவிடுவான் என்பதால் அப்படியே விட்டுவிட நினைத்தாள்.
சில மாணவர்கள் இவளுக்கு ஃப்ரெண்ட் request கொடுத்திருந்தார்கள். இப்போதைக்கு யாருடையதையும் ஏற்க வேண்டாம் அதே சமயம் நிரகாகரிக்கவும் வேண்டாம் என முடிவு செய்தாள். எல்லோரும் லேப்டாப் பற்றியே பேசிக்கொண்டிருந்தனர். ஹரிதாவிடம் பேசிய சில மாணவர்கள் தங்கள் ஃப்ரெண்ட் request அக்சப்ட் பண்ணுமாறு கேட்டுக்கொண்டனர். எப்படி எல்லாவற்றிலும் இவர்கள் பெண்களை தேடுகிறார்கள் என அலுத்துக்கொண்டாள் ஹரிதா. அவர்கள் நட்புக்காக தேடினால் ஓகே ஆனால் அவர்கள் இந்த வயதிலேயே சிலவற்றை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார்கள் என்றாள் சௌமியா. உனக்கு அப்படி ஆசையில்லையா ஹரிதா? என கேட்டாள் சௌமியா. நானே இப்போதுதான் சமரிடம் இருந்து விலகி இருக்கிறேன் என்னிடம் இப்படி ஒரு கேள்வியா என்றாள். ம் அதுவும் சரிதான் அவன் கூட இருந்திருந்தால் இந்நேரம் எந்நேரமும் சாட் செய்து கொண்டிருப்பான் என்று சௌமியா கூறினாள் . சிந்து பேசினாள். என்ன மேடம் எப்படி இருக்கிறீர்கள் என விசாரித்தாள் ஹரிதா. விவாகரத்து அப்ளை பண்ணியிருக்கிறோம் அவர் ஒரு வழியாக ஒத்துக்கொண்டு விட்டார் என்றாள். உன்னுடைய ஸ்டைல் எல்லாம் மாறிவிட்டதாக பசங்கள் சொன்னார்கள் உண்மையா என்றாள் சிந்து. அட நீங்க வேற மேடம் நான் நானாகத்தான் இருக்கிறேன் என்றாள்.
சிந்து சொன்னதில் ஒரு உண்மை இருக்கத்தான் செய்தது . நம்முடைய வேளையில் நாம் பிஸியாக இருக்கும்போது பார்க்கிறவர்கள் நம்முடைய நேரத்துக்காக காத்திருப்பது ஒரு வகையில் நல்லதுதான் என எண்ணிக்கொண்டாள் . பிருந்தா டீச்சர் ரொம்ப நாள் கழித்து ஆன்லைன் வந்தாள். என்ன மேடம் பயங்கர பிஸியா என்றாள் ஹரிதா. அப்படியில்லை அவர் பயங்கர சோம்பேறியாய் இருக்கிறார். நான் எல்லா வேலையும் அவருக்கும் சேர்த்து செய்ய வேண்டியிக்கிறது என்றாள். ம் நெருக்கமாக இருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள் என்றாள் ஹரிதா . வாயாடி அப்படி சொல்ல முடியாது நான் நினைத்ததை விட அவர் நல்லவர் என்றாள். சௌமியா மறுபடி ரஞ்சித் கூட பேசியதாக சொன்னாள். அவன் மன்னிப்பு கேட்டதாகவும் தான் அதைபற்றி அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை என்பதாக விளக்கினாள் . ஆறுமுகம் எப்போதாவது ஃபோன் பேசுவான். அவனுக்கு சந்தேகம் வந்தால் சௌமியாவுக்கோ இல்லை ஹரிதாவுக்கோ ஃபோன் பண்ணுவான். அவன் போனை அதிகம் பேச பயன்படுத்துவதில்லை . இது குறித்து சௌமியாவே அவனிடம் கேட்டுவிட்டாள் . எனக்கும் ஆசைகள் இருக்கிறது ஆனால் நேரம் கொஞ்சமா இருக்கிறது என்றான்.
அன்று கம்ப்யூட்டர் கிளாஸ் டீச்சர் வரவில்லை. எல்லோருக்கும் ஒரே கொண்டாட்டம் . இவள் சீக்கிரம் வீடு திரும்பி விட்டாள்.கொஞ்ச நேரம் டிவி பார்த்தாள். அப்பா இன்னும் ஆபீஸ் விட்டு வந்திருக்கவில்லை. அம்மா இவளுக்கு நூடுல்ஸ் போட்டு கொடுத்தாள். இவள் லேப்டாப் எடுத்து பார்த்தாள். எல்லோரும் இன்றைக்கு டீச்சர் வராததால் அதை பற்றியே பேசினார். இவளுக்கு பயமாய் இருந்தது. நாமளும் பார்த்தால் என்ன என்று தோன்றியது. அதெல்லாம் ரிஸ்க் என்று சௌமியா சொல்லியிருந்தாள் . ஆனால் அந்த வெப்சைட் அட்ரஸ் எல்லாம் ஒரு கூறிப்பாக ஹரிதாவிடம் கொடுத்தும் இருந்தாள். அதை எங்கே வைத்தோம் என்று ஹரிதா மறந்து விட்டாள். நல்ல வேளை இப்போதைக்கு நாம் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை . அப்படி என்னதான் இருக்கிறது இப்படி எல்லோரும் அந்த ஆபாச வெப்சைட் பற்றி பேசிக்கொள்கிறார்களே என்று சிந்தித்தாள் . நாளைக்கு சௌமியாவிடம் பேசிவிட்டு அதன் பிறகு முடிவு செய்வோம் என நினைத்தாள். காமம் அதன் ஒரு புள்ளி ஹரிதாவை தன் வசம் இழுக்க தொடங்கியிருந்தது.