harithavin pagal kanavukal in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | ஹரிதாவின் பகல் கனவுகள் part 15

Featured Books
Categories
Share

ஹரிதாவின் பகல் கனவுகள் part 15

 

கனவு 15
இளங்கோ சார் பள்ளியை விட்டு போன பிறகு ஹரிதாவுக்கு பெரிதாக விளையாட்டில் ஆர்வமில்லாமல் போய்விடுமோ என சௌமியாவும் ஆறுமுகமும் நினைத்தனர். ஆனால் நடந்த சம்பவத்தை கொஞ்சம் கொஞ்சமாக மறக்க தொடங்கியிருந்தாள் ஹரிதா. இப்போது நல்ல முன்னேற்றம் இருந்தது. அடுத்து என்ன செய்வது என்பதில் ஹரிதாவின் ஆர்வம் இருந்தது. எக்ஸாம்ஸ் எல்லாம் நல்லபடியாக எழுதி முடித்தாள். 20 நாள் போல கோடைவிடுமுறை விட்டிருந்தார்கள். சௌமியா அவளை தன்னோடு தஞ்சாவூர் வரும்படி அழைத்தாள் . சௌமியாவுடைய சித்தப்பா வீடு அங்கு இருந்தது அவளுடைய கசின் ஒருத்தி இன்ஜினியரிங் 3 ம் வருடம் படித்துக்கொண்டிருந்தாள். அவள் பெயர் கீர்த்தி.ஹரிதா அப்பா. அம்மா மறுப்பேதும் சொல்லவில்லை. ஆறுமுகம் லீவுக்காக சொந்த ஊருக்கு போயிருந்தான். அந்த கோடை விடுமுறையை நல்ல விதமாக அமைதியாக கழிக்க ஹரிதா விரும்பினாள். சௌமியாவும், ஹரிதாவும் டிரைன் மூலம் தஞ்சாவூர் சென்றடைந்தனர். சௌமியா கீர்த்தியையும் அவள் அப்பா , அம்மாவையும் அறிமுகப்படுத்தி வைத்தாள் . நீ நிம்மதியா ரெஸ்ட் எடுக்கலாம் இங்கே என்று கீர்த்தி அம்மா சொன்னாள். இவள் தாங்க்ஸ் ஆண்ட்டி என்றாள்.

தஞ்சாவூர் அரண்மனை, கோவில் போன்றவற்றை கீர்த்தி சுற்றிக்காட்டினாள். கீர்த்தி நல்ல உயரம். நல்ல சுறுசுறுப்பு. அவள் நல்ல படிப்பாளி என சௌமியா சொல்லியிருந்தாள். கீர்த்தி ஹரிதாவுடன் சகஜமாக பழகினாள் . தஞ்சாவூரில் 10 நாட்கள் தங்குவதாக பிளான் பண்ணியிருந்தார்கள் சௌமியாவும், ஹரிதாவும். கீர்த்தி வெளிப்படையாக சில விஷயங்களை சொன்னாள். தனக்கு காதல், கல்யாணம் மேல் நம்பிக்கை இல்லையென்றும் அது தானாக நடந்தால் நடக்கட்டும் தான் அதை தேடிப் போக விரும்பவில்லை என்றும் சொன்னாள். ஏன் அப்படி நினைக்கிறாய் கீர்த்தி என ஹரிதா கேட்டாள். இப்போதுள்ள சூழ்நிலையில் காதல் செயற்கையாக திணிக்கப்பட்டது போல தோற்றம் உள்ளது அது எனக்கு பிடிக்கவில்லை. மேலும் கல்யாணம் என்பது வெறும் சடங்கு என்பது என்னுடைய தனிப்பட்ட அபிப்ராயம் என்றாள். ஹரிதா இதை யோசித்து பார்த்தாள். அவள் தன்னை விட மூத்தவள் ஆன போதும் ரொம்பவே இந்த விஷயத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறாள் என்றே கருதினாள். தஞ்சாவூர் ஹரிதாவுக்கு ரொம்ப பிடித்து விட்டது. தான் இங்கேயே செட்டில் ஆக விரும்புவதாய் சௌமியாவிடம் சொன்னாள். அதற்கென்ன காலேஜ் படிப்பை இங்கேயே தொடர்ந்து படி என்று சௌமியா கூறினாள்.

ஒரு நாள் திருச்சி போய் வந்தார்கள். மலைக்கோட்டை, சமயபுரம், முக்கொம்பு , தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் போன்றவையும் பார்த்து வந்தார்கள்.இவள் தன்னுடைய போனில் நிறைய புகைப்படங்கள் எடுத்து இருந்தாள் . தன்னுடைய ஈமெயில் செக் பண்ணவேண்டும் என்று கீர்த்தியிடம் சொன்னாள் ஹரிதா. அவளுடைய சிஸ்டம் ஆன் பண்ணிக் கொடுத்தாள். ஈமெயில் பெரிதாக வந்திருக்கவில்லை. அதே சமயம் ஆறுமுத்திடம் பேசி ரொம்ப நாளாகிறது என்று தோன்றியது. அவன் உடனே ஃபோன் எடுக்கவில்லை கொஞ்ச நேரம் கழித்து கூப்பிட்டான். சௌமியா எப்படி இருக்கிறாள் என்றான். ம் உன் கவலை உனக்கு என்றாள் சிரித்தபடி. நான் தஞ்சாவூரில் சுற்றியபடி இருக்கிறேன் நீ என்ன செய்கிறாய் என்றாள். நான் விவசாய வேலைகளில் அப்பாவுக்கு உதவுகிறேன் என்றான். ம் அடிக்கடி ஃபோன் பண்ணு என்றாள். நிச்சயமாக என்றான் சௌமியாவை நலம் விசாரித்ததாக சொல்லு என்றும் சொன்னான். ம் சொல்கிறேன் என்றாள். கீர்த்தி ஏதும் தன்னிடம் மறைக்கிறாளா என்ற சந்தேகம் எழுந்தது ஹரிதாவுக்கு. சே சே அப்படிஎல்லாம் செய்யவேண்டிய அவசியம் அவளுக்கென்ன இருக்கிறது என்று அந்த எண்ணத்தை கைவிட்டாள் ஹரிதா.

அதே சமயம் அந்த கேள்வியை கேட்காமல் இருக்கவும் முடியவில்லை. கீர்த்தியிடமே கேட்டுவிட்டாள். உன் மனதில் எந்த விதமான ரகசிய ஆசையுமே இருக்காதா கீர்த்தி என்றாள் ஹரிதா. அவள் சிரித்தாள். நீ கேட்பது நியாயம்தான். நான் ஆண்களை சார்ந்திருப்பதை விரும்பவில்லை. நான் நானாக இருக்கவே விருப்பப்படுகிறேன். சில சமயம் அந்த விதமான ஆசை ஏற்படுவதுண்டு. அதே சமயம் அதன் விளைவுகளை நினைக்கும் போது அது காணாமல் போய்விடும் என்றாள். நீ ரொம்ப சிந்திக்கிறாய் ஹரிதா. நீ இப்போது அதெல்லாம் சிந்திக்க வேண்டாம் என்றாள் கீர்த்தி. இவளுக்கு அவள் கூடவே பேசிக்கொண்டிருக்க வேண்டும் போல தோன்றியது. சௌமியா ஏண்டி எப்போ பார்த்தாலும் ஏடாகூடமாக சிந்திக்கிறாய் என்றாள் ஹரிதாவிடம். அது என்னவோ எது நமக்கு தேவையில்லையோ அதன் மீதே நமது கவனம் போகுமென்று சொல்வார்களே அதைப்போலத்தான் என் மனமும் போகிறது என்றாள் ஹரிதா. சௌமியாவும், ஹரிதாவும் சினிமாவுக்கு சென்றிருந்தார்கள். கீரத்தி காலேஜ் போயிருந்தாள். ஹரிதாவுக்கு படம் பிடிக்கவில்லை . சௌமியா ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தாள். ஆறுமுகம் ஃபோன் பண்ணியிருந்தான். இவள் வெளியே வந்து பேசினாள். என்ன ஆறுமுகம் திடீர் என்று ஃபோன் பண்ணியிருக்கிறாய் என்றாள். நாளை நான் ஒரு வேலையாக தஞ்சாவூர் வருகிறேன் மீட் பண்ண முடியுமா என்றான். என்ன சௌமியாவை பார்க்காமல் இருக்க முடியவில்லையா என்றாள். அப்படி எல்லாம் இல்லை தஞ்சாவூரில் உறவினர் வீட்டில் சில பொருட்கள் கொடுத்து வர சொன்னார் அப்பா என்றான். சரி வா நான் சௌமியாவிடம் சொல்கிறேன். நாங்கள் இப்போது படம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். நீ வந்ததும் ஃபோன் பண்ணு என்றாள். சரி

சௌமியாவிடம் சொன்னபோது ஆறுமுகத்தை வெளியே எங்காவது மீட் பண்ணலாம் என்றாள்.கீர்த்தியிடம் ஆறுமுகம் பற்றி சொன்னாள் சௌமியா. அதான் உன்னுடைய ஒன் ஸைட் லவ்வரா என கிண்டல் செய்தாள். நானும் வருவேன் உங்க கூட அவனை பார்க்கணும் என்றாள் கீர்த்தி. சரி வா ஆனால் லவ் பற்றியெல்லாம் பேசாதே என்றாள் சௌமியா. ம் என்னவோ உங்களுக்குள் நடக்குது என கீர்த்தி சொன்னாள். ஆறுமுகம் அரண்மனை அருகே நிற்பதாக சொன்னான். இவர்கள் இரண்டு டூ வீலர் எடுத்துக்கொண்டு போயிருந்தார்கள். ஆறுமுகம் சௌமியா மீதே கண்ணாக இருந்தான். என்ன ஆறுமுகம் வாட் எ சர்ப்ரைஸ் என்றாள் சௌமியா. அவன் சாதாரண சட்டை போட்டிருந்த போதும் நீட் ஆக இருந்தான். ஹரிதா அவனிடம் பேசிக்கொண்டிருந்தாள். அவர்கள் மதியம் ஒரு ரெஸ்டாரெண்ட் சென்றனர். ஆறுமுகம் பிரியாணி ஓகே வா என்றாள் கீர்த்தி. எனக்கு எதுவானாலும் ஓகே என்றான். எனக்கு ஆறுமுகத்தை பிடித்துவிட்டது சோ இன்னொஸெண்ட் என்றாள் கீரத்தி. ஆறுமுகம் ஒரு பேஸ்கட்பால் பிளேயர் என்றாள் ஹரிதா. அதான் ஒரு லுக் தெரியுது என்றாள் கீரத்தி. பேசாம சாப்பிடு என்றாள் சௌமியா. சாப்பிட்டு முடித்ததும் சௌமியாவே பில் பே பண்ணினாள். அருகே இருந்த சிவகங்கை பார்க்கிற்கு சென்றார்கள். வெயிலுக்கு இதமாக இருந்தது.

என்ன ஆறுமுகம் சௌமியாவையே சைட் அடிச்சா எப்படி அப்புறம் இந்த லவ் எப்படி போகுது என்றாள் கீர்த்தி. கீர்த்தி ஆறுமுகம் இருவரும் சற்று தள்ளி நடந்து வந்து கொண்டிருந்தனர். சௌமியா சொன்னாளா என்று கேட்டான். எப்படி இந்த காதல் வந்தது அதுதான் எனக்கு தெரிந்து கொள்ள ஆசை என்றாள். அவளை நான் தினமும் பார்க்கிறேன் ஸ்கூலில். மற்ற யாரிடமும் இல்லாத கருணைத்தன்மை அவளிடம் இருக்கிறது. என்னைப்போன்ற சாதாரண பசங்களுக்கு அப்படி ஒரு ஒளியாக தெரிபவள்தான் சௌமியா என்றான். ம் மயக்கம் தான் இது . அவள் உன்னை நிராகரித்த போது நீ என்ன நினைத்தாய் என்றாள் கீர்த்தி.நான் என்னுடைய தகுதியை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன் என்றான். நல்ல விஷயமாக பேசுகிறாய் ஆறுமுகம். நான் உன்னை அவளுக்கு சிபாரிசு செய்கிறேன் என்றாள் கீர்த்தி. மாலை 4 மணிக்கு 4 பேரும் ஷாப்பிங் போனார்கள். கீர்த்தி அவளுக்கு என டிரஸ் எடுத்து கொண்டிருந்தாள். அது பெரிய ஷோ ரூம் ஆக இருந்தது. ஹரிதா ஆறுமுகத்துக்கு என ஒரு டீ ஷர்ட் எடுத்தாள். சௌமியா அதை ஆமோதித்தாள். ஆறுமுகம் இதெல்லாம் எதற்கு என்றான். பர்சனாலிட்டி டெவலப்மெண்ட்தான் என்றாள் கீர்த்தி. ஆறுமுகத்துக்கு சங்கடம் என்றாலும் ஹரிதாவின் அன்பை நிராகரிக்க அவன் விரும்பவில்லை.

மாலை 6 மணி போல நான் கிளம்புகிறேன் என்றான் ஆறுமுகம். அவனை நெருங்கி நின்றாள் கீர்த்தி. அவனை கட்டியணைத்து நீ நல்லவன் ஆறுமுகம் சௌமியா உனக்குததான் என்றாள். இதை எதிர்பாராத சௌமியா நீ வேற அவன் ஏற்கனவே கனவு கண்டு கொண்டு இருப்பவன். அவனிடம் இப்படி சொன்னால் நாளைக்கே பெண் கேட்க வந்துவிடுவான் என்றாள் . ஏன் வரட்டுமே அதற்கான எல்லா தகுதியும் ஆறுமுகத்திடம் இருக்கிறது என்றாள் கீரத்தி. ஆறுமுகம் விடை பெற்றுக்கொண்டான் . கீர்த்திக்கு அவனை அனுப்பவே இஷ்டம் இல்லை. எத்தனை பேர் இப்படி இருப்பார்கள் . காதலிக்க மறுத்தால் எவ்வளவு கேவலமாக நடந்து கொள்பவர்கள் இருக்கிறார்கள். ஆறுமுகம் இஸ் எ ட்ரூ ஜென்டில்மேன் என நினைத்துக்கொண்டாள். இன்னும் இரண்டு நாட்களில் ஊர் திரும்பவேண்டும் டிக்கெட் எல்லாம் போட்டாகி விட்டது.ஹரிதா அப்பா , அம்மாவிடம் பேசினாள். எல்லாம் ஸ்மூத் ஆக போய்க் கொண்டிருந்தது. ஹரிதாவுக்கு ஊருக்கு போகவே மனசில்லை . கீர்த்தி அவளுடைய பேச்சு, பழக்கவழக்கம் எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி ஆகியவை அவளை கட்டிப்போட்டு இருந்தன. அவளிடம் இன்னும் மனம் விட்டு பேச வேண்டும் போல இருந்தது.

ஒரு வழியாக எல்லோரிடமும் விடை பெற்றுக்கொண்டு ஊர் வந்து சேர்ந்தார்கள் சௌமியாவும், ஹரிதாவும்.ஹரிதா அம்மா இவளுக்கு சுற்றிப் போட்டாள். நீ இப்படியே இருந்தால் போதும் எங்களுக்கு என்றாள் ஹரிதா அம்மா. வந்ததும் சிறிது ஓய்வெடுத்துவிட்டு கீர்த்திக்கு ஃபோன் போட்டாள். என்ன சேஃப் ஆக போய் சேர்ந்துவிட்டாயா ஹரிதா என்றாள். ம் வந்து சேர்ந்துவிட்டோம். சௌமியாவிடம் இன்னும் பேசவில்லை. ஒரு வேலை செய்கிறாயா நான் இப்போது கொஞ்சம் பிஸி ஈவினிங் 8 மணி போல கூப்பிடுகிறாயா என்றாள். நிச்சயமாக என்றாள் ஹரிதா. அவள் நினைவே சந்தோஷமாக இருந்தது. ஆனால் அவள் கொள்கைகளில் எவ்வளவு தூரம் தாக்குப்பிடிப்பாள். அது நடைமுறைக்கு எவ்வளவு தூரம் ஒத்து வரும் என சிந்தித்தாள். மறுநாள் கம்ப்யூட்டர் கிளாஸில் சௌமியாவை சந்தித்தாள். கீர்த்தி ஒரு மாயை அதை நீ நினைவில் வைக்காதே என்றாள் சௌமியா. ம் நீ கூட அவளை அப்படி சொல்வது ஆச்சரியமாய் இருக்கிறது என்றாள் ஹரிதா. கிளாஸ் நன்றாக போனது . டீச்சர் ரம்யா கொஞ்ச நேரம் பெர்சனல் விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தார். இன்னமும் அவளுக்கு மாப்பிள்ளை அமையவில்லை என்று சொன்னார். உங்களுக்கு கூடவா என்றாள் ஹரிதா. எவ்வளவு அழகாக இருந்தாலும் வரதட்சணை கேட்காமல் யாரும் திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள் என்றாள் ரம்யா வேதனையுடன்.