harithavin pagal kanavukal in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | ஹரிதாவின் பகல் கனவுகள் part 19

Featured Books
Categories
Share

ஹரிதாவின் பகல் கனவுகள் part 19


கனவு 19

ரஞ்சித் பீச் வியூ ரிசார்ட் ஒன்றை புக் செய்திருந்தான். இது எல்லோருக்கும் மகிழ்ச்சியை அளித்தது. 11 மணி போல ஆசிரமம் போன்றவற்றை பார்வையிட்டார்கள். மதியம் 1 மணிக்கு ரிசார்ட் போனார்கள். அங்கே தங்க இரு ரூம்கள் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஒரு ரூமில் சௌமியா, கீர்த்தி, ஹரிதா எல்லோரும் தங்கியிருந்தனர். இன்னொரு ரூமில் ஆறுமுகமும், ரஞ்சித்தும் தங்கி இருந்தனர். பீச் ரிசார்ட்டில் மதிய சாப்பாடு அருமையாக இருந்தது. கடல் உணவு சிறப்பாக இருந்ததாக ஹரிதா சொன்னாள். மதியம் 3 மணி போல போட்டிங் சென்றார்கள். கீர்த்தி, ஆறுமுகம் இருவரும் ஒரு போட்டிலும் சௌமியா, ரஞ்சித் மற்றும் ஹரிதா மற்றொரு போட்டிலும் பயணித்தனர். ரம்யமான இயற்கை சூழலாக இருந்தது. மழை 4 மணிக்கு வந்துவிட்டது. லேசான மழைதான் பெய்தது என்றாலும் வெப்ப சூழ்நிலையை அது குளிர்விக்க போதுமானதாய் இருந்தது.சில்வர் பீச் சுற்றி பார்த்தார்கள்.மாலை 7 மணிக்கெல்லாம் அங்கிருந்து கிளம்பி ஊர் திரும்ப முடிவு செய்தார்கள். சௌமியா அதிகம் பேசவில்லை. கீர்த்தி அந்த ட்ரிப்பை மிகவும் ரசித்ததாக சொன்னாள். ஷார்ட் ட்ரிப் ஆக இருந்த போதும் நன்கு பிளான் பண்ணியிருந்ததாக ஹரிதா ரஞ்சித்தை பாராட்டினாள். ஆறுமுகம் எல்லோருக்கும் இந்த டூர் வாய்ப்பை வழங்கியதற்காக நன்றி சொன்னான்.இரவு 10 30 போல அவர்கள் ஊர் வந்து சேர்ந்தார்கள்.

ஹரிதா மறுநாள் லேட் ஆகத்தான் எழுந்தாள். மதியம் ஸ்கூல் போகிறேன் என்று சொல்லிவிட்டாள். அவள் அம்மா ஒன்றும் சொல்லவில்லை. எப்படிடி இருந்தது டூர் என்று கேட்டாள். நாமெல்லாம் ஒரு முறை சேர்ந்து போவோம் அவ்வளவு அழகாக இருந்தது என்றாள். புகைப்படங்களை அப்பா அம்மாவிடம் காட்டினாள். அங்கே கடலெல்லாம் ரொம்ப ஆழமா இருக்குமே என்றார் அப்பா. இவள் ஒன்றும் சொல்லவில்லை. மதியம்தான் சௌமியாவும் ஸ்கூலுக்கு வந்தாள்.ஆறுமுகம் காலையில் வந்து விட்டான். சௌமியா இவளோடு பீச்சில் மணல் வெளியில் விளையாண்டதை நினைவு கூர்ந்தாள். ஹரிதாவும் அதன் கடலின் பிரம்மாண்டத்தை அதன் செயல்பாடுகளை விவரித்த வண்ணம் இருந்தாள். ஆறுமுகம் நீ கீர்த்தி கூடத்தான் ரொம்ப நேரம் செலவழித்தாய் என சௌமியா அவனை சீண்டினாள் . அது அப்படியில்லை கீர்த்தியின் பெருந்தன்மை அது . அவளுக்கு இயற்கை மேல் அலாதி ஈடுபாடு அதைப்பற்றித்தான் பேசினோம் என்றான் ஆறுமுகம். வகுப்புகள் தொடர்ந்தன. நீண்ட நாட்களுக்கு மறக்க முடியாத ட்ரிப் என்று ஆறுமுகம் சொல்லிவந்தான்.

ஆறுமுகம் அப்பாவிற்கு உடம்பு சரியில்லை என்று ஃபோன் வந்தவுடன் உடனே புறப்பட்டான் ஆறுமுகம். ஆறுமுகத்தின் அப்பாவிற்கு சிறிய ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு ஹாஸ்பிடல் ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார் . ஆறுமுகம் தெரிந்தவர்களின் உதவியை நாடி அவரது உயிரை காப்பாற்றினான்.ஹாஸ்பிடல் செலவு அதிகம் ஆகிவிட்டது. ஹரிதா ஃபோன் பண்ணி பேசினாள். அவர் இப்போது நலமுடன் இருக்கிறார் என்றான் ஆறுமுகம். அவனுக்கு என்ன சொல்லி ஆறுதல் கூறுவதென்று ஹரிதாவுக்கு தெரியவில்லை. சௌமியாவும் ஒரு நாள் அவனிடம் எப்போது திரும்ப வருவாய் எனக் கேட்டாள். அடுத்த வாரம் வருவேன் என சொன்னான். ஹரிதாவும்,
சௌமியாவும் செய்வதறியாது தவித்தனர். இளங்கோ சாருக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னாள் ஹரிதா. நான் ஆறுமுகத்திடம் பேசுகிறேன் என்று சொன்னார். ஒரு வாரம் கழித்து ஆறுமுகம் திரும்ப ஸ்கூலுக்கு வந்த போது முற்றிலும் கவலை தோய்ந்த முகத்துடன் வந்திருந்தான். அவனுக்கு பண பிரச்சனை இருந்தது. அவன் பள்ளிப்படிப்பே ஹாஸ்டல் பீஸ் கட்டாததால் கேள்விக்குறியாய் இருந்தது. அவன் ஹரிதாவிடமும் , சௌமியாவிடமும் எதுவும் கேட்கவுமில்லை .. சொல்லவுமில்லை.

விஷயத்தை கேள்விப்பட்ட கீர்த்தி உடனடியாக ஆறுமுகத்துக்கு கொஞ்சம் பணம் போட்டு ஹாஸ்டல் பீஸ் கட்டும்படியாக சொன்னாள். அவன் கீர்த்திக்கு நன்றி சொன்னான். தற்காலிகமாக இந்த பண பிரச்சனை தேர்ந்த போதும் அவன் மனம் அவனுடைய அப்பாவை நினைத்து கவலையடைந்திருந்தது. சௌமியாவும், ஹரிதாவும் அவனுக்கு தைரியம் கூறினர். நாங்கள் எல்லோரும் இருக்கிறோம் நிச்சயம் உனக்கு உதவுவோம் என்று கூறினார்கள். அவன் நான் கீர்த்திக்கு என் வாழ்நாளெல்லாம் கடமைப்பட்டிருக்கிறேன் என்று மட்டும் கூறினான். அவனுடைய தைரியம், தன்னம்பிக்கை போன்றவை எங்கு போனது என்றே தெரியவில்லை. அவ்வப்போது வீட்டை தொடர்பு கொண்டு பேசிவந்தான் ஆறுமுகம். ரஞ்சித் லீவு முடிந்து வெளிநாடு செல்லும் வேளை வந்தது. ஹரிதாவை கூப்பிட்டு பேசினான்.நானும் சௌமியாவும் பிரிந்து விட்டதால் நான் அவளைப் பற்றி நினைக்காமல் இல்லை . நீதான் அவளை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றான். இப்போதைய சூழ்நிலையில் என்னால் ஆறுமுகத்துக்கு எந்த உதவியும் செய்ய முடியவில்லை என்பது எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது. இன்னும் இரண்டு வருட படிப்பு எனக்கிருக்கிறது. நான் அடுத்து எப்போ வருவேன் என்று சொல்ல முடியாத சூழ்நிலையில்தான் உன்னிடம் எல்லாம் சொல்கிறேன் என்றான். நான் எல்லோருடைய மகிழ்ச்சி நிறைந்த தருணங்களை ஒருபோதும் மறக்கமாட்டேன் என்றும் சொன்னான்.

சௌமியாவிடம் ரஞ்சித் சொன்னதாக மேற்படி விஷயங்களை சொன்னாள். அவன் அப்படித்தான் பொறுப்புகளில் இருந்து நழுவி விடுவான் என்று சௌமியா சொன்னாள். நீ ஏன் அப்படி நெகட்டிவ் ஆக நினைக்கிறாய் என்று ஹரிதா கேட்டாள். அவனை சிறு வயதில் இருந்தே எனக்கு தெரியும்.. பெரிய சுயநலக்காரன் அவன். என்னை அவன் இஷ்டத்துக்கு வளைக்க நினைத்தான். நான் அவனை விரும்பியது நிஜம் . ஆனால் என்னால் அவன் போக்குக்கு போக முடியவில்லை என்று சொன்னாள். நாம் வேறு ஏதாவது பேசுவோம் . ரஞ்சித் கதை முடிந்த கதை அத்தோடு நான் காதலில் இருந்தே விலகி இருக்க ஆசைப்படுகிறேன் என்றாள்.கீர்த்தி ஆறுமுகத்துக்கு ஃபோன் பண்ணினாள். அவனை பற்றி விசாரித்தாள். அவன் இப்படியே சோர்ந்து போய்விடக் கூடாது என்று சொன்னதாக ஆறுமுகம் சொன்னான். மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது நாம் தான் அதை பொருட்படுத்துவதில்லை என்பதை ஹரிதா உணர்ந்தாள் .
அவள் பெரும்பாலும் அப்பா அம்மாவை சார்ந்து இருந்தாள். ஆனால் ஆறுமுகம் நிலமை இப்போது சொல்லிக்கொள்ளும்படி இல்லை.ஹரிதாவும், சௌமியாவும் ஆறுமுகத்துடன் அவனது ஊருக்கு சென்று அவனது அப்பாவை பார்த்து வர முடிவு செய்தனர்.

கீர்த்தியும் அவர்களோடு ஆறுமுகம் அப்பாவை பார்க்க வருவதாக சொன்னாள் . ஆறுமுகம் நான் மட்டும் இப்போது போகிறேன். அங்குள்ள சூழ்நிலை பார்த்து உங்களுக்கு ஃபோன் பண்ணுகிறேன் என்றான். அதுவும் சரிதான் என மூவரும் ஆமோதித்தனர். கீர்த்தி ஹரிதாவிடம் பேசினாள்.பாவம் ஆறுமுகம் நாம் நிச்சயம் ஒரு நாள் ஆறுமுகத்தின் அப்பாவை பார்க்க செல்ல வேண்டும் என்று சொல்லியிருந்தாள். கீர்த்தி எப்படியோ ஆறுமுகத்துக்கு ஹாஸ்டல் பீஸ் கட்ட ஏற்பாடு பண்ணியிருந்தாள். அதைப்பற்றி சௌமியா ஏதும் கேட்டுக்கொள்ளவில்லை. இவர்களது குடும்பம் சராசரி குடும்பம். ஹரிதாவின் சூழ்நிலையும் அப்படித்தான்.இந்த வாரக்கடைசியில் ஆறுமுகம் ஊருக்கு போவதாய் சொல்லியிருந்தான். அவனை வழி அனுப்ப ஸ்டேஷன் போயிருந்தார்கள் ஹரிதாவும்,சௌமியாவும். அவன் முகம் அத்தனை பிரகாசமாயில்லை. நான் மறுபடி உங்களை எப்போது சந்திப்பேன் எனத் தெரியவில்லை என்று சொன்னான்.இளங்கோ சார் கொஞ்சம் பணம் போட்டுவிட்டதாகவும்,விசாரித்ததாகவும் சொன்னான்.ஹரிதாவும், சௌமியாவும் ஃபோன் பண்ணுமாறு கேட்டுக்கொண்டு விடை பெற்றுக்கொண்டனர்.

அந்த வாரம் வேகமாக ஓடியது. ஆறுமுகம் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருந்தது. இவர்களுக்கு கொஞ்சம் பதட்டமாய் இருந்த போதும் அவன் கீர்த்தியிடம் பேசினான் என அவள் சொன்னாள். அவன் பேசுகிற நிலையில் இல்லை என்று கீர்த்தி சொன்னாள். அவன் அப்பாவின் வயல் சம்பந்தமான வேலைகள் அப்படியே இருப்பதால் அதை பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கலாம் என கருதினார்கள்.சௌமியாவும், ஹரிதாவும் கோவிலுக்கு சென்று வார விரும்பினார்கள். கோவிலுக்கு சென்று மனதார ஆறுமுகம் அப்பா சீக்கிரம் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என வேண்டிக்கொண்டார்கள். ஆறுமுகத்துக்கு இருக்கும் பிரச்சனைகள் சரியாக வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்தார்கள். மீண்டும் அவன் பள்ளிக்கு திரும்ப வரும்போது அவனால் பள்ளிப்படிப்பை தொடர முடியாது என்ற சூழ்நிலையுடன் ஆறுமுகம் அவன் அம்மாவுடன் வந்திருந்தான். இதை கேள்விப்பட்ட ஹரிதாவும், சௌமியாவும் அதிர்ந்தனர். அவர்கள் அவனை தலைமைஆசிரியர் அறைக்கு வெளியே சந்தித்தனர். அவன் தலை கவிழ்ந்து வெளியே எங்கோ வெறித்து பார்த்தபடி இருந்தான். தலைமை ஆசிரியர் எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் அவனுடைய சூழ்நிலை இப்போதைக்கு டிசி வாங்கி கொண்டு போகத்தான் முடிகிற மாதிரிதான் இருந்தது.

ஹரிதாவுக்கு ஆறுமுகத்தின் நினைவலைகள் அலையலையாய் வந்தது. அவனை போன்ற ஒருத்தனை திரும்ப அவள் சந்திப்பாளா என்று யோசிக்க கூட முடியவில்லை. அவன் தன் பையை ஹாஸ்டல் போய் எடுத்துக்கொண்டு வந்திருந்தான். சௌமியா அவன் கைகளை பிடித்துக்கொண்டாள். நான் வேண்டுமென்றே இப்படி செய்யவில்லை . என்னுடைய சூழ்நிலை அப்படி என்றான். நீங்கள் எல்லோரும் எனக்காக செய்த உதவிகளுக்கு என்னுடைய நன்றி என்றான். அவனும் அவனுடைய அம்மாவும் ஆட்டோவில் எறினார்கள். ஆறுமுகத்தின் கண்கள் காலங்கியிருந்தன. சௌமியாவும், ஹரிதாவும் திகைத்து போயிருந்தார்கள். கீர்த்தி என்ன கஷ்டப்படுவாளோ என சௌமியா எண்ணிப்பார்த்தாள். ஆறுமுகம் விடைபெற்றுக்கொண்டான். அவனுடைய ஃபோனை சௌமியாவிடம் அவன் நினைவாக விட்டு சென்றிருந்தான். அதில் ரஞ்சித், சௌமியா, கீர்த்தி, ஆறுமுகம், ஹரிதா சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இருந்தது. ஹரிதா வீட்டுக்கு வந்து சோர்வாக அறைக் கதவை சாத்திக்கொண்டாள். அவளுடைய எண்ணங்கள் முற்றிலும் தடுமாறி போயிருந்தன.

ஆறுமுகம் பழைய படி ஸ்கூலுக்கு வருவான் என நினைத்து இருந்த ஹரிதாவுக்கு இது பேரிடியாக இருந்தது. கீரத்தி ஹரிதாவுக்கு ஃபோன் பண்ணி அழுதாள். என்னால் ஒன்றும் செய்யமுடியாமல் போயிற்றே என்று அழுதாள். ஹரிதா அவளை சமாதானப்படுத்த முயன்றாள். ஆனால் அவன் ஃபோன் கூட பேச முடியாத சூழ்நிலைக்கு போய்விட்டான் என கீர்த்தி கூறினாள். அன்று இரவு ஹரிதா எதுவும் சாப்பிடவில்லை. அவளுக்கு என்ன செய்வது என்று தோன்றவில்லை. நேற்று வரை நெருங்கிய உறவாய் இருந்தவன் பிரியும்போது அதன் வேதனை அவளால் தாங்க முடியவில்லை. அந்த சைக்கிள் இவள் வீட்டு வாசலில் கிடந்தது. சமர் ஆறுமுகத்துக்கு வாங்கி கொடுத்த சைக்கிள் . இனி யாருக்கும் பிரயோஜனப் பட போவதில்லை என நினைத்தாள்.