harithavin pagal kanavukal in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | ஹரிதாவின் பகல் கனவுகள் part 22

Featured Books
Categories
Share

ஹரிதாவின் பகல் கனவுகள் part 22

 கனவு 22
ஆறுமுகம் ஹரிதாவுக்கு ஃபோன் பண்ணியிருந்தான். அப்போது சௌமியாவும் உடன் இருந்தாள். என்ன ஹரிதா எப்படி இருக்கிறாய் ? சௌமியா எப்படி இருக்கிறாள் என விசாரித்தான். தான் நலமாக இருப்பதாக சொன்ன ஹரிதா நீ எப்படி இருக்கிறாய் நீ ஃபோன் பண்ணுவாய் என எதிர்பார்க்கவில்லை என்றாள். சௌமியாவிடம் பேசு என போனை சௌமியாவிடம் கொடுத்தாள். நாங்கள் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுகிறோம் என்று சௌமியா சொன்னாள். நான் அடுத்த வாரம் போல அந்த பக்கம் வருவேன்.. வந்தால் உங்கள் இருவரையும் பார்க்கிறேன் என்றான். சரி ஆறுமுகம் அப்பா இப்போது எப்படி இருக்கிறார் . அவர் சிறிது காலம் ஓய்வில் இருக்கட்டும் என்று டாக்டர் சொல்லிவிட்டார். முன்னைக்கு இப்போது பரவாயில்லை என்று சொன்னான். சரி எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது அப்புறமாய் கூப்பிடுகிறேன் என்றான். சரி ஆறுமுகம். நீ எதைப்பற்றியும் கவலைப்படாதே என்றாள் சௌமியா. அவன் போனை வைத்துவிட்டான்.

அடுத்த வாரம் போல வருவதாக சொல்லியிருக்கிறான் என்றாள் சௌமியா. நிச்சயம் அவனை சந்திக்க வேண்டும் என்றாள் ஹரிதா. அவனைப் பார்த்து 4 மாதங்கள் இருக்கும். இப்போது கூட யார் போனில் இருந்து கூப்பிட்டானோ என்று ஹரிதா நினைத்தாள். சௌமியா அவனைப் பற்றி அதிகம் பேசவில்லை. கீர்த்திக்கு ஆறுமுகம் வருவது தெரிந்தால் சந்தோஷப்படுவாள். அவளுக்கு ஃபோன் பண்ண வேண்டும் என ஹரிதா நினைத்துக் கொண்டாள். காலம் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. ஹரிதாவும், சௌமியாவும் அன்றாட படிப்பு, tution என பிஸி ஆக இருந்தார்கள். கீர்த்தி இரவு 10 மணி போல ஃபோன் பண்ணியிருந்தாள் ஹரிதாவுக்கு. சாரி ஹரிதா எனக்கு இப்போது தான் நேரம் கிடைத்தது என்று சொன்னாள்.ஹரிதா அதெல்லாம் பரவாயில்லை .. ஆறுமுகம் ஃபோன் பண்ணிய விஷயத்தை சொன்னாள். அவன் அடுத்த வாரம் போல இங்கு வருகிறேன் என சொன்னான் என்றாள் ஹரிதா. இதை கேட்கவே சந்தோஷமாய் இருக்கிறது என்றாள் கீர்த்தி. அவன் வந்தால் எனக்கு ஃபோன் பண்ணு என்றாள். அவனிடம் நிறைய பேச வேண்டும் என்றும் சொன்னாள். மறுபடி தியான மண்டபத்துக்கு போனாயா என கேட்டாள் கீர்த்தி. நானும் போக வேண்டுமென நினைக்கிறேன் நேரம் இல்லை என்றாள் ஹரிதா. சரி ஹரிதா நான் கொஞ்சம் படிக்க வேண்டியிருக்கிறது பிறகு கூப்பிடுகிறேன் என்றாள். சரி கீர்த்தி.

மாற்றங்கள் குறித்து யோசனை போனது ஹரிதாவுக்கு. கீர்த்தியிடம் அது குறித்து பேச வேண்டும். எல்லாமே உடனுக்குடன் மாறிப்போனால் அட்ஜஸ்ட் செய்து கொள்வது சிரமம் என்று தோன்றியது. விளையாட்டு டீச்சர் பிரேமா மாறிவிட்டாள். அவள் முன்பு போல இல்லை. பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்கிறாள். இந்த வருடத்திற்கு பிறகு பள்ளிக் காலம் முடிவடைந்து விடும். இந்த இறுதி பள்ளியாண்டு ஏற்கனவே பல பாடங்களை கற்றுத் தந்திருக்கிறது. என்னடி எப்போது பார்த்தாலும் யோசனை என்றாள் சௌமியா. எல்லாம் மாறிவிடும் என்பது எவ்வளவு உண்மை என்றாள் ஹரிதா. அதுக்கென்ன இப்போ ? என்ன ஒரு தத்துவம் . நாம் நினைத்தாலும் சுற்றி உள்ளதும் மாறிக்கொண்டே இருக்கிறது . ம்ஹூம் நீ இப்படியே யோசித்து கொண்டிரு காலம் போகிற வேகத்தில் உனக்கு மூன்று பிள்ளைகள் பிறக்கும் பாரு என்றாள் சௌமியா. இருவரும் சிரித்தார்கள். அவள் நினைப்பில் தவறு ஏதும் இல்லை உடல், மனம் பற்றிய சிந்தனை எப்போதும் ஹரிதாவிடத்தில் தோன்றிய வண்ணம் இருந்தது.

அடுத்த வாரம் சண்டே ஹரிதா வீட்டுக்கு காலை 11 மணி போல வந்து சேர்ந்தான் ஆறுமுகம். இவளுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. ஹரிதா அவனுக்கு டீ கொடுத்தாள். சாப்பிடுகிறாயா ஆறுமுகம் என்றாள். அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் . உன் படிப்பெல்லாம் எப்படி போகிறது என்றான். ம் அதுக்கென்ன அது பாட்டுக்கு என்னை இழுத்து செல்கிறது என்றாள். சௌமியாவுக்கு ஃபோன் பண்னேன் என்றான். இவள் ஃபோன் பண்ணி ஆறுமுகம் வந்திருக்கும் விஷயத்தை சொன்னாள். வீட்டுக்கு அழைத்து வா என்றாள். இவள் கிளம்பி அவனையும் அழைத்துக்கொண்டு சௌமியா வீட்டை அடைந்தாள். சௌமியாவை பார்த்ததும்தான் ஆறுமுகம் நிம்மதி அடைந்தாற்போல் தோன்றினான். ஏதாவது சாப்பிடுகிறாயா ஆறுமுகம் என்றாள் சௌமியா. இல்லை இப்போதுதான் ஹரிதா வீட்டில் டீ சாப்பிட்டேன் என்றான். ரஞ்சித் மறுபடி பேசினானா? எப்படி இருக்கிறான் என்று கேட்டான் ஆறுமுகம். அவன் இப்போதெல்லாம் என்னிடம் பேசுவதில்லை என்றாள் சௌமியா.

கீர்த்திக்கு ஃபோன் செய்து விஷயத்தை சொன்னாள் சௌமியா. அவள் ஆறுமுகத்திடம் அரைமணிநேரம் போல போனில் பேசினாள். சௌமியாவும்,ஹரிதாவும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்து கொண்டனர். ஆறுமுகம் சினிமாவுக்கு போவோமா என்றாள் ஹரிதா. அதற்கெல்லாம் எனக்கு நேரம் இல்லை என்றான். கீர்த்தி என்ன சொன்னாள் என கேட்டாள் சௌமியா. அவளுக்கு இப்போது நேரம் சரியாக இருப்பதாகவும் கூடிய சீக்கிரம் படிப்பு முடிந்து விடும் அப்புறம் எப்போ வேண்டுமானாலும் பேசுகிறேன் என்றாள் என்றான். ஆறுமுகத்தை தியான மண்டபத்துக்கு கூட்டி போவோமா என்றாள் ஹரிதா. அதெல்லாம் வேண்டாம் .. மணி 12 ஆக போகிறது . அம்மா வெளியில் போயிருக்கிறார்கள் . நான் ஏதாவது சமைக்கிறேன் என்றாள் சௌமியா. அதெல்லாம் வேண்டாம் என்றான் ஆறுமுகம். ஹரிதா வா கடைக்கு போகலாம் என்றாள் சௌமியா. நானும் வருகிறேன் என்றான் ஆறுமுகம். அது ஒரு சூப்பர் மார்க்கெட் ஆக இருந்தது. தேவையான எல்லாவற்றையும் வாங்கினார்கள். ஹரிதா திடீரென நல்லா யோசித்து விட்டாயா நீ சமைக்கத்தான் போகிறாயா என்றாள். நீ ஒன்றும் கவலைப்படாதே ஆறுமுகம் நான் உனக்கு சூப்பர் வெஜிடபுள் பிரியாணி செய்து தருகிறேன் என்றாள்.

சௌமியா சமைத்து முடிக்கும் போது மணி 1 30 ஆகி விட்டிருந்தது. ஹரிதா நீயும் சாப்பிடேன் என்றாள் சௌமியா. அம்மா ஏற்கனவே எனக்காக சமைத்து வைத்திருப்பார்கள் . நீயும் ஆறுமுகமும் சாப்பிடுங்கள் நான் பரிமாறுகிறேன் என்றாள் ஹரிதா. சௌமியா எப்படி இருக்கிறது பிரியாணி என்றாள். சூப்பர் நன்றாக இருக்கிறது என்றான். அவள் அவனுக்கு இன்னும் கொஞ்சம் போல வைத்தாள். அவன் சாப்பிட்டு முடித்தான். கொஞ்ச நேரம் இந்த சோபாவில் படுத்து தூங்கு என்றாள் சௌமியா. அதெல்லாம் வேண்டாம் நான் கிளம்புகிறேன் 3 மணிக்கு பஸ் இருக்கிறது அதை பிடிக்க வேண்டும் என்றான். நாங்களும் வருகிறோம் என்றனர் இருவரும்.பேருந்து நிலையத்தில் அதிக கூட்டமில்லை. வெயில் மண்டையை பிளந்தது. இவர்கள் சற்று ஒதுக்குபுறமாக இருந்த நிழல் குடையின் அருகில் நின்றார்கள். ஆறுமுகம் எதற்கு உங்களுக்கு வீண் சிரமம் என்றான். ஹரிதா போய் அரை லிட்டர் கூல் டிரிங்க்ஸ் பாட்டில் வாங்கி வந்து ஆறுமுகத்திடம் கொடுத்தாள். அவன் கொஞ்சம் குடித்துவிட்டு சௌமியாவிடம் கொடுததாள். பிறகு ஹரிதா கொஞ்சம் குடித்தாள் . எனக்கு என்னவோ உங்களையெல்லாம் பார்த்த பிறகுதான் வாழ்க்கையின் மீது பிடிப்பே வருகிறது என்றான்.உனக்கு ஏதாவது பணம் தேவையா ஆறுமுகம் என்றாள் சௌமியா. அதெல்லாம் நான் சமாளித்துக்கொள்வேன் என்றான்.

பஸ் வந்துவிட்டது. நிறைய பேர் இறங்கினார்கள். பஸ் 10 நிமிடத்தில் கிளம்பிவிடும் என்றான். இவர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் நின்றார்கள். அவன் கைசையைத்தான். பஸ் கிளம்பியது. ஃபோன் பண்ணுமாறு ஹரிதா ஜாடை காட்டினாள். சௌமியாவும்,ஹரிதாவும் வீடு திரும்போது மணி 4 ஆகியிருந்தது. ஹரிதா அப்போதுதான் சாப்பிட முடிந்தது. அவள் அம்மா ஒன்றும் சொல்லவில்லை. இவள்தான் ஆறுமுகம் வந்துபோனது குறித்து சொல்லிக்கொண்டிருந்தாள். தூக்கம் கண்ணை சொக்கியது. அவள் மறுபடி எழுந்த போது மணி 6 30 ஆகி விட்டிருந்தது.சண்டே என்பதால் அம்மாவும் அப்பாவும் வெளியே கடைத்தெரு போயிருந்தனர். இவள் போனை எடுத்துப்பார்த்தாள் . பிருந்தா டீச்சர் மெசேஜ் பண்ணியிருந்தார்கள். முகம் கழுவி விட்டு வந்து பிருந்தா டீச்சருக்கு போனை போட்டாள். என்ன மேடம் பயங்கர பிஸியா என்றாள் பிருந்தா. அதெல்லாம் இல்லை தூங்கிவிட்டேன் என்றாள் ஹரிதா. என்ன டீச்சர் ஏதேனும் ஸ்பெஷலா நீங்கள் சும்மா ஃபோன் பண்ண மாட்டீர்களே என்றாள் . ஆமாம் நான் மூன்றுமாதம் முழுகாமல் இருக்கிறேன் என்றாள். வாழ்த்துக்கள் டீச்சர். எனக்கு உங்களை பார்க்க வேண்டும் போல இருக்கிறது என்றாள் ஹரிதா. சிறிது நேரம் பேசிவிட்டு ஃபோன் வைத்தாள்.

புத்தகங்களை படிக்கலாம் என எடுத்தாள். 8 மணி போல அப்பா அம்மா வருவார்கள். படித்துக்கொண்டிருந்தாள். டீச்சர் வீட்டிலே விசேஷம். அடுத்த வாரத்துக்குள் அவர்களை ஒரு முறை பார்க்க வேண்டும் என எண்ணிக்கொண்டாள். அவளுக்கு டீச்சர் ஒரு நல்ல செய்தியை சொல்லியிருக்கிறார். அவருக்கு மிகவும் அந்தரங்கமான ஒரு செய்தியை இவளோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார். டீச்சரை பார்க்க போகையில் ஏதாவது பழங்கள் வாங்கி போகவேண்டும் வெறும் கையோடு போகக் கூடாது என்றும் நினைத்தாள். அப்பா அம்மா வந்துவிட்டார்கள். இவள் அவர்களுக்கு டீ சுட வைத்துக்கொடுத்தாள் .இவளுக்கு சில பிஸ்கட் பாக்கெட்களும் வாங்கி வந்திருந்தனர். சௌமியாவுக்கு ஃபோன் பண்ணினாள் . என்னடி பண்ணுகிறாய் என்றாள் ஹரிதா. டிவி தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆறுமுகம் பத்திரமாய் போய் சேர்ந்திருப்பானா என்றாள் ஹரிதா. அதெல்லாம் இந்நேரம் வீட்டுக்கு போய் தூங்கியும் இருப்பான் என்றாள் சௌமியா. எனக்கென்னவோ அவன் இன்னும் பிரச்சனைகளில் தான் இருப்பான் என்று தோன்றுகிறது என்றாள் சௌமியா. எனக்கும் அப்படித்தான் நினைக்க தோன்றுகிறது என்றாள் ஹரிதா.

சாயங்காலம் தூங்கி விட்டதால் இரவில் தூக்கமில்லை ஹரிதாவுக்கு. கண்களை மூடி தூங்க முயன்றாள். அவளுக்கு ஆறுமுகம் முகமே நினைவுக்கு வந்தது. அவன் சௌமியா வீட்டில் சாப்பிடும் போது அவன் முகத்தையே சௌமியா பார்த்துக்கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தாள். எப்படியோ அவனை நல்ல விதமாக வழியனுப்பி விட்டோம் என நினைத்தாள். மறுநாள் ஸ்கூல் போகும்போது சௌமியா சற்று லேட் ஆக வந்தாள் . என்னடி விஷயம் என்றாள் ஹரிதா. . அவள் கிளம்பும்போது ஆறுமுகம் ஃபோன் பண்ணினான். அவன் நல்லபடியாக ஊருக்கு போய்விட்டதாக சொன்னான். அதுதான் பேசிவிட்டு வர லேட் ஆகிவிட்டது என்றாள். ம் அவன் உனக்குத்தான் ஃபோன் பண்ணியிருக்கிறான் என்றாள் ஹரிதா. சே சே அவன் மனதில் இப்போதும் நான் இருப்பேனா என்பது சந்தேகம்தான் என்றாள் சௌமியா. அதெல்லாம் அவன் மறக்க மாட்டான். ஞாபகமாக கண்டிப்பாக தன் காதலை சொல்ல வருவான் என்றாள் ஹரிதா. ஏண்டி அவனே சிரமப்பட்டு கொண்டிருக்கிறான். நீ அவனை வைத்துக்கொண்டு இப்படியெல்லாம் பேசிவிடாதே என்றாள் சௌமியா. எல்லாம் மாயம் காதல் செய்யும் மாயம் என்றாள் ஹரிதா சிரித்துக்கொண்டே .