harithavin pagal kanavukal in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | ஹரிதாவின் பகல் கனவுகள் part 16

Featured Books
Categories
Share

ஹரிதாவின் பகல் கனவுகள் part 16

கனவு 16

சௌமியா ஃபோன் பண்ணியிருந்தாள். ரஞ்சித் ஒரு மாத விடுமுறையில் ஊருக்கு வருகிறானாம் என்றாள். அவள் ரொம்ப மகிழ்ச்சி அடையவில்லை எனவும் ஆனால் ஒரு மாற்றம் ஏற்படும் என்று நம்புவதாக சொன்னாள். ஸ்கூல் லீவு முடிந்து எல்லோரும் பள்ளிக்கு திரும்பினார்கள். அவர்களுக்கு லீவு பற்றிய கதைகள் பேச நிறைய இருந்தது. திரும்பவும் அதே வகுப்புகள், அதே டீச்சர் என்று போராக இருப்பதாக ஹரிதா சொன்னாள். அதெல்லாம் அப்படித்தான் . ஆறுமுகத்தை பார் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறான் என்றாள் சௌமியா. ம் அதுவும் சரிதான் அவன் பாடத்தை விட உன்னிடத்தில்தான் ஆர்வமாய் இருக்கிறான் என சொன்னாள் ஹரிதா. ஆறுமுகம் உற்சாகமாய் இருந்தான் அவனுக்கு விளையாட போக வேண்டும் எப்போதும் விளையாடிக்கொண்டே இருக்க வேண்டும் அதற்க்கு இந்த ஸ்கூல் படிப்பு அவசியம் என்று கருதினான்.

ரஞ்சித் ஊருக்கு வர இன்னும் ஒரு வாரம் இருந்தது. ரஞ்சித் வரும்போது கீர்த்தி வந்து அவனை பார்க்க வருவதாய் சொல்லியிருந்தாள். இதை கேட்ட ஹரிதா மகிழ்ச்சி அடைந்தாள். எல்லோரும் ஒன்று கூடினால் மகிழ்ச்சிக்கு கேட்கவா வேண்டும். கீர்த்தி , ரஞ்சித் இருவரையும் பார்க்க போகிறோம் என்ற நினைப்பே ஹரிதாவுக்கு சந்தோஷமாய் இருந்தது. அவளுக்கு அவர்களை சந்திக்க அவர்கள் கூட பேச நேரம் இருக்குமா என்று தெரியவில்லை. எப்படியாவது நேரம் ஒதுக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். எப்படியோ இந்த சமர் பற்றி யாரும் பேசுவதில்லை என்று நினைக்க தொடங்கும்போதே ஆறுமுகம் ஆரம்பித்துவிட்டான். என்ன ஹரிதா தனிமையிலே இனிமையா என்றான். ஏன் ஆறுமுகம் நான் சிங்கிளாக இருக்கக்கூடாதா அதென்ன அவ்வளவு பாவமா என்றாள். ம் கோபப்படாதே சாதாரணமாக கேட்டேன். உனக்கு பொருத்தமானவன் கிடைக்க வேண்டாமா அந்த கவலையில் சொன்னேன் என்றான். நான் ஒன்றும் தேடிப்போக மாட்டேன் அவனே என்னை தேடி வருவான் என்றாள். ஓவர் கான்ஃபிடன்ஸ் என்றான் ஆறுமுகம்.

ஆறுமுகம் சொன்னதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதைப்பற்றி இப்போது கவலைப்பட தேவையில்லை. துணை என்றதும் ரம்யா டீச்சர் வரதட்சணை பற்றி பேசியது நினைவுக்கு வந்தது. எப்படிப்பட்ட பேரழகியும் வரதட்சணை கொடுக்காமல் கல்யாணம் பண்ண முடியாது என்றல்லவா சொன்னார்கள். ம் என்ன கொடுமை இது.ரம்யா டீச்சர் லவ் மேரேஜ் பண்ண வேண்டும் அதை பார்த்து மற்றவர்கள் பொறாமை பட வேண்டும் என எண்ணினாள். பழையபடி பிரேமா இவளுக்கு கோச்சிங் ஆரம்பித்து விட்டாள். விட்ட இடத்தில் இருந்து தொடங்குவது சிரமமாக இருந்த போதும் ஒரு வாரத்தில் பிக்அப் செய்து கொண்டுவிட்டாள் . பிரேமா ஹரிதாவிடத்தில் சகஜமாக பழக முயன்றாள். இவள் விலகி போனாள். பிரேமா கேட்டே விட்டாள். என்ன ஹரிதா நான் சாதாரணமாக பேசினால் கூட என்னிடம் பேச மாட்டேன் என்கிறாயே என்றாள். நீங்கள் டீச்சர் நான் ஸ்டூடண்ட். அதற்கு மேல் என்ன இருக்கிறது ?சரி உன் விருப்பம் என்று பிரேமா டீச்சர் சொல்லிவிட்டு போய்விட்டாள்.

ரஞ்சித் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்து விட்டான். சௌமியா சொன்னாள். இங்கு டைம் செட் ஆக இரண்டு நாள் ஆகும் அதன் பிறகு வந்து அவனை பார்க்கலாம் என்றும் சொன்னாள். இவள் கீர்த்தி எப்போது வருகிறாள் என்று கேட்டாள் இந்த வார கடைசியில் வருவாள் என்றாள் சௌமியா . ஆறுமுகத்திடம் முன்பே சௌமியா சொல்லி வைத்து விட்டாள். நீ சண்டே காலையில் எங்கள் வீட்டுக்கு வந்து விட வேண்டும் . கீரத்தி உன்னை பார்க்க வேண்டும் என்று சொன்னாள். என்னை எதற்காக கீர்த்தி பார்க்க வேண்டும் என யோசித்தான் ஆறுமுகம். நான் சண்டே கட்டாயம் வருகிறேன் என்றான். ரஞ்சித் ஹரிதாவுக்கு ஃபோன் பண்ணியிருந்தான். நான் உன்னை பார்க்க வேண்டுமே என்றான். நீ ரெஸ்ட் எடு ரஞ்சித் நாளை நானே வந்து உன்னை பார்க்கிறேன் என்றாள் ஹரிதா. ம் ரெஸ்ட் எல்லாம் எடுத்தாச்சு. நீ நாளை கட்டாயம் வா என்றான். ஓகே பை என்றாள். சண்டே மதியம் போல கீர்த்தி வந்தாள். ஆறுமுகத்தைத்தான் முதலில் விசாரித்தாள். அவன் ஹரிதாவோடு மாடியில் இருக்கிறான் என்றாள் சௌமியா.

மாடிக்கு போய் பார்த்த போது ரஞ்சித், ஹரிதா, ஆறுமுகம் மூவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். இவளை பார்த்ததும் ரஞ்சித் கட்டிக்கொண்டான். இவள் என்னுடைய பெஸ்ட் ஃப்ரெண்ட் என்றான். ஆறுமுகம் எப்படி இருக்கிறாய் என்றாள் கீர்த்தி. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் நான் நன்றாய் இருக்கிறேன் என்றான். ஹரிதாவையும் விசாரித்தாள். எல்லோருக்கும் ஸ்நாக்ஸ் , ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தாள் சௌமியா. அங்கு உற்சாகம் கரை புரண்டது. எங்காவது காரில் லாங் ட்ரிப் போகலாமா என்றாள் கீர்த்தி. நீங்கள் போய் வாருங்கள் என்றான் ஆறுமுகம் ஹாஸ்டல் பர்மிஷன் கொடுக்க மாட்டார்கள் என்றான். நான் பேசுகிறேன் உன் வார்டனிடம் என்றான் ரஞ்சித். வார்டன் ஃபோன் நம்பர் வாங்கி பேசினான். அவர் ஒத்துக்கொண்டு விட்டார் . பிறகென்ன நாம் வேளாங்கண்ணி போவோம் அது நல்ல இடம் என்றாள் கீர்த்தி. சீக்கிரம் போய்விட்டு இரவுக்குள் திரும்பலாம் என்றாள் சௌமியா. எல்லோரும் புறப்பட தயாராயினர்.

கீர்த்திக்கு டிரைவிங் தெரியும் ஆனால் தாறுமாறாகத்தான் ஓட்டுவாள் என்றான் ரஞ்சித். அப்புறம் என்ன நீயே ஆமை வேகத்தில் ஓட்டு என்றாள் கீர்த்தி. ஆறுமுகம் முன்பக்க இருக்கையில் அமர்ந்து கொண்டான். மூன்று பெண்களும் பின்பக்க இருக்கையில் அமர்ந்து கொண்டனர். என்ன ஹரிதா நெர்வஸ் ஆக இருக்கிறாய் போல என்றாள் சௌமியா. நான் இந்த ட்ரிப் எதிர்பார்க்கவில்லை என்றாள். கார் ஏ சி யை போட்டதும் ஆறுமுகம் தூங்க தொடங்கினான். இவன் எப்போ பார்த்தாலும், தியேட்டர் ஏ சி போட்டாலும் தூங்கி விடுவான் என்றாள் ஹரிதா. பாவம் தூங்கட்டும் என்றாள் கீர்த்தி. 4 மணிக்கெல்லாம் வேளாங்கண்ணி போய்விட்டார்கள். எல்லோரும் உற்சாகமாக கடலில் இறங்கி விளையாட தொடங்கினார்கள். ஆறுமுகமும், கீர்த்தியும் கரையிலே நின்று பேசிக்கொண்டிருந்தார்கள் . என்ன ஆறுமுகம் உனக்கு நீச்சல் தெரியும் என்று ஹரிதா சொன்னாள். நீ என்னடாவென்றால் கரையிலே நின்று கொண்டு இருக்கிறாய் என்றாள். எனக்கு குளத்து நீச்சல்தான் தெரியும் இது கடல் அல்லவா. அடடா தத்துவத்தை பொழிகிறாயே வா என்று அவன் கையை பிடித்து இழுத்துக்கொண்டு போனாள். எனக்கு கடல் என்றால் கொள்ளை ஆசை ஆனால் பயம் என்றாள் கீர்த்தி, இருவரும் சிறிது தூரம் அலை முழங்காலை நனைக்கும் தூரம் வரை போனார்கள்.

ஹரிதாவும் , சௌமியாவும் ரொம்ப நேரம் கடல் அலையில் விளையாடினார்கள். ரஞ்சித் போதும் சௌமியா ரொம்ப நேரம் ஆகிவிட்டது என்றான். அவன் புகைப்படங்கள் எடுக்க தவறவில்லை. பிறகு கோவிலுக்கு போனார்கள் . சாமி தரிசனம் செய்தார்கள். கிளிஞ்சல் மாலை போன்றவற்றை ஹரிதா, சௌமியா, கீர்த்தி ஆகியோர் வாங்கினர். அங்கேயே ஒரு ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டார்கள் . ஆறுமுகம் திரும்ப வரும் போது தூங்கவில்லை. அவனை ஹாஸ்டல் அருகே இறக்கி விட்டான் ரஞ்சித். ரொம்ப தாங்க்ஸ் என்றான் ஆறுமுகம். என்னால் இந்த ட்ரிப் மறக்கவே முடியாது என்றான். கீர்த்தி அவனை பார்த்து ஃபோன் பண்ணுமாறு சைகை செய்து கையசைத்தாள் அவனும் தலையாட்டினான். ஹரிதா 11 மணி போல வீடு வந்து சேர்ந்தாள். ரஞ்சித் புகைப்படங்களை அனுப்பியிருந்தான். இவள் சௌமியா, ஆறுமுகம், கீர்த்தி,ரஞ்சித் எல்லோரும் சேர்ந்து எடுத்த செல்பி நன்றாக வந்திருந்தது. இவள் நன்கு நனைந்து விட்டிருந்தாள் பின்னால் கடல் அலைகள் இருந்தன புகைப்படத்தில்.

ஆறுமுகம் ஃபோன் பண்ணியிருந்தான். என்ன ஹரிதா தூங்கி விட்டாயா என்றான். இல்லை சொல்லு என்ன இந்நேரத்துக்கு ஃபோன் பண்ணியிருக்கிறாய் ? அதில்லை என்னவோ உனக்குத்தான் நான் தாங்க்ஸ் சொல்ல வேண்டும் போல தோன்றியது என்றான். இதெல்லாம் எதுக்கு ? நிம்மதியாய் தூங்கு நாளை வகுப்பில் வந்து தூங்காதே என்றாள். ம் குட் நைட் என்றான். ஓகே பை என்று இவள் சொன்னாள். அவனுக்கு உண்மையில் சந்தோஷம் என்றால் தனக்கும் அதில் சந்தோஷம்தான் என எண்ணினாள். கீர்த்தி ஊருக்கு கிளம்பும் முன் ஹரிதாவுக்கு ஃபோன் பண்ணினாள் . நாம் மீண்டும் சந்திப்போம் என்றாள். இந்த முறை உன்னிடம் அதிகம் பேச முடியவில்லை அடுத்த முறை நிச்சயம் பேசுகிறேன் என்றாள்.இவளுக்கு போனை வைக்கவே மனசில்லை . பை கீர்த்தி என்று மட்டும் சொன்னாள். சௌமியா ரஞ்சித் கூட ஷாப்பிங் பண்ண வெளியில் வந்திருப்பதாய் சொன்னாள்.

இவள் இவளது தனிமை பற்றி பலமுறை யோசித்தும் பலனில்லை. தான் அதிலேயே மூழ்கி கிடப்பதாக அவளுக்கு தோன்றிற்று. தானும் யாரையாவது அழைத்துக்கொண்டு ஷாப்பிங் போகலாம்தான். ஆனால் செயற்கையாக இருக்கும் என்று நினைத்தாள். ரஞ்சித் இவளுக்காக ஒரு டிரஸ் வாங்கியிருந்தான். உண்மையில் அது அழகாய் இருந்தது. இவளுக்கு பிடித்திருந்தது. ஆனால் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. என்ன ஹரிதா உனக்கு பிடிக்கவில்லையா என்றான். என்ன அப்படி சொல்கிறாய் ரஞ்சித். பிடித்திருக்கிறது என்றாள். நானும் சௌமியாவும் சேர்ந்து உனக்காக எடுத்தோம் என்றான். இவள் தாங்க்ஸ் என்றாள். இவள் ஆறுமுகத்துக்காக ஏதாவது சௌமியா எடுத்தாளா என கேட்க நினைத்தாள். பிறகு சௌமியா ஏதாவது நினைத்துக் கொள்வாள் என அந்த எண்ணத்தைக் கை விட்டாள்.

அம்மாவிடம் புது உடையயை சௌமியா வாங்கி கொடுத்தாள் என காட்டினாள். அம்மா இது உனக்கு பொருத்தமாக இருக்கும் என்றாள். தாங்க்ஸ் அம்மா என்றாள் ஹரிதா.ஹரிதா மனதில் சௌமியா, ரஞ்சித் ஆகியோர் நட்பில் அன்புடன் மரியாதையும் சேர்ந்தது. பதிலுக்கு நாமும் ரஞ்சித்துக்கு ஏதாவது வாங்கி தர வேண்டும் என்று தோன்றியது. அந்த வார கடைசியில்தான் ரஞ்சித்தை சந்திக்க முடிந்தது. ஆறுமுகம் விளையாட்டு போட்டிகளில் பிஸி ஆக இருந்தான். இவள் சௌமியாவிடம் விஷயத்தை சொன்னாள். ரஞ்சித்தும் ஹரிதாவும் ஷாப்பிங் போக கிளம்பினர். சௌமியா தனக்கு கொஞ்சம் வேலை இருப்பதாக சொன்னாள். இவர்கள் கடை கடையாய் ஏறி இறங்கியும் ரஞ்சித்துக்கு பிடித்த மாதிரி உடை தேர்ந்தெடுக்க முடியவில்லை. அவள் ஆன்லைன் மூலம் வாங்கி தருவதாக சொல்லி வீட்டுக்கு வந்தாள். அவளுடைய அதிர்ஷ்டத்தை எண்ணி வருத்தப்பட்டாள். பாவம் எவ்வளவு ஆசையாக அவன் தன் கூட வந்தான் என நினைத்தாள் .

ஆன்லைன் மூலம் அவன் அளவுக்கு தேடிய அதே டிரஸ் கிடைத்து விட்டது. இவளுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. ஆர்டர் போட்டு விட்டாள். இன்னும் இரண்டு நாட்களில் டெலிவரி செய்து விடுவதாக சொல்லியிருக்கிறார்கள். இவள் ரஞ்சித்துக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னாள். நான் உன்னிடம் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என ரஞ்சித் சொன்னான்.