harithavin pagal kanavukal in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | ஹரிதாவின் பகல் கனவுகள் part 17

Featured Books
Categories
Share

ஹரிதாவின் பகல் கனவுகள் part 17


கனவு 17

ரஞ்சித் அவளை நேரில் சந்திப்பதாக சொல்லியிருந்தான். என்ன அப்படி முக்கியமான விஷயமாக இருக்கும் என்று ஹரிதாவிற்கு புரியவில்லை. அவள் ஸ்கூல் முடிந்தவுடன் அவனை சந்தித்தாள். என்ன ஆச்சு ரஞ்சித் என்ன விஷயம் என்றாள் . நான் நேரிடையாகவே விஷயத்துக்கு வருகிறேன் நான் சௌமியாவுடன் பிரேக்அப் செய்து கொள்ளலாம் என இருக்கிறேன் என்றான். எதற்காக இந்த அவசர முடிவு என்றாள் ஹரிதா. எல்லாம் யோசித்து எடுத்த முடிவுதான் . நீதான் அவளிடம் பக்குவமாக எடுத்து சொல்ல வேண்டும் என்றான். நான் எப்படி ? அதெல்லாம் உன்னால் முடியும் . அவள் எதற்கும் ஒத்து வர மாட்டாள் அதனால் தான் நான் உன்னிடம் சொல்கிறேன் என்றான். சரி நான் அவளிடம் சொல்கிறேன். தாங்க்ஸ் என்றான். அவள் விடைபெற்றுக்கொண்டாள்.என்ன ஆச்சு ரஞ்சித்துக்கு நல்லாத்தானே பழகினான் சௌமியாவோடு .. அவன் என்னதான் எதிர்பார்க்கிறான் சௌமியாவிடம் என யோசித்தாள் ஹரிதா. இதை எப்படி சௌமியாவிடம் சொல்வது என்று கவலையாக போய்விட்டது. சொல்லித்தான் ஆக வேண்டும் என்று முடிவு செய்து சௌமியா கம்ப்யூட்டர் கிளாஸ் வரும் போது சொல்லிவிடலாம் என நினைத்தாள்.

என்னடி ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய் என சௌமியா கேட்டாள். அதெல்லாம் ஒன்றுமில்லை உன்னிடம் ஒன்று சொல்லவேண்டும் நீ தப்பாய் நினைக்க மாட்டாயே என்றாள். அதெல்லாம் ஒன்றும் நினைக்க மாட்டேன் நீ முதலில் விஷயத்தை சொல்லு .. நம்ம ரஞ்சித் இருக்கானில்லையா ?அவனுக்கென்ன அவன் உன்னோடு பிரேக்அப் செய்து கொள்ள விரும்புகிறானாம் என்றாள். இதை நான் எதிர்பார்த்தேன் என்று சௌமியா கூறினாள். அதை உன் மூலமாக கூற வேண்டிய அவசியம் என்ன என்று கேட்டாள். அதுதான் எனக்கும் தெரியவில்லை. நீ அவனோடு சண்டை எல்லாம் போடாதே என்றாள் ஹரிதா. சே சே அவனோடு நான் நல்ல முறையில் பழகினேன் ஆனால் அவனுக்கு அது பிடிக்கவில்லையென்றால் அதில் என் தவறு என்ன இருக்க முடியும் என்றாள்.எல்லாம் முடிந்துவிட்டது . சௌமியா வெளியே காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் உள்ளுக்குள் வருத்தம் இருந்தது.ஹரிதா அவர்கள் இருவரை பற்றியும் நல்ல அபிப்ராயமே கொண்டிருந்தாள். இவளுக்குத்தான் தர்மசங்கடம் என்கிற நிலை ஏற்பட்டது. கீர்த்தி ஆறுமுகத்துக்கு ஃபோன் செய்தாள். என்ன ஆறுமுகம் ஃபோன் பண்ண சொன்னேனே என்றாள் . உங்களுக்கு எக்ஸாம் என்று சொன்னார்கள் அதுதான் நான் ஃபோன் பண்ணவில்லை. ம் அடுத்த வாரம்தான் எக்ஸாம். நீ எப்படி இருக்கிறாய் ஆறுமுகம். எனக்கென்ன ஹாஸ்டல் சாப்பாடு அதோடு நல்ல நண்பர்கள் அவ்வளவுதான் என்றான்.ஏதோ சொல்ல நினைத்தேன் அத்தோடு மறந்துவிட்டேன் என்றாள். எப்போது வேண்டுமானாலும் கூப்பிடுங்கள் என்றான். சரி ஆறுமுகம் நான் பிறகு பேசுகிறேன்... என்னை கீர்த்தி என்றே கூப்பிடு என்று சொன்னாள்.

சௌமியா விஷயத்தை ஆறுமுகத்திடம் சொன்னாள் ஹரிதா. அதுதான் அவள் சோகமாக இருக்கிறாளா .. நீ சொன்னதும்தான் எனக்கு புரிகிறது என்றான். நீ ஏதாவது அவள் மனம் நோகும்படி பேசிவிடாதே என்றாள் .நான் ஏன் அவ்வாறு பேசப்போகிறேன் . எனக்கும் அவர்கள் பிரேக்அப் செய்து கொண்டதில் வருத்தம் தான் என்றான். ஆறுமுகம் உள்ளுக்குள் சந்தோஷப்படுபவன் அல்ல என்று ஹரிதாவுக்கு தெரியும் . அவன் வெளிப்படையானவன். கீர்த்தி ஃபோன் பண்ணியதாக ஹரிதாவிடம் சொன்னான். சும்மாதான் ஃபோன் பண்ணினார்கள். கீரத்தி நன்றாக பழகுகிறார்கள் என்றான் .சௌமியா ஹரிதாவிடம் ரஞ்சித் என்னிடம் பேசி இரண்டு நாட்கள் ஆகிறது என்றாள்.அவன் ஏதாவது வேலையாய் இருந்திருப்பான் இதை ஒரு பெரிய விஷயமாக கருதாதே .. அப்படியில்லை இது ஒரு நீண்ட பிரிவுக்கான துவக்கம் போல தெரிகிறது என்றாள் சௌமியா. எல்லாம் சரியாகிவிடும் நீ நினைப்பது போல அவனால் அப்படி எல்லாம் உன்னை உதறி விட முடியாது என்றாள் ஹரிதா.

ஹரிதா கீர்த்திக்கு ஃபோன் பண்ணினாள். அவளே சௌமியாவும் ரஞ்சித்தும் பிரேக் அப் பண்ணிவிட்டார்கள் போல என்றாள். இதில் உனக்கு வருத்தமில்லையா கீர்த்தி என்றாள் ஹரிதா. இதெல்லாம் நான் 8 ம் கிளாஸ் முடிக்கும் போதே பார்த்துவிட்டேன்.எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கையில்லை.நான் உன்னிடம் சொல்ல வந்தது நீதான் சௌமியாவுக்கு நம்பிக்கை தர வேண்டும் அவள் இது போன்ற சின்ன சின்ன காரணங்களுக்காக சோர்ந்து போக கூடாது என சொல்ல வேண்டும் . நான் சொன்னால் அவள் என்னை புரிந்து கொள்ள மாட்டாள். ம் நீ எப்படி இருக்கிறாய் உன்னுடைய குழப்பங்கள் இன்னும் நீடிக்கிறதா என்று கேட்டாள். அதெல்லாம் இப்போதில்லை. மாறாக நான் யார் ?இந்த சமுதாயத்தில் எந்த வித பிணைப்பும் இல்லாத நான் யார் என்ற கேள்வியே என்னிடத்தில் உள்ளது என்றாள் ஹரிதா.கீர்த்தி சிரித்தாள். இதெல்லாம் ஒரு வகையில் சுயவிமர்சனம்தான் வயதாக வயதாக எல்லாம் மறைந்துவிடும் என்றாள். ம் நீ எப்போதும் அப்படித்தான் எல்லாவற்றையும் கடந்து போய்விடுகிறாய் கீர்த்தி. சரி நேரமாகிறது பிறகு கூப்பிடுகிறேன் என்றாள் கீர்த்தி.

சௌமியா வீட்டில் எல்லோரும் குலதெய்வம் கோவிலுக்கு போகிறார்கள். நீயும் வாயேன் என ஹரிதாவை கூப்பிட்டாள் சௌமியா. நானெல்லாம் அப்படி வரலாமா என்று கேட்டாள். அதெல்லாம் ஒன்றுமில்லை நீ வா என்றாள். கீர்த்தி வருகிறாளா என்று கேட்டாள் ஹரிதா. அவளுக்கு எக்ஸாம்ஸ் இருக்கிறதாம் . ரஞ்சித் வருகிறான். அவனை எப்படி எதிர்கொள்வது என்றே எனக்கு தெரியவில்லை என்றாள் சௌமியா. ஹரிதா நான் உன் கூட கோவிலுக்கு வருகிறேன் என்றாள் . கோவில் பிரம்மாண்டமாக இருந்தது. ஆங்காங்கே புதுப்பிக்கும் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. ஹரிதாவும் அவர்களோடு பயபக்தியோடு சாமி கும்பிட்டாள். அந்த கோவில் மிகவும் சக்திவாய்ந்த அம்மன் கோவில் என்றாள் சௌமியா அம்மா. ரஞ்சித் ஹரிதாவிடம் பேசிக்கொண்டிருந்தான். நான் என்னவெல்லாம் நினைத்தேனோ அதற்கு தலைகீழாக நடக்கிறது என்றான். அவன்தான் கார் ஓட்டி வந்தான். சில சமயம் நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கிறது என்றாள் சௌமியா. மதியம் எல்லோருக்கும் சாப்பாடு போட்டார்கள். வழக்கமாக இருக்கும் உற்சாகம் நிரம்பிய சௌமியா ஏதும் பேசாமல் இப்படி இருப்பது ஹரிதாவுக்கு வருத்தமாய் இருந்தது.
ஆனால் இவள் அவர்கள் விஷயத்தில் தலையிட்டு புத்தி சொல்லுமளவு பக்குவம் கொண்டிருக்கவில்லை.

இரவு 8 மணிக்கு வீடு வந்து சேர்ந்தாள் ஹரிதா. அம்மாவிடம் பிரசாதங்களை கொடுத்தாள். ஹரிதா அம்மாவிடம் சாமி தரிசனம் எல்லாம் நன்றாக இருந்ததாக சொன்னாள். இரவு 10 மணி போல சௌமியா பேசினாள் என்னாச்சு சௌமியா என்றாள் அவள் அழுது கொண்டிருந்தாள். அழாதே என்னை எப்படி தனியாக விட்டு செல்ல அவனுக்கு மனம் வந்தது என்றாள். நீ இப்படி உடைந்து போவாய் என நான் நினைக்கவில்லை என்றாள் ஹரிதா. நான் அவனை உண்மையாக நேசித்தேன். அவன் என்னை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை . அப்படி இருக்காது சௌமியா அவன் வெளிநாட்டு வாழ்க்கை அவனை அப்படி பேச வைத்திருக்கலாம் . நானும் வெளிநாடெல்லாம் போவேன் அவனை விட நன்றாக வாழ தெரியும் எனக்கு என்றாள். என்ன சமாதானம் சொல்வது என்று புரியாமல் தவித்தாள் ஹரிதா. பேசாமல் தூங்கு சௌமியா. நான் வேண்டுமானால் அவனிடம் பேசட்டுமா என்றாள். அதெல்லாம் வேண்டாம். அவனுக்கு என் மீது இருந்த மயக்கம் போய்விட்டது. அது ஒரு தற்காலிக ஆசை என்பது எனக்கு விளங்கி விட்டது.நான் இனிமேல் அவனிடம் கெஞ்ச போவதில்லை. நான் என் பாதையை பார்த்துக்கொண்டு போக போகிறேன் என்று போனை வைத்தாள்.

ஹரிதா அதிகம் யோசிக்கவில்லை அதனால் எந்த பயனும் இல்லை . அவள் தூங்கி போனாள். ஆறுமுகம் சௌமியாவுக்காக மதியம் பக்கத்தில் இருந்த ஐஸ் கிரீம் பார்லர் ஒன்றில் ஸ்பெஷல் ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்தான். அவள் தாங்க்ஸ் ஆறுமுகம் என்றாள். ஹரிதா அவர்கள் இருவரையும் ஆழமாக பார்த்தாள். ஏதோ ஒரு திருப்பத்தில் சௌமியா மனம் சமாதானமடையும் என ஹரிதா எதிர்பார்த்தாள். அதன்படியே அவளும் நடந்து கொண்டாள்.நாட்கள் செல்ல செல்ல ரஞ்சித் பற்றிய நினைப்பே சௌமியாவிடத்தில் இல்லை. ரஞ்சித் ஹரிதாவிடம் போனில் பேசுவான். இவளும் மரியாதை நிமித்தமாக பேசுவாள். அதே சமயம் தன்னை விரும்புகிறேன் என்று ஏற்கனவே சொன்னது போல மறுபடி சொல்வானோ என நினைத்திருந்தாள் ஆனால் ரஞ்சித் மனதில் அப்படி ஒரு எண்ணமே இல்லை என்று தெரிந்தது. சீக்கிரமே எல்லாவற்றிலிருந்தும் விடுதலை பெற மனம் விரும்பியது. சௌமியா ஆறுமுகத்தோடு நல்ல முறையில் பழகியது இவளுக்கு பிடித்திருந்தது. ஆறுமுகம் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உள்நோக்கத்தோடு அவளை விரும்புவதாக சொல்லாமல் இருந்தது ஹரிதாவுக்கு அவன் மேல் மரியாதை உண்டு பண்ணியது.

கீர்த்தி மாதிரி ஆழமான மனதோ , சிந்தனையோ தனக்கு இல்லாதது கண்டு ஹரிதாவுக்கு அவள் மேல் லேசான பொறாமை இருந்தது. ஆறுமுகம் தன்னை விரும்பவில்லை என்ற ஏமாற்றமும் இருந்தது. அதெல்லாம் ஹரிதாவின் உள்மனசுக்கு மட்டுமே தெரிந்த பக்கங்கள்.யாரும் அறியாத பக்கங்கள். அவள் சில சமயம் தன்னையே ஏமாற்றிக்கொண்ட தருணங்களும் உண்டு என்பதை உணர்ந்திருந்தாள் . பிரேமா டீச்சர், சிந்து டீச்சர், பிருந்தா டீச்சர், ரம்யா டீச்சர் எல்லோருமே இலக்கை நோக்கி கவலைப்படாமல் இருந்தார்கள். அவர்களுக்கு தேவைகள் இருந்த போதும் அதைப்பற்றியெல்லாம் அதிகம் யோசிக்காமல் இருந்தார்கள். அன்று வெள்ளிக்கிழமை பூ வாங்கி வைத்திருந்தாள் ஹரிதா அம்மா. இவளுக்கு கொஞ்சம் வைத்து விட்டாள். இவள் ஸ்கூலுக்கு பூ வைத்து செல்வதை விரும்புவதில்லை அம்மா வைத்துவிட்டாள் என்ற காரணத்துக்காக மறுப்பேதும் சொல்லவில்லை.பூ அதன் மணம் இவளுக்கு பிடித்திருந்தது. தன்னுடைய உள்ளுணர்வை சொல்வதாகவே அது பட்டது. சௌமியா ஆறுமுகத்தோடு பேசிக்கொண்டிருந்தவள், என்ன பூவெல்லாம் பிரமாதமாய் இருக்கிறதே என்றாள். இன்று வெள்ளிக்கிழமை அல்லவா என்று சொன்னாள்.

சௌமியா கேண்டீன் சாப்பாடு தவிர்த்து அன்று ஆறுமுகம், ஹரிதாவோடு சாப்பிட்டாள் . அவளின் மாற்றம் ஆறுமுகத்துக்கு பிடித்திருந்தது. அதோடு அவள் கூட நட்பின் நெருக்கம் அதிகரித்து வந்தது . எனக்கும் கொஞ்சம் பூ கொண்டு வந்திருக்கலாமே என்றாள் சௌமியா. நான் அடுத்த முறை கட்டாயம் கொண்டு வருகிறேன் என்றாள் ஹரிதா. நாம் எங்காவது போகலாம் என்றாள் சௌமியா. சாயங்காலம் போல பார்க் போகலாம் என்றாள் ஹரிதா. ஆறுமுகம் நீயும் வாயேன் என்றாள் சௌமியா. சரி வருகிறேன் என்றான். ஆறுமுகமும் , சௌமியாவும் பேசிக்கொண்டே சற்று முன்னாடி போனார்கள். யாரோ இருவர் புதர் மறைவில் தழுவிக் கொண்டதை கண்டாள் ஹரிதா. இவர்களுக்கு வேறு வேலையே இல்லையா என சலித்துக்கொண்டாள் .