harithavin pagal kanavukal in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | ஹரிதாவின் பகல் கனவுகள் part 20

Featured Books
Categories
Share

ஹரிதாவின் பகல் கனவுகள் part 20


கனவு 20

ஆறுமுகத்தின் பிரிவு ஹரிதாவுக்கு வருத்தத்தை தந்தாலும் அவளுடைய உலகத்தை பற்றிய பார்வை விரிவடைந்திருந்தது. எல்லவற்றையும் கடக்க தான் பழகிக் கொள்ள வேண்டும் என அவள் உறுதி எடுத்துக்கொண்டாள் . முதலில் சமர் தன்னிடம் நன்றாக பழகினான் ஆனால் அவனுடைய தேவைகள் வேறாய் இருந்தவுடன் அவளை விட்டு விலகினான். பிறகு இளங்கோ அவர் மீது வீண் பழி சுமத்தினார்கள். இப்போது ஆறுமுகத்தின் பிரிவு. எல்லாவற்றிலும் இவள் வெறும் பார்வையாளராகவே இருந்திருக்கிறாள். அவள் செய்யாத தப்புக்கு அவள் துன்பம் அனுபவித்து வந்தாள். அவள் அதிகம் இது குறித்து யாரிடமும் பேச விரும்பவில்லை. பாவம் கீர்த்திதான் எத்தனை பிரியம் அவளுக்கு ஆறுமுகம் மீது. அவள் எதையும் எதிர்பார்க்காமலே கொண்ட பிரியம் கடைசியில் கேள்விக்குறியாய் போனது போனது தான் வேதனை. சௌமியா அவளும் அப்படித்தான். ரஞ்சித் அவளை எத்தனை தூரம் நேசித்தானோ அத்தனை தூரம் இப்போது வெறுக்கிறான் அல்லது அவளை தவிர்க்கிறான். காலப்போக்கில் எல்லாம் மாறும் என இவள் முன்பு நம்பி வந்தாள் . இப்போதெல்லாம் அது நடப்பதில்லை. தான் உண்டு தன் வேலையுண்டு என மாறிவிட வேண்டும் என துடித்தாள்.

இந்த வருடம் பிளஸ் டூ என்பதால் அவளுக்கு அதிக நெருக்கடிகள் இருக்கும் என எதிர்பார்த்தாள் . அவளுக்கு மன ரீதியாக கொடுக்கப்படும் அழுத்தமே அதிகம் அவளை பாதித்தது. எப்படியாவது இந்த வருடம் நல்ல மார்க் வாங்கிவிட்டால் அடுத்து காலேஜ். அங்கே என்ன மாதிரி சூழ்நிலை இருக்குமோ அதையும் எதிர்கொண்டு விட வேண்டியதுதான் என எண்ணிக்கொண்டாள். இந்த சொந்தம், பந்தம் எல்லாம் தேவைகள் தீரும் வரை மட்டுமே மாதிரியான உணர்வு ஏற்பட்டது. தான் அடுத்தவர் பற்றி கவலைப்படாமல் தன்னுடைய சுயநலம் மட்டும் கருதுவோருக்கான உலகம் இது என அவள் நன்கு உணர்ந்து கொண்டாள். கீர்த்தி ஆறுமுகத்தை பார்க்க போவதாக சொல்லியிருந்தாள். அவனை பார்த்தபின் ஃபோன் பண்ணுவதாகவும் சொல்லியிருந்தாள்.கீர்த்தி சொன்ன மாதிரி ஃபோன் செய்தாள் . ஆறுமுகம் அப்பாவுக்கு சில கடன் பிரச்சனைகள் இருப்பதால் அவருடைய வயல் வேலைகளை ஆறுமுகம் பார்ப்பதாகவும் சொன்னாள். ஆறுமுகம் நன்றாய் இருப்பதாக சொன்னான். அவன் பேசும்போது சௌமியா எப்படி இருக்கிறாள் என விசாரித்தான். கீர்த்தி தன்னை வந்து பார்த்ததில் மகிழ்ச்சி என்றான். கீர்த்தி அங்கிருந்து சாயங்காலமே கிளம்பி விட்டாள்.

ஹரிதா சிரமப்பட்டு படிப்பில் கவனம் கொண்டு வர முயன்றாள் . சௌமியாவிடம் ஆறுமுகம் அவளை விசாரித்ததாக சொன்னாள். எனக்கு புரிகிறது நம்மால் இப்போது ஒன்று செய்ய முடியவில்லை என்கிற எண்ணம் எனக்கும் இருக்கத்தான் செய்கிறது என்றாள் சௌமியா. வகுப்புகள் தொடர்ந்து நடந்தன. தன்னுடைய விளையாட்டு நேரத்தை பாதியாக குறைத்துக்கொண்டாள் ஹரிதா. அவளுக்கு நிறைய நேரம் இல்லை.கணக்குக்காக அவள் இன்னொரு tution போக வேண்டியிருந்தது. அதில் குறிப்பிட்ட நேரம் போனது. சௌமியா அவள் திறமைசாலி அவள் ஒரு முறை சொல்லிக்கொடுத்தால் அப்படியே பிடித்துக்கொள்வாள். நாட்கள் வேகமாய் நகரத்தொடங்கின . ரஞ்சித் இடையே வெளிநாட்டில் இருந்து ஃபோன் பண்ணியிருந்தான். அவள் படிப்பு எப்படி போகிறது என விசாரித்தான். இவள் பதிலுக்கு அவனை விசாரித்தாள். அவன் சௌமியா இப்போது எப்படி இருக்கிறாள் என கேட்டான். இவள் அவள் எப்போதும் போலத்தான் இருக்கிறாள் என்றாள். அவன் என்ன எதிர்பார்த்தானோ தெரியாது. சாதாரணமாய் பேசிக்கொண்டார்கள். அவ்வளவுதான் தன்னால் பேச முடியும் என்று ஹரிதாவுக்கு தோன்றியது.

மேற்கொண்டு கீர்த்தி எதுவும் ஆறுமுகம் பற்றி சொல்லவில்லை. அவள் சொல்லித்தான் என்ன ஆக போகிறது. கீர்த்தி சௌமியாவை அவனிடம் பேச சொல்லியிருந்தாள் . சௌமியா அவனை தொந்தரவு செய்ய வேண்டாமென நினைப்பதாக சொன்னாள். என்னால் அவன் காதலை ஏற்க முடியவில்லை தவிர இப்போது பேசினால் அவன் மன ஓட்டம் இன்னும் பாதிக்கப்படும் என்றாள் சௌமியா. கீர்த்தியும் அதை பெரிது படுத்தவில்லை. சௌமியா தெளிவாக இருந்தாள். அவள் ஹரிதா போல பிரச்சனைகளை தேடிக்கொள்பவள் அல்ல. அன்று சண்டே சௌமியா ஹரிதா வீட்டுக்கு வந்திருந்தாள். சௌமியா கொஞ்ச நேரம் ஹரிதாவுக்கு மேத்ஸ் சொல்லிக்கொடுத்தாள் .பிறகு டிவி பார்த்தார்கள். நீ கவலைப்பட வேண்டாம் நல்ல ஸ்கோர் எடுப்பாய் என்று சௌமியா ஹரிதாவிடம் சொன்னாள். ம் எல்லாம் நல்லபடியாய் நடக்கும் என்றுதான் நாம் நம்புகிறோம் என்றாள் ஹரிதா. அவளுடைய எதிர்காலம் புத்தகங்களை நம்பியுள்ளது என்பதை அவளால் நம்ப முடியாவிட்டாலும் உண்மை அதுதான்.

கீர்த்தி இப்போது ஃபைனல் இயர் இன்ஜினியரிங். அவளை பார்த்து ரொம்ப நாள் ஆன மாதிரி ஹரிதாவுக்கு தோன்றியது.கீர்த்திக்கு தோன்றினால் அவளே வருவாள். அவள் அப்படிப்பட்ட டைப் தான். மனதில் ஒன்றும் ஒளித்து வைக்கத் தெரியாது. தன்னை மாதிரி தெளிவில்லாத உறவுகளால் தடுமாற தெரியாது அவளுக்கு. ஹரிதா அவளுக்கு மெசேஜ் அனுப்பியிருந்தாள் . கீர்த்தி தான் இப்போ ரொம்ப பிஸி ஆக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் தானே கூடிய சீக்கிரம் வந்து ஹரிதாவை பார்ப்பதாகவும் சொல்லியிருந்தாள். இவளுக்கு அவள் பதிலால் மனம் திருப்தி அடைந்தது. சௌமியாவிடமும் சொன்னாள். அவள் கீர்த்தி வந்தால் நம்மிடம் ஒரு மாற்றம் மனதளவில் ஏற்படும் என்று நம்புவதாக சொன்னாள். மறுபடியும் யோகா டீச்சர் சிந்துவை பார்த்தால் தேவலாம் என்று இருந்தது. ஃபோன் பண்ணினாள். அவள் இப்போது தனி வீடு எடுத்து தங்கி இருப்பதாகவும் அட்ரஸ் மெசேஜ் பண்ணுவதாகவும் சொன்னாள்.

சிந்து டீச்சர் ஆள் இளைத்திருந்தாள் . என்ன மேடம் இப்படி இளைத்துவிட்டீர்கள் என்றாள் ஹரிதா. ஒரே அலைச்சல் என் அப்பா அம்மா பேச்சை நான் கல்யாணத்தின் போது கேட்கவில்லை இப்போது அவர்களும் துணை வரவில்லை என்றாள். இப்போதெல்லாம் நேரம் சரியாய் இருக்கிறது. விவாகரத்து பற்றி ஆயிரம் கேள்விகள் . நீ எப்படி இருக்கிறாய் உன் படிப்பு எப்படி போகிறது என்றாள் சிந்து. எனக்கு ஒரு குறையும் இல்லை. ஆனால் மனதின் சிந்தனைகளை கட்டுப்படுத்த முடியவில்லை. சில சமயம் பழைய விஷயங்களையே அலசிக்கொண்டிருக்கிறேன் . அதுதான் உங்களை பார்க்க வந்தேன். ம் நீ சொல்வது நார்மல் தான். நீ உன் ஃபோகஸ் படிப்பின் மேல் வைத்துத்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை. சில சமயம் வெளி சூழ்நிலைகள் நம்மை வேறு பாதைக்கு அழைத்து செல்லலாம் . அதை தவிர்ப்பது நம் உள் மன சக்தியால் முடியும் என்றாள். ம் என்ன சாப்பிடுகிறாய் டீ காபி என்றாள் எனக்கு காபியே போதும் என்றாள் ஹரிதா. காப்பி போட்டு கொடுத்தாள் சிந்து. தனியாக இருக்க பயமாயில்லையா என்றாள் ஹரிதா. நான் தேர்ந்தெடுத்த பாதை அல்லவா எப்போதும் நெகட்டிவ் ஆக சிந்திக்க முடியாது. கடந்துதான் ஆக வேண்டும். வேறு கல்யாணம் பண்ண போவதில்லையா ? ஓ என்று சிரித்தாள். நிச்சயம் யோசிப்பேன் என்று சொன்னாள். இவள் ரொம்ப தாங்க்ஸ் மேடம் நான் உங்களுக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் என்றாள் ஹரிதா.

மாலை 7 மணி ஹரிதா ஏதோ படித்துக்கொண்டிருந்தாள் . அவள் அப்பா எங்கோ வெளியே போய்விட்டு அப்போதுதான் வந்தார். ஹரிதாவை பற்றி விசாரிக்கும் சத்தம் கேட்டது . இவள் வெளியே வந்து பார்த்தாள். என்னம்மா ரொம்ப தீவிரமாக படிக்க ஆரம்பித்துவிட்டாயா என்றார். ஆமாம்பா எனக்கு எப்படியாவது நல்ல ரேங்க் வாங்க வேண்டும் என்றாள். ம் நல்ல விஷயம்தான். இளங்கோ ஃபோன் பண்ணியிருந்தார். அவரால் ஆறுமுகத்துக்கு உதவ முடியாமல் போனதற்கு வருத்தப்பட்டார். உன்னையும் விசாரித்தார்.இவள் பெரிதாக எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. சரி அப்பா நான் போய் படிக்கிறேன் என்றாள். சரி ஹரிதா. நினைவுகள் அவளை தொந்தரவு செய்தன. அதையும் மீறி அவள் படிக்கிற காரியத்தில் ஈடுபட முயன்றாள். இப்படியாக அவள் வாழ்க்கையோடு கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தாள். தான் சிந்து டீச்சரை பார்த்ததாக சௌமியாவிடம் சொன்னாள் ஹரிதா. சௌமியா என்ன சொன்னார் டீச்சர் என்றாள். அவர் கதை மிகவும் சோகமானது என்று சொல்லி முடித்தாள் ஹரிதா. எல்லா காதலும் திருமணத்தில் முடிந்த போதும் சக்ஸஸ் ஆவதில்லை என்றாள் சௌமியா.

சௌமியா,கீர்த்தி,ஹரிதா மூவருமே மாறுபட்ட குணம் கொண்ட போதும் அவர்கள் தங்கள் நிலைத்த நட்பால் ஒன்றாய் இருந்தார்கள். கீர்த்திக்கு காதலில் நம்பிக்கையில்லை. சௌமியா காதலின் ஆழம் அறியும் முன்னே அதிலிருந்து விலகிக்கொண்டவள். ஹரிதாவோ எது காதல் என்பதை அறியும் முன்பே சமர் அவளுக்கு பிரேக்அப் சொல்லிவிட்டான். காதல் சூழ்நிலையால் உருவாகி அதே சூழ்நிலையால் பிரியும் நிலை ஏற்படுவதாய் மூவரும் உணர்ந்து இருந்தனர். காதல் இந்த சொல் இவர்களுக்கு அவசியம் என்றாலும் அதை காப்பாற்ற இவர்கள் படாதபாடு பட வேண்டியிருக்கிறது. இங்கேதான் ஆண்கள் ஜெயிக்கிறார்கள்.. பெண்கள் தோல்வியை தழுவி விடுகிறார்கள் என்று ஹரிதாவுக்கு தோன்றியது. ஹரிதா தன்னை கைவிட்ட சமர் மறுபடி தன்னிடம் மீண்டும் வருவான் என எதிர்பார்க்கவில்லை. சௌமியா மனம் ரஞ்சித் இப்படி செய்வான் என துளியும் எதிர்பார்த்திருக்கவில்லை. ரஞ்சித் மனமோ அலைபாய்ந்து கொண்டிருந்தது. இதை விட சவுகரியமாய் ஒன்று கிடைத்தால் நன்றாக இருக்குமென்ற எண்ணமே அவனிடம் இருந்தது.

எல்லாவற்றிலும் இருந்து விலகி நின்று பார்க்க ஹரிதாவுக்கு இன்னும் அனுபவம் தேவை. அவளுக்கு தேவைகள் அதிகம் . அதை நிறைவேற்றிக்கொள்ள உறவுகள் அவசியம். அதைக்காப்பாற்றிக்கொள்ள அவள் முயல வேண்டியது காலத்தின் கட்டாயம். கீர்த்தி வருகிற சண்டே ஊருக்கு வருவதாய் சொல்லியிருக்கிறாள். சௌமியாவும்,ஹரிதாவும் ஆவலாய் இருந்தனர். கீர்த்தி பற்றியே பேசிக்கொண்டிருந்தனர் இருவரும். கீர்த்தி வருகையின் போது அவளை இரண்டு நாட்களாவது தங்கள் கூட இருக்க சொல்லவேண்டும் என நினைத்தார்கள் இருவரும். கீர்த்தி சொன்னமாதிரி வந்து விட்டாள். சௌமியாவை பார்த்து ஏன் இப்படி முகத்தை வைத்துக்கொண்டிருக்கிறாய் எனக் கேட்டாள். ஹரிதாவையும், உன்னையும் நான் ரொம்ப மிஸ் பண்ணினேன் என்றாள். நாங்களும்தான் என்றாள் சௌமியா. ம் நான் ஆறுமுகத்தையும் ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் அவன் இல்லாமல் அவனிடம் பேசாமல் எந்த வேலையும் செய்ய மனம் வரமாட்டேன் என்கிறது என்றாள்.
நாளை காலையில் ஹரிதாவை பார்ப்போம் என்றாள் கீர்த்தி. இப்போது நீ தூங்கு குட் நைட் என்றாள் சௌமியா. ரஞ்சித் உன்னிடம் பேசினானா என்றாள் கீர்த்தி.இல்லை அவனுக்கு நிறைய வேலை இருந்திருக்கும் என்றாள் .