இரவு 2
சதா சிந்தித்து கொண்டிருப்பது ஜானுவின் பழக்கமல்ல. ஆனால் வருண் குறித்து அவள் ரொம்பவே சிந்தித்தாள். அவளுடைய மாற்றம் அவளுக்கே ஆச்சரியமாய் இருந்தது. தான் ஒரு பெண் போலீஸ் அதிகாரியாய் இருந்த போதும் வருணுக்கு மனைவி தானே என்ற நினைப்பும் தோன்றாமல் இல்லை. என்ன செய்தாலும் எத்தனை சந்திப்புகள் நிகழ்ந்தாலும் ஒரு ஏக்கம் மனதில் இருந்த படி இருந்தது. காலப்போக்கில் அது மாறிவிடும் எனினும் அந்த தற்காலிக சலனம் அவளுக்கு பிடித்திருந்தது. நிச்சயதார்த்த நாள் குறித்து விட்டார்கள். அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் ஜானு அம்மா செய்ய தொடங்கி விட்டாள். ஜானு இரண்டு நாள் லீவு கேட்டிருந்தாள் . கொடுத்திருந்தார்கள்.
மீராதான் இவளை கிண்டல் செய்தபடி இருந்தாள். ஆனால் ஜானு அதை பொருட்படுத்தவில்லை.
வருண் அவ்வப்போது ஃபோன் செய்து வந்தான். அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் என்ற போதும் பரபரப்புக்கு பஞ்சமில்லை.திவ்யா நிச்சயத்துக்கு வருவதாக சொல்லி இருந்தாள். அவளுக்கு இன்னும் திருமணம் ஆகி இருக்கவில்லை. ஒரு இரண்டு மணி நேர பர்மிஷன் போட்டு விட்டு வருவாள். எஸ் ஐ பிரேமா கல்யாணத்துக்கு முன்னதாகவே வந்து விடுவதாக சொல்லியிருந்தாள். கல்யாணத்துக்காக பாங்கில் லோன் போட்டிருந்தாள் ஜானு. அது கிடைக்க வேண்டும் என கடவுளை வேண்டிக்கொண்டிருந்தாள் . நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. அப்போதுதான் அந்த பெண் ஸ்டேஷன் வந்தாள். வந்தவள் இவளை பார்த்ததும் அழ தொடங்கினாள். என்னாச்சு ஏன் அழறீங்க உக்காருங்க என்ன நடந்தது என விசாரித்தாள் . அவள் என் ஹஸ்பண்ட் என்னை விட்டுட்டு இன்னொரு பொண்ணோட தொடர்பு வச்சிருக்காரு மேடம் என்றாள். இது பத்தி கம்ப்ளைண்ட் பண்ணா என்னை கொன்னுடுவேன் அப்படின்னு மிரட்டுகிறார் மேடம். சரி கவலைப்படாதீங்க ஒரு கம்ப்ளைண்ட் எழுதி கொடுத்துட்டு போங்க. நீங்கதான் மேடம் எனக்கும் என் பொண்ணுக்கும் பாதுகாப்பு கொடுக்கணும் என்றாள். உங்க பேரு? சுமதி.உங்க ஃபோன் நம்பர் உங்க ஹஸ்பண்ட் ஃபோன் நம்பர் மறக்காம எழுதி கொடுத்துட்டு போங்க என்றாள் ஜானு.
இந்த மாதிரி எத்தனை கேஸ் பார்த்து இருக்கிறோம் என்றாள் திவ்யா. சுமதி ஹஸ்பண்ட் பேரென்ன திவ்யா ?ஸ்ரீதர்.அவனுக்கு ஃபோன் செய்தாள். அவள் விவரங்களை சொன்னதும் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போயிட்டாளா என்றான் . நீங்க கொஞ்சம் ஸ்டேஷன் வரைக்கும் வர முடியுமா ? எத்தனை மணிக்கு மேடம் மதியம் 3 மணிக்கு. சரி வரேன் மேடம் என்றான். இவனையெல்லாம் அட்வைஸ் பண்ணி அப்படியே விட்டு விடக்கூடாது. உள்ளே தள்ளி தண்டனை வாங்கி கொடுக்கணும் என்றாள் திவ்யா. எஸ் ஐ பிரேமா மேடத்திடம் இன்ஃபார்ம் செய்தாள் ஜானு. சரி பார்த்து ஹாண்டில் பண்ணுங்க என்றாள். மதியம் ஸ்டேஷன் வந்தவன் குடித்து விட்டு வந்திருந்தான். இவள் அவனை ஆத்திரத்துடன் ஒரு அறை விட்டாள். சுமதியிடம் இருந்து ஃபோன் வந்தது என் பொண்ணு காணலை மேடம். காலையில் ஸ்கூலுக்கு இவர்தான் அழைச்சிட்டு போனார். மதியம் லஞ்ச் கொடுக்க போனப்போ அவ அங்க வரலைனு சொல்றாங்க மேடம். ஸ்ரீதர் அங்கேயே உட்கார்ந்து விட்டான். அவன் முழு போதையில் இருந்தான்.
சரி திவ்யா நான் போய் ஸ்கூல்ல விசாரிக்கிறேன் என்றாள் ஜானு . நீ இவனை ஜாக்கிரதையா பார்த்துக்க. சுமதியிடம் எந்த ஸ்கூல் என விசாரித்து தெரிந்து கொண்டாள். ஸ்கூல் முடிந்து பசங்கள் எல்லாம் கிளம்பி விட்டு இருந்தனர்.சுமதி ஸ்கூல் வாசலிலே நின்று கொண்டிருந்தாள். யாரிடமோ போனில் பேசிக்கொண்டிருந்தாள். ஸ்கூல் பியூன் உள்ளிட்ட சிலரிடம் விசாரித்தாள். பொண்ணு பேரென்ன ரம்யா. எந்த கிளாஸ் படிக்கிறா? ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட். அங்கே ஸ்ரீதர் மேல் தண்ணீர் ஊற்றி போதை தெளிய வைக்க முயன்றார்கள். அவன் அப்போதும் தெளியவில்லை. அந்த பொண்ணு பேரென்ன அதாம்மா உங்க ஹஸ்பண்ட் கூட தொடர்பு வச்சிருக்கிற பொண்ணு பேரென்ன . அவங்க அட்ரஸ் ஃபோன் நம்பர் ஏதாவது இருக்கா? அவங்களை காண்டாக்ட் பண்ணி பார்த்தீங்களா? எஸ் மேடம் அவ பேரு பார்வதி. அவ வீடு இங்க புரசைவாக்கத்திலே இருக்கு. ஃபோன் போடுங்க. ஃபோன் ரிங் போய் கொண்டு இருந்தது. யாரும் எடுக்கவில்லை. ஜானு கவலைப்படாதீங்க நான் இப்பவே அலர்ட் மெசேஜ் கொடுக்க சொல்லுறேன். நீங்க பொண்ணோட போட்டோ எனக்கு whatsapp பண்ணுங்க என்றாள்.
ஒரு வழியாக மயக்கம் தெளிந்து எழுந்தவனிடம் விசாரித்த போது பார்வதி வீட்டில் தான் ரம்யாவை விட்டதாக சொன்னான். திவ்யாவும், ஜானுவும் உடனடியாக பார்வதி வீட்டுக்கு போனார்கள். அங்கே பார்வதி இல்லை.வீடு வெளியே பூட்டி இருந்தது. பார்வதி ஃபோன் பண்ணியிருந்தாள். என்ன ஆச்சு சுமதி என்றாள். ஏண்டி ஃபோன் எடுக்கலை என்றாள். அது வந்து வெளியே டிரைவிங்கில் இருந்தேன். என் பொண்ணு எங்கேடி. அவ வீட்டுல இருக்கா. அடிப்பாவி இங்கே அவளை காணோம் அப்படின்னு தேடிட்டு இருக்கோம். உன் புருஷன்தான் கொண்டு வந்து விட்டுட்டு போனாரு என்றாள். வீட்டுக்குள் குழந்தை தூங்கி கொண்டிருந்தது. பார்வதி சாரி மேடம் சுமதி சொல்லறதை நம்பாதீங்க நாங்க ஜஸ்ட் ஃபிரண்ட்ஸ் தான். அவ தேவையில்லாம சந்தேகப்படுறா என்றாள். சரி ஒரு ஸ்டேட்மெண்ட் எழுதி கொடுங்க என்றாள் ஜானு. சுமதி ரொம்ப தாங்க்ஸ் மேடம் என்றாள்.
சின்ன விஷயம் தான் ஆனால் பெரிய பதட்டத்தை உண்டு பண்ணிவிட்டார்கள். ஸ்ரீதருக்கு அட்வைஸ் பண்ணி அனுப்பி வைத்தாள் ஜானு. அவனும் தலையாட்டி விட்டு போனான். ஜானு களைப்புடன் வீடு திரும்பினாள்.அவள் அம்மா ஏன் லேட் என கேட்டாள். விஷயத்தை சொன்னாள். ஒவ்வொரு நாளும் பயப்பட வேண்டியிருக்கிறது நீ சீக்கிரம் கல்யாணம் பண்ணி போகிற வரை எனக்கு நிம்மதி இருக்காது. அதெல்லாம் ஒண்ணும் கவலைப்படாதே அம்மா எல்லா வேலையிலும் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும்.அக்கா அப்புறம் அந்த குழந்தை எப்படி இருக்கு என்றாள். அவ பயந்து போயிருந்தா. இப்போ கொஞ்சம் பரவாயில்லை. பொதுவாக ஜானு ஸ்டேஷன் இந்த சிறிய ரக கேஸ்களைத்தான் கையாண்டு வந்தது.வருண் மெசேஜ் அனுப்பியிருந்தான். நாளை நிச்சயதார்த்த டிரஸ் எடுக்க வருகிறாயா என்றான். நிச்சயம் வருவேன் என்றாள்.
கடையில் கூட்டம் அதிகமில்லை. மணி மாலை 7 கடந்திருந்தது . மீராவையும் , அவள் அம்மாவையும் நலம் விசாரித்தான் வருண்.வருண் அவன் அப்பா அம்மாவோடு வந்திருந்தான். அவனே இவளுக்கு பட்டு புடவை செலக்ட் செய்தான். எல்லோரும் சேர்ந்து ஹோட்டல் போய் சாப்பிட்டார்கள். வருணும் ஜானுவும் சேர்ந்து செல்பி எடுத்துக்கொண்டார்கள். வருண் செலக்ட் செய்த அந்த புடவை ஜானுவுக்கு ரொம்ப பிடித்திருந்தது. நடப்பதெல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என நினைத்தாள் ஜானு. சுமதியிடம் விசாரித்தாள் ஏதாவது மறுபடி பிரச்சனை பண்ணுகிறானா ஸ்ரீதர் என விசாரித்தாள். இல்லை அவர் இப்போது எந்த பிரச்சனையும் பண்ணுவதில்லை என்றாள். எனக்கு அப்டேட் பண்ணுங்க என்றாள் ஜானு.குழந்தை பாதுகாப்பு ரொம்ப முக்கியம் என்றும் சொன்னாள்.
ஜானு எப்போதும் போல ஸ்டேஷன் டியூட்டிகளை பார்த்து வந்தாள். அவளுக்கு பார்வதி ஃபோன் பண்ணியிருந்தாள். கொஞ்ச நாளா எனக்கு unknown நம்பர்லேயிருந்து ஒரு கால் வருது .நீ ஸ்ரீதர் ஃபிரண்ட்ஷிப் கட் பண்ணலே அப்படின்னா உனக்கு ஆபத்துதான் அப்படின்னு சொல்லுறாங்க. நாங்க எந்த தப்பும் பண்ணல மேடம். சரி பார்வதி அந்த நம்பர் எனக்கு அனுப்புங்க . நான் விசாரிக்கிறேன் என்றாள். இதென்ன புது பிரச்சனையா இருக்கு திவ்யா என்றாள். அதெல்லாம் அப்படித்தான் நடிப்பாங்க ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவா இருப்பாங்க.அந்த நம்பர் பிரதீப் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. பிரதீப்பிடம் பேசிய போது ஆமா மேடம் சுமதி எனக்கு சிஸ்டர் மாதிரி அதான் சும்மா மிரட்டினேன் . இது தப்பு மிஸ்டர் பிரதீப். சாரி மேடம் இனிமே இது மாதிரி இனிமே நடக்காது என்றான்.
வருண் ஜானு நிச்சயதார்த்தம் இன்னும் இரண்டு நாட்களில் இருந்தது. இவள் கோவிலுக்கு போயிருந்தாள் மீரா கூட. அக்கா இப்போதெல்லாம் நீ என்னிடம் சரியாக பேசுவதில்லை என்றாள். அப்படியில்லை மீரா எனக்கு உன்னை நினைத்தால் கவலைதான் ஆனால் அதை வெளிக்காட்டி கொள்ள தோனவில்லை என்றாள். குலதெய்வம் கோவிலுக்கு போக வேண்டும் என அம்மா சொன்னாள். காரில் வருண், அவனுடைய குடும்பம் மற்றொரு காரில் ஜானு, ஜானுவின் குடும்பம் என எல்லோரும் புறப்பட்டார்கள். முறைப்படி வழிபாடு நடத்தினார்கள். பொங்கல் படைத்தார்கள். ஜானுவுக்கு அவனிடம் மனம் விட்டு பேச வேண்டும் போல இருந்தது. இந்த வழக்குகள், வம்புகள் விட்டு வெகுதூரம் சென்று தனிமையில் அவனோடு இருக்க வேண்டும் என தோன்றியது. இது எத்தனை தூரம் சாத்தியம் ? அவள் அவளுடைய அம்மா , தங்கை ஸ்டேஷன் டியூட்டி எல்லாம் இருக்கிறது . குறைந்த பட்சம் ஒரு ஹனிமூன் ஆவது போக வேணும் என எண்ணிக்கொண்டாள். வருணிடம் அதை சொல்லவும் செய்தாள். அவன் நிச்சயம் நடக்கும் என்றான்.
சாமி பேரில் பூஜைகள் செய்தார்கள். கல்யாணம் நல்லபடியாய் நடக்க எல்லோரும் மனமுருகி வேண்டிக்கொண்டார்கள் .
ராம் தீபுவிடம் என்ன தீபு வழக்குகள் எல்லாம் நமக்கு வருவதில்லையே என்றான்.நாம் அதன் பார்வையில் இருக்கிறோம். எனக்கென்னவோ சீக்கிரமே நாம் நம்முடைய பழைய வழக்குகளை போல பிஸி ஆக போகிறோம் என தோன்றுகிறது. நாளைக்கு என் ஃப்ரெண்ட் ஜானுவுக்கு எங்கேஜ்மெண்ட் நான் போய்விட்டு வருகிறேன் அரை நாள் லீவு வேண்டும் என்றாள். அதற்கென்ன எடுத்துக்கொள் நீங்களும் வந்தால் நன்றாக இருக்கும், இருக்கிற வேலையையும் கெடுத்து கொள்ள சொல்கிறாயா ? அதெல்லாம் வேண்டாம் நீ மட்டும் போய் வா என்றான். ராமை நினைத்து பார்த்தாள். இத்தனை வருடங்களில் ஒரு சில விழாக்களுக்கே ராம் போயிருக்கிறான்.ஜானு தீபுவுடைய பள்ளித்தோழி.ஒரு மாற்றத்தை வேண்டித்தான் இந்த விழாவிற்கு தீபு போக முடிவெடுத்தாள் .வருண் ஆவலாய் காத்திருந்தான்.
ராம் வழக்குகள் பற்றி சிந்தித்து பார்த்தான். மர்மங்கள் அதன் பின்னணிகள். எதிர்பாராத திருப்பங்கள் எல்லாவற்றையும் கடந்தவன் அவன். அவனுக்கு சிறிது காலம் ஓய்வு தேவைப்பட்டது. அதில் அவனுக்கு பக்குவம் கிட்டியது. தீபு அவனுடைய ஆரம்ப காலம் முதல் அவனுக்கு துணையாய் இருப்பவள். அவளுக்கும் கல்யாணமாகி குழந்தை இருந்தது. கல்யாண மண்டபம் களை கட்டியிருந்தது. நிதானமாக இருக்க முயன்றாள் ஜானு. திவ்யா தீபுவை அடையாளம் கொண்டாள். மீரா ஜானுவுடைய செல் ஃபோனை வைத்திருந்தாள். அப்போது ஜானுவுடைய ஃபோன் அடித்தது.