iravai sudum velicham 2 in Tamil Thriller by kattupaya s books and stories PDF | இரவை சுடும் வெளிச்சம் - 3

Featured Books
Categories
Share

இரவை சுடும் வெளிச்சம் - 3

இரவு 3

போனை மீரா எடுத்து ஹலோ என்றாள். நான் சுமதி பேசுறேன் மேடம் என் பொண்ணை மறுபடி காணலை என்றாள். இருங்க அக்கா கிட்ட ஃபோன் கொடுக்கிறேன் என்றாள் மீரா . அதற்குள் லைன் கட் ஆகி விட்டது. திரும்ப அந்த நம்பருக்கு கால் செய்தாள். யாரும் எடுக்கவில்லை.ஜானுவிடம் விஷயத்தை சொன்னாள். ஜானு உடனே திவ்யாவிடம் சொல்லி அதை உடனே ஸ்டேஷனில் இருக்கிற யாராவது ஃபாலோ பண்ணும்படி கூறினாள். நான் பார்த்துக்கிறேன் நீ டென்ஷன் ஆகாதே என்றாள் திவ்யா. வருண் ஜானுவுக்கு நிச்சயதார்த்த மோதிரம் அணிவித்தான். மங்கள கல்யாண பத்திரிக்கை வாசிக்கப்பட்டது. தீபு மணமக்களை வாழ்த்தினாள் . தீபு நீ வந்ததிலே ரொம்ப சந்தோஷம் என்றாள் ஜானு. ராம் சாரும் வந்திருக்கலாம் என்றாள். கல்யாணத்துக்கு நிச்சயம் கூட்டிட்டு வரேன் . அடுத்தடுத்த நிகழ்வுகள் நடக்க தொடங்கின. ஜானுவுக்கு சுமதி விஷயத்தை நினைத்தால் கவலையாக இருந்தது.

வருண் என்ன ஜானு என்ன யோசனை எப்பவுமே ஸ்டேஷன் நினைப்புதானா என்றான். அப்படியில்லை குழந்தையை காணவில்லை என்று கம்ப்ளைண்ட் என்று மட்டும் சொன்னாள். சரி ரொம்ப அவசரம் என்றால் நீ போய்
பார்ப்பதென்றால் பாரு எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்றான். ரொம்ப தாங்க்ஸ் வருண். நான் உடனே கிளம்புகிறேன் என்றாள். அவள் அம்மா முகம் மாறியது. என்னடி இது இப்போதான் மாலையும் கழுத்துமா இருந்தே அதுக்குள்ள டியூட்டி போகணும் அப்படின்னு சொல்லறியே என்றாள். அதில்லைமா குழந்தை காணோம் அதுதான் எனக்கு பதட்டமா இருக்கு. சரி சரி போயிட்டு வா ஃபோன் பண்ணு என்றாள். எல்லோரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை. அவசரமாக புறப்பட்டாள். திவ்யாவும் உடனே கிளம்பினாள்.
தீபுவிடம் மீரா நடந்ததை சொன்னாள்.

சுமதி, ஸ்ரீதர் இருவருமே ஸ்டேஷன் வாசலில் கலங்கியபடி நின்றிருந்தார்கள். காலையிலே நாங்க ரெண்டு பேரும் தான் ஸ்கூல் வாசலிலே பெண்ணை இறக்கி விட்டு வேலைக்கு போனோம்.மதியம் 3 மணிக்கு மெசேஜ் வந்தது. அவ ஸ்கூல் வரலைன்னு . எங்களுக்கு ஒண்ணுமே புரியல. எல்லா இடத்துலயும் தேடிட்டோம் . பார்வதி இதுல சம்பந்தப்படல. அவளையும் விசாரித்து விட்டோம் என்றார்கள்.ஸ்கூலுக்கு போனார்கள். கண்ட்ரோல் ரூம் ஃபோன் செய்து விஷயத்தை எல்லா ஸ்டேஷன்களுக்கும் சொன்னார்கள். ஸ்கூல் உள்ளே நல்லா தேடி பார்த்தீங்களா . அதெல்லாம் அந்த பொண்ணு வரவேயில்லை என்றார்கள்.ஸ்கூல் வாசலில் இருந்த சிசிடிவி ஃபுடேஜ் செக் செய்தார்கள். ஒரு ஆட்டோவில் ரம்யா ஏறுவது தெரிந்தது. அந்த ஆட்டோ நம்பர் பதிவாகவில்லை. அந்த பகுதியில் இருக்கும் ஆட்டோகாரர்களிடம் விசாரிக்க தொடங்கினர் போலீசார். சற்று நேரத்தில் பார்வதியும் வந்து விட்டாள். ஏதாவது பிரச்னைனா பேசி தீர்த்துக்கலாம் குழந்தையை பத்தி இன்ஃபர்மேஷன் ஏதும் கிடைச்சா உடனே சொல்லுங்க என்றாள் ஜானு.

ரெகுலரா நீங்க ஏதாவது ஆட்டோ ல போவீங்களா ? இல்ல சார் அப்படி எதுவும் இல்லை என்றான் ஸ்ரீதர். எனக்கு உங்க மேலே தான் சந்தேகமா இருக்கு என்றாள் திவ்யா. மேடம் சத்தியமா நான் எதுவும் பண்ணலை மேடம் என்றான். பிரதீப்பிடம் ஃபோன் பண்ணி விசாரித்தார்கள். அவனுக்கும் எதுவும் தெரியாதென்றான். வருண் ஃபோன் பண்ணியிருந்தான் ஜானுவுக்கு. என்னாச்சு ஜானு குழந்தை கிடைச்சுதா? இல்லை வருண்.. நான் திரும்ப கூப்பிடுறேன் என்றாள். ஆட்டோ போன பகுதிகளில் வெவ்வேறு சிசிடிவி ஃபுடேஜ்களையும் ஆராய்ந்தார்கள். பலன் ஏதும் கிடைக்கவில்லை.ஸ்கூல் அருகில் இருந்த வீடுகளிலும் விசாரித்தார்கள்.ரம்யா காணாமல் போய் 8 மணி நேரம் கடந்திருந்தது. பிரேமா ஃபோன் பண்ணியிருந்தாள். நீ பதட்டப்படாதே ஜானு பக்கத்து ஸ்டேஷன்களில் சொல்லி வைத்திருக்கிறேன் எப்படியும் குழந்தை கிடைத்து விடும் என்றாள்.

சுமதிக்கு ஃபோன் கால் வந்தது.என்ன சுமதி எப்படி இருக்க ரம்யா என்கிட்ட பத்திரமா இருக்கா.. ஒரு 2 லட்சம் கொடுத்துட்டு ரம்யாவை கூட்டிட்டு போ என்றது ஆண் குரல். யாருடா நீ என் பெண்ணை விட்டுடுடா என்றவாறு மயங்கினாள் சுமதி. அவளை மயக்கம் தெளிவித்தார்கள். ரெண்டு லட்சம் கேட்டான் மேடம். அவன் குரல் இதுக்கு முன்னாடி கேட்டு இருக்கீங்களா? இல்லை மேடம். சரி உங்க ஃபோன்ல வாய்ஸ் ரிக்கார்டர் இருக்கா.இருக்கு. அந்த குரலை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை.ஜானு நல்லா யோசிச்சு பாருங்க சுமதி என்றாள். உடனே நாம இதை பிளாஷ் நியூஸ் ல போட்டா என்ன என்றான் ஸ்ரீதர். ரம்யாவுக்கு தான் ஆபத்து. நாம அந்த ஃபோன் நம்பர் லொகேஷன் செக் பண்ணலாம் என்றாள் திவ்யா. நம்பர் செக் பண்ணிய போது அது ஃபேக் ஐ டி மூலம் வாங்கப்பட்ட சிம் கார்ட் என்பது தெரிய வந்தது.

காவல் ரோந்துகளை தீவிரப்படுத்தினார்கள். ரம்யாவின் ஃபிரண்ட்ஸ் சில பேரிடம் விசாரித்தார்கள். வாகன தணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டது. ஜானு கவலையுடன் வீடு திரும்பினாள். மறுபடி அந்த ஆள் கால் செய்தால் உடனே தெரிவிக்கும்படி சொல்லி இருந்தாள் ஜானு. காலை 3 மணிக்கு ஜானுவுக்கு கால் வந்தது. ரெண்டு லட்சம் தானே கேட்டேன். அத கூட குடுக்க முடியாதா? என்றது முன்பு மிரட்டிய அதே குரல். இவள் நான் அரேஞ்ச் பண்ணுகிறேன் என்றாள். சரி மேடம் நான் அப்புறமா அட்ரஸ் மெசேஜ் பண்ணுறேன் என்றான்.இவள் காலையில் சுமதிக்கு ஃபோன் பண்ணி நாம பணத்தை ரெடி பண்ணுவோம் என்றாள். சரி மேடம். காலை 10 மணிக்கு எல்லோரும் ஸ்டேஷனில் கூடி இருந்தார்கள். சுமதி எப்படியோ நகையை வைத்து இரண்டு லட்சம் ரெடி பண்ணியிருந்தாள்.

அவன் மறுபடி 11 மணிக்கு ஃபோன் செய்தான்.3 மணிக்கு மவுண்ட் ஸ்டேஷன் வந்துடுங்க. நானே வந்து பணத்தை வாங்கிக்கிறேன் என்றான். போலீஸ் வேண்டாம் குழந்தைக்கு ஆபத்து வரும் என்றும் சொன்னான். சுமதியிடம் பணம் மஞ்சள் பையில் சுருட்டி கொடுக்க சொன்னாள். சுமதி கழுத்தில் இருந்த செயினில் ஒரு மைக்ரோ காமிரா பொருத்தி அனுப்பினாள் ஜானு. ஜானுவுக்கு பதட்டம் அதிகரித்தபடி இருந்தது.சுமதி செல்போன் ஆன் கண்டிஷனில் இருக்கும்படி செய்தார்கள். 3 மணிக்கு அவன் வரவில்லை. 4 மணிக்கு வந்தாள். அவளிடம் பணத்தை கொடுத்தாள் . குழம்பியவாரே குழந்தை எங்கே என்றாள். வீட்டுக்கு போய் பார் என்றாள் அவள்.உடனடியாக கிளம்பி வீட்டுக்கு போனாள் சுமதி. ஜானுவுக்கும் தகவல் சொன்னாள் . சுமதி வீடு திறந்து கிடந்தது. ரம்யா மயக்கமாக ஹாலில் இருந்த சோபாவில் கிடந்தாள். அவளை தூக்கிகொண்டு உடனடியாக ஹாஸ்பிடல் விரைந்தாள். ஜானு அவளிடம் இருந்த மைக்ரோ ஃபோன் வாங்கினாள். அதில் சுமதியிடம் பணம் வாங்கியவள் யார் என விசாரிக்க சொன்னாள்.

ரம்யாவுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. ஜானு நிம்மதி பெருமூச்சு விட்டாள்.சுமதியிடம் அந்த பெண் பற்றி விசாரித்தாள். அவள் நல்ல படித்தவள் போல இருந்தாள். அவள் தோற்றம் அவ்வாறு இருந்தது என்றாள் சுமதி. ராமயவிடம் விசாரித்த போது அன்று தனக்கு வயிற்று வலி ஏற்பட்டதாகவும் அதனால் உடனே ஒரு ஆட்டோவில் ஏறியதாகவும் சொன்னாள். அது இந்த பணம் வாங்கிய பெண்மணி தான் ஆட்டோ டிரைவர் ஆக இருந்ததாக அடையாளம் காட்டினாள். உடனே அத்தனை பெண் ஆட்டோ டிரைவர்களிடமும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டது. அதன் படியே நடத்தப்பட்டது. ஒரு விவரமும் சிக்கவில்லை. ரம்யா எங்கு தங்கியிருந்தாள் என கேட்ட போது தான் மயக்கத்தில் இருந்ததால் அது பற்றி தெரியவில்லை என்றாள். சுமதியிடம் ஒரு ஸ்டேட்மெண்ட் வாங்கி கொண்டனர் போலீசார்.

இரண்டு பேர் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். ஒரு ஆண் ஒரு பெண் . அவள் தைரியமாக பணத்தை வாங்கி சென்றிருக்கிறாள். ஜானுவுக்கு உறக்கம் வரவில்லை.எப்படியாவது இந்த பிரச்சனையை தீர்க்காவிடில் நிறைய பிள்ளைகள் கடத்தபடுவார்கள் என நினைத்தாள்.பிரேமா அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. ஜானுவிடம் வருண் பேசினான். இதெல்லாம் போலீஸ் வாழ்வில் சகஜம் என்றான். இல்லை வருண் எனக்கென்னவோ இன்னும் பிடிபடாமல் தான் இருக்கிறது எப்படியும் இதை சால்வ் செய்வேன் என்றாள். நாளைக்கு மீட் பண்ணலாமா என்றான். சரி வருண். அவனுக்காக கொஞ்சம் ஸ்வீட் பண்ணி எடுத்து போயிருந்தாள். எதுக்கு இதெல்லாம் என்றான். நீ ரொம்ப ஸ்வீட் இல்லயா அதுதான் என்றாள். ஓ நீ இப்படி கூட பேசுவாயா? ஜானு நீ இன்னமும் அதே நினைத்து கொண்டிருக்கிறாயா? அப்படியில்லை வருண். குற்றவாளி எதிரே இருந்தும் அரெஸ்ட் பண்ண முடியவில்லை என்றாள்.
அதெல்லாம் எல்லா கேசையும் முடிக்க முடியாது என்றான் வருண். விடைபெற்றுக்கொண்டாள் .


சுமதியை கண்காணிக்க சொல்லி இரண்டு பேரை மப்டியில் அனுப்பியிருந்தார்கள். சந்தேகபடும்படி எதுவும் இல்லை. சுமதியிடம் குழந்தை எப்படி இருக்கிறாள் என விசாரித்தாள் ஜானு. அவள் நார்மல் ஆகி விட்டாள். இப்போது எந்த பிரச்சனையும் இல்லை என்றாள். ஸ்ரீதர் ஃபோன் கால்ஸ், சுமதி ஃபோன் கால்ஸ், பார்வதி மற்றும் பிரதீபின் ஃபோன் கால்ஸ் போன்றவற்றை ஆராய்ந்தாள். ஒன்றும் பிடிபடவில்லை. நிச்சயதார்த்த போட்டோக்களை பார்த்து கொண்டிருந்தாள் மீரா. அக்கா நீ நிஜமாகவே அழகாக இருக்கிறாய் மண கோலத்தில் என்றாள் மீரா. அப்போது தீபு நினைவு வந்தது. பேசாமல் தீபுவிடம் இதை பற்றி பேசினால் என்ன என்று தோன்றியது. தீபுவுக்கு ஃபோன் செய்தாள். தீபு நான் கொஞ்சம் பிஸி பிறகு கூப்பிடுகிறேன் என்றாள். மாலை 4 மணி போல கூப்பிட்டாள். என்னாச்சு ஜானு ஏதும் பிரச்சனையா? என்றாள். அன்னைக்கு குழந்தை காணாம போச்சு அப்படின்னு சொன்னேனே. ஆமாம் நீ கூட அவசரமா போனியே. குழந்தை கிடைச்சுதா ? கிடைச்சுது. விவரங்களை சொன்னாள். சரி நான் பாஸ் கிட்டே பேசிட்டு சொல்லுறேன் என்றாள் தீபு.

என்ன தீபு இந்த கேஸ் எடுக்கலாம்னு சொல்லறியா ? பாவம் ஜானு ரொம்ப அப்செட். சரி டீடெயில் அனுப்ப சொல்லு நாமளும் முயற்சி பண்ணி பாக்கலாம் என்றான் ராம். ஜானுவிடம் சொன்ன போது ரொம்ப மகிழ்ச்சி அடைந்தாள் . ராமுக்கு அந்த விவரங்களை அனுப்பி வைத்தாள் . ஜானுவுக்கு தற்போது நிம்மதி உண்டாயிற்று. எப்படியும் தீபுவும், ராமும் இந்த கேஸ் சால்வ் செய்து விடுவார்கள் என்று நம்பினாள் . ராம் என்ன தீபு இந்த கேஸ் உனக்கென்ன தோன்றுகிறது என்றான் ராம்.பணம் வாங்கிய அந்த பெண் மீதுதான் என் கவனம் மொத்தம் இருக்கிறது. எக்ஸாக்ட்லி அந்த பெண் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்றான் ராம். ஜானு ராமிடம் பேசினாள். என்ன ஹெல்ப் வேணா கேளுங்க அவளை பிடிக்கணும் என்றாள். நாம பேசுறத யார் வேண்டுமானாலும் கேட்கலாம் அதனால் நானே இனிமே உங்களை நேரில் கூப்பிட்டு பேசுகிறேன் என்றான். ஓகே ராம் சார் என்றாள் உற்சாகத்துடன்.