இரவு 11
ராம் தன்னுடைய புதிய அலுவலக திறப்பு விழாவிற்கு ஜானுவை கூப்பிட்டிருந்தான். திவ்யாவும் வந்திருந்தாள். வருண்,ஜானுவோடு
வந்திருந்தான். நன்றாக வந்திருக்கிறது ஆபீஸ் வாழ்ததுக்கள் என்றாள் ஜானு. வருண் எப்போ ஜானு நமக்கு ப்ரமோஷன் என்றான் . மதியம் லஞ்ச் அரேஞ்ச் பண்ணியிருந்தான் ராம். தீபுவுக்கு பெருமையாய் இருந்தது. ஒரு ஆபீஸ் அதுவும் அவர்களுக்கென ஒரு சொந்த ஆபீஸ் .அவள் வந்தவர்களை வரவேற்று கவனித்து கொண்டிருந்தாள். ராம் அந்த கீதா என்னதான் பிரச்சனை அவளுக்கு என்றாள் ஜானு. அவளே அவளுக்கு பிரச்சனை. அவளால் இந்த சைல்ட் டிராஃபிக் ஃபீல்ட் விட்டு விலக முடியவில்லை என்றான்.சுமதி வீட்டுக்கு அவள் பையன் எப்படி போனான். அதுதான் மர்மமாய் இருக்கிறது என்றான் ராம்.இப்படியே போனால் பிரேமா மேடத்தை ட்ரான்ஸ்பர் செய்து விடுவார்கள் என்றாள் திவ்யா. திவ்யா சற்றே டல் ஆக இருப்பதை ராம் உணர்ந்திருந்தான். அவள் அந்த பிரியாணி விவகாரத்தில் கலந்து இருக்கக்கூடாது என்றே நினைத்தான். வருணும் ,ஜானுவும் விடை பெற்றுக்கொண்டார்கள். திவ்யா உங்களிடம் நிறைய பேச வேண்டும் என்றாள் தீபுவிடம். நிச்சயம் நேரம் கிடைக்கும் போது ஆபீஸ் வாருங்கள் என்றாள் தீபு.
கீதா தன் கணவருடன் வெளிநாட்டுக்கு தன் பையனோடு போய் விட தீர்மானித்தாள். இதை பரந்தாமனிடம் சொன்னாள். அவன் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. நானே இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்கிறேன் என்றான். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் நான் ஒரு பிரைவேட் ஏஜெண்டு மூலம் யார் என்னை கொலை செய்ய முயற்சித்தது, உன் குழந்தையை கடத்தியது யார் என்பதை கண்டுபிடிக்கிறேன் என்றும் சொன்னான். ஆனால் கீதா தன் கணவனுக்கு ஃபோன் செய்து அவனை உடன் வந்து அவளையும் பையனையும் அழைத்து போக சொன்னாள்.திவ்யா சில நாட்களாக டூட்டிக்கு வரவில்லை. அவள் வீட்டில் கேட்டாலும் சரியான பதில் இல்லை. ஜானு விசாரித்த போது அவள் பித்து பிடித்தாற்போல் இருப்பதாகவும் சில நாட்களில் சரியாகி பணிக்கு திரும்புவாள் என்றும் சொன்னார்கள்.ஆனால் இரண்டு நாட்கள் கழித்து திவ்யாவை காணவில்லை என போலீசில் கம்ப்ளைண்ட் செய்தார் திவ்யா அப்பா. திவ்யா ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. எல்லா இடங்களிலும் தேடி பார்த்தார்கள். ஆக்சிடென்ட், சூசைட் சம்பவங்களை ஆராய்ந்தார்கள். எங்கேயும் கிடைக்கவில்லை. இதை கேள்விப்பட்ட ராம் வருத்தமடைந்தான்.
சுமதியும், ஸ்ரீதரும் இதில் தங்களுக்கு சம்பந்தமில்லை என்று ராமிடம் சொன்னார்கள். மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் ஜானு தவித்தாள். இந்த ஸ்டேஷன் மேலும் மேலும் பிரச்சனைகளை சந்தித்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தாள். பிரேமாவும் தன் பங்குக்கு சில தனிப்படைகள் அமைத்து தேடினாள்.திவ்யா எங்கு போனாள் என்பதே புதிராக இருந்தது. வேறு வழியில்லாமல் திவ்யா காணவில்லை என செய்தியறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்கள் டிவியில்.உயரதிகாரிகள் பிரேமாவை வறுத்தெடுத்தார்கள். அவளை வேறு ஸ்டேஷன் மாற்ற முடிவும் எடுத்தார்கள். வருண் ஜானுவிடம் பேசினான். திவ்யா இப்படி செய்வாள் என எதிர்பார்க்கவில்லை என்றான். நீ என்னிடம் மனம் விட்டு பேசி எத்தனை நாளாகிறது? நான்தான் உனக்காக காத்துக்கிடக்கிறேன். எல்லா பிரச்சனையும் சீக்கிரம் தீர்ந்து விடும் எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது என்றாள்.
பரந்தாமன் பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்ஸி நடத்தும் கதிர் என்பவனை நியமித்தான். அவன் நிச்சயம் யார் இந்த கொலை முயற்சியின் சூத்திரதாரி என்பதை கண்டுபிடிப்பேன் என்று பரந்தாமனுக்கு வாக்கு கொடுத்தான். கதிர் சின்ன பையன்.பயம் கிடையாது என்று பிரேமாவிடம் சொன்னான். கதிர் தன்னுடைய விசாரணையை கார் பார்க்கிங்கில் நோட்டீஸ் கிடைத்ததில் இருந்து தொடங்கினான். பரந்தமானுக்கு தெரியாயத நம்பர் மூலமாக அழைப்பு வந்தது. உங்கள் பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து வைக்கிறேன் . நான் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்றான். அதெல்லாம் வேண்டாம் என்று அந்த ஃபோன் இணைப்பை துண்டித்தார் .
ராமை சந்திக்க அப்பாய்ண்ட்மென்ட் கேட்டிருந்தான் கதிர். என்ன விஷயமாக என விசாரித்தான் .ரம்யா குழந்தை கடத்தல் விவகாரம் சம்பந்தமா சில தகவல்கள் தேவைப்படுது என்றான். போலீஸ் அதிகாரி ஜானுவை கேட்டாத்தான் முழு தகவலும் கிடைக்கும் என்றான். அவங்கதான் உங்களை ரெஃபர் பண்ணினாங்க என்றான் கதிர்.சரி நாளைக்கு சாயங்காலம் 5 மணிக்கு ஆபீஸ் வந்துடுங்க என்றான்.
எதுக்காக திடீர்னு ரம்யா கடத்தல் விவகாரத்தை திரும்ப எடுக்கறீங்க என்றான் ராம். அது வந்து உண்மைய சொல்லணும்னா பரந்தாமன் சாரை யாரோ கொல்ல முயற்சி பண்ணியிருக்காங்க. அது யாருன்னு கண்டுபிடிக்க என்னை அப்பாய்ன்ட் பண்ணியிருக்காரு .. ஓ அப்படியா உங்களுக்கு என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்ணுறேன் . ரம்யாவ கடத்துன கீதா என்கிற லேடி அட்ரஸ் தரேன் அவங்க கிட்ட வேணா விசாரிச்சு பாருங்க .. சரி கொடுங்க அவங்களை போலீஸ் அரெஸ்ட் பண்ணலையா? அவங்க பெரிய இடத்து சப்போர்ட் உள்ளவங்க என்றான் ராம். ராம் சுமதிக்கு ஃபோன் செய்தான். என்ன மேடம் சைலன்ட் ஆ இருக்கீங்க என்றான். அதெல்லாம் ஒண்ணும் இல்ல உள்ளுக்குள்ள நெருப்பு இன்னும் அணையாமத்தான் இருக்கு என்றாள். உங்களை விசாரிக்க கதிர் அப்படின்னு ஒரு ஆள் பரந்தாமன் நியமிச்சு இருக்காரு அவன் கூடிய சீக்கிரம் வருவான்.அதெல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. நான் ஒரு இன்ஃபர்மேஷனுக்காக இதை சொன்னேன் என்றான். நாங்க எல்லாத்துக்கும் தயார் என்றாள்.
ராமுக்கு நிஜத்தில் வருத்தமாக இருந்தது நல்லா இருக்க வேண்டிய குடும்பம் இப்படியாய் பழி வாங்க கொலை எண்ணத்தோட சுத்திக்கிட்டு இருக்காங்களே என வருத்தப்பட்டான். தீபுவிடம் இதை சொன்னான். நாம நம்மலால முடிஞ்ச ஹெல்ப் பண்ண முடியும் அதுக்கப்புறம் அவங்க தலையெழுத்து என்று சொன்னாள். ஜானு ஃபோன் பண்ணியிருந்தாள் ஒரு சர்ப்ரைஸ் சந்தோஷமான நியூஸ் சாயங்காலம் வீட்டுக்கு வாங்க சொல்லுறேன் என்றாள். தீபுவையம் கட்டாயம் கூட்டி வாங்க என்றாள்.
இப்பொதிருக்க நிலைமையில் பரந்தாமன் அரெஸ்ட் தான் சந்தோஷமான நியூஸ் . பிரேமா இருக்கும் வரை அது நடக்க போவதில்லை.தீபு அவங்க அம்மாவாக போகிறாங்களா இருக்கும். வருணுக்கு ஏதாவது லாட்டரி அடிச்சிருக்குமோ என்றான். மாலை அவள் வீட்டுக்கு போன போது வீடே சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தது. மீரா அவள் அம்மா இருவரும் வந்திருந்தார்கள். ஜானுவுக்கு ப்ரமோஷன் கிடைத்து அதே ஸ்டேஷன் எஸ் ஐ ஆகிவிட்டிருந்தாள் . அப்போ பிரேமா அவங்களை வேற ஸ்டேஷன் மாற்றி விட்டாங்க என்றாள் ஜானு. கேக் வெட்டினார்கள். திவ்யா இருந்திருந்தால் இன்னும் சந்தோஷமாக இருக்கும் என்று மீரா சொன்னாள். இரவு டின்னர் முடித்து ராமும், தீபுவும் வீடு திரும்பினார்கள்.
புது பதவி கிடைத்தவுடன் அவள் முதலில் அரெஸ்ட் செய்ய நினைத்தது முனீரையும் , கீதாவையும் தான். அதற்கான ஆதாரங்களை திரட்ட தொடங்கியிருந்தாள். பரந்தாமன் ஃபோன் பண்ணி வாழ்த்துக்கள் சொன்னார். கதிர் ஜானுவை மறுபடி சந்தித்தான். வாழ்த்துக்கள் மேடம் என்றான். எப்படி போகிறது உங்கள் விசாரணை என்றான். கீதா மேடம் சந்திக்க மறுத்து விட்டாங்க. அவங்க வெளிநாடு போக போறாங்கலாம் என்றான். அவங்க ஹஸ்பண்ட் வந்திருக்காரு அப்படின்னு சொன்னாங்க.
சரி கதிர் ஏதாவது தகவல் வேணும்னா ஃபோன் பண்ணுங்க என்றாள். விடைபெற்று கொண்டான்.கதிர் ஸ்ரீதரை சந்தித்தபோது தான் ரம்யா இறந்த விஷயம் தெரிய வந்தது அதோடு காலாவதியான மருந்தால் அவள் இறந்ததும் தெரிய வந்தது. ரொம்பவே வருத்தப்பட்டான். அதே சமயம் ஸ்ரீதர் எந்த கேள்விக்கும் சரியான பதிலை சொல்லவில்லை. சுமதி இது எங்களுக்கு தேவையில்லாத விஷயம் என்றாள். பரந்தாமன் ஃபோன் பண்ணியிருந்தார்.கார் பார்க்கிங் சிசிடிவி ஃபுடேஜ் ரெடி ஆக இருப்பதாய் சொன்னார். கதிர் நான் உடனே வருகிறேன் என்றான்.
கார் பார்க்கிங்கில் ஒரு ஆள் முகத்தை மூடியபடி வந்து ஸ்டிக்கர் ஒட்டுவது தெரிந்தது. அவன் கையில் வேறெந்த அடையாளமும் இல்லை. அவனுடைய கண்கள் கொலை வெறியில் இருந்தன.அதே சமயம் கார் டையர் பகுதியில் ஏதோ பண்ணுவதும் தெரிந்தது. இதனால் தான் கார் டையர் வெடித்திருக்கிறது என்றான். மேற்கொண்டு என்ன பண்ண போகிறாய் கதிர் என்றான். எனக்கு சுமதி, ஸ்ரீதர் மேல் தான் சந்தேகமாய் இருக்கிறது என்றான். போதிய ஆதாரங்களுடன் நான் மீண்டும் உங்களை சந்திக்கிறேன் என்றான். கீதாவுக்கு மிரட்டல் மெசேஜ் வந்தது. நீ ஸரண்டர் ஆகவில்லை என்றால் உன் புருஷன் உயிரை எடுப்பதை தவிர வேறு வழியில்லை என்றது மெசேஜ். பரந்தாமன் இந்த மாதிரி ஆயிரம் மெசேஜ் பார்த்திருக்கேன் என்றான். கீதா நிஜமாகவே பயந்து போனாள். இரண்டாம் நாள் கீதாவின் கணவன் காணாமல் போனான். கீதா பிரேமாவிடம் பேசினாள். நான் ஸரண்டர் ஆகிறேன் எனக்கு என புருஷன்தான் முக்கியம் அதோடு நான் எதிர் சாட்சி ஆக போகிறேன் என்னை மன்னித்து விடுங்கள் என்றாள். பரந்தாமன் கீதாவை முடித்து விட தீர்மானித்தான் . முனீருக்கு ஃபோன் செய்தான் .
எனக்கு ஒரு ஆளை முடிக்கணும் என்றான்.எவ்வளவு 50 லட்சம் என்றான் முனீர். ஆனா வேலை சுத்தமா இருக்கணும் என்றான். போட்டோ அனுப்புங்க என்றான். கீதா போட்டோவை பார்த்ததும் அதிர்ந்தான். இவளா இவளை ஏற்கனவே முடிக்க பிளான் போட்டோமே ஜான் மூலமா என யோசித்தான். கீதா ஜானுவுக்கு ஃபோன் பண்ணினாள். நான் ஸரண்டர் ஆகிறேன் அதோடு என் ஹஸ்பண்ட் இரண்டு நாட்களாக காணவில்லை என்றாள். அவள் விஷயத்தை சொல்லி முடித்த ஒரு மணி நேரத்தில் அவள் கணவன் வீடு திரும்பினான். ராமுக்கு இந்த தகவல் கிடைத்தது. கதிர் எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்தான். ஸ்ரீதரை ஃபாலோ செய்தான். கீதாவின் கணவன் முன் ஜாமீன் எடுப்போமே என்றான். இப்போதைக்கு எதுவும் செய்ய வேண்டாம் என்றான். முனீர் கீதாவை கோர்ட்டில் வைத்தே கொல்ல திட்டம் போட்டிருந்தான். அதற்கான ஆட்களை தயார் படுத்தி இருந்தன. ஜானு , ராம் இருவரும் கீதா உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்திருந்தனர். முனீர் மூலமாக கீதா உயிர் போக பிளான் போடப்பட்டு இருக்கிறது என்பதை அவர்கள் அறியவில்லை. சுமதி , ஸ்ரீதர் இருவரும் நடப்பதை கவனத்துடன் கண்காணித்து வந்தனர்.
ராம், தீபுவுடன் கோர்ட்டில் ஆஜர் ஆகி இருந்தான். அவனுக்கு கீதா பரந்தாமன் பற்றி வாக்குமூலம் கொடுப்பாளா என்பதில் சந்தேகம் இருந்தது.முனீரின் ஆட்கள் கோர்ட் உள்ளே ஒரு ஜீப்பில் வந்து இறங்கினர்.