இரவு 10
ராமுக்கு இரவெல்லாம் தூக்கம் இல்லை. ஒருபுறம் சுதா , பாண்டி மரணம் மறுபுறம் சுமதி ,ஸ்ரீதர். தான் செய்வது சரியா சுமதி ஸ்ரீதரின் குற்றத்தை மறைப்பது எந்த வகையில் நியாயம் என தன்னைத்தானே கேட்டுக்கொண்டான். இழப்பு அவர்களுக்குத்தான். ஒரு தாயாக சுமதிக்கு ரம்யாவின் மறைவு அவளை தடுமாற செய்து இருக்கிறது.சுதா இறப்புக்கு யார் காரணம் என்று இன்னும் தெரியவில்லை. போலீஸ் அந்த பிரியாணி கடையை திறந்து சோதனை செய்தது. அதன் முதலாளியையும் அரெஸ்ட் செய்தது. ராம் அந்த கடையை சுற்றி வந்தான். வேஸ்ட் டப்பாவில் அந்த காலி இருமல் மருந்து டப்பா கிடைத்தது. மேற்கொண்டு விசாரித்ததில் அது தடை செய்யப்பட்ட இருமல் மருந்து உயிருக்கு ஆபத்தை உண்டு பண்ணக்கூடியது என்றும் தெரிந்தது. தீபு சார் நீங்கள் மிகவும் களைப்படைந்து விட்டீர்கள் ஒரு பிரேக் எடுத்துக் கொள்ளுங்கள் என்றாள். சரி தீபு நீ சொல்வதும் சரிதான். நான் ரொம்பவும் தீவிரமாக சிந்திக்கிறேன் அதனால்தான் என்னால் சுமதி செய்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றான்.
ஜான் தன்னுடைய நார்மல் நிலைக்கு வந்து விட்டான். அவன் எப்போதும் போல சுறுசுறுப்பாக தன் பணியை துவங்கி விட்டான்.அவனுக்கு முனீர் சப்போர்ட் ஆக இருந்தான். ஜானு சுதாவின் ஃபோன் மற்றும் தொடர்புகளை ஆராய்ந்தாள். சொல்லிக்கொள்ளும்படி ஏதுமில்லை. சுதாவே போய் விட்டாள் அப்புறம் என்ன விசாரணை என ஸ்டேஷனில் பேசிக்கொண்டார்கள். ஜானு பிரச்சனையின் மையத்தில் இருந்து யோசித்தாள். அவளுடைய பார்வையில் சுமதி செய்தது சரி. அதில் நியாயம் இருந்ததாகவே நினைத்தாள். குழப்பம் இல்லை.பிரியாணி கடை முதலாளியை மிகவும் கவனத்துடன் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார்கள். நெருக்கடி காரணமாக பிரேமா சஸ்பென்ஷன் ரத்து செய்யப்பட்டது . திரும்ப டூட்டியில் சேர்ந்து விட்டாள். அவள் திவ்யாவை திரும்ப திரும்ப விசாரித்தாள். சுதாவுக்கு பிரியாணி வாங்கி கொடுத்த திவ்யா தடுமாறி போனாள்.
இரண்டு நாட்கள் கழித்து ராம் சற்று நிதானமடைந்தவனாக இருந்தான். நாம் இப்போது எங்கிருந்து தொடங்குவது தீபு என்றான். அந்த கடையின் முதலாளியை பார்த்து பேசுவோம் என்றாள். நான் ஸ்ரீதரை சந்திக்க வேண்டும் சுமதிக்கு ஃபோன் போடு என்றான். சுமதி ஸ்ரீதர் வெளிநாட்டில் இருப்பதாக சொன்னாள். இவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. நான் உங்களை சந்திக்கலாமா என்றான். நிச்சயமாக என்னுடைய ஹார்ட் டிஸ்க் பார்த்திருப்பீர்கள் என்றாள். இவன் நான் நேரில் வந்து பேசுகிறேன் என்றான். மறுநாள் ஜெயில் அதிகாரியிடம் பர்மிஷன் வாங்கி கடை முதலாளியிடம் சிறையில் சந்தித்து பேசினான். மொத்தமும் போச்சு தம்பி. அந்த ரஹீம் வெளிநாட்டுக்கு ஓடி விட்டான் என்றார். அவன்தான் தம்பி அன்னிக்கி சப்ளை பண்ணிட்டு இருந்தான். உங்க கடையில வேலை பார்த்த பையனா ? ஆமா தம்பி. அவனுக்கு உடம்பு சரியில்லாம இருந்ததா ஆமா தம்பி தொண்டை வலி அப்படின்னு இருமல் மருந்து வாங்கி வச்சிருந்தான். அவனுக்கு அடிக்கடி இருமல் வரும் . நீங்க ஜாமீன் வாங்கலியா .. வக்கீல்கிட்ட சொல்லி இருக்கேன் என்றார்.
ஜானுவிடம் இருமல் மருந்து விவாகரத்தை சொன்னான். நாங்க அந்த ரஹீம் பிடிக்க ஏற்பாடு பண்ணிட்டு இருக்கோம் என்றாள். நான் சுமதியை பார்க்க போகிறேன் என்றான். சரி ஆனா அவங்கள ரொம்ப தொந்தரவு பண்ண வேண்டாம் என்றாள். சுமதி நாங்க யாருக்கும் எந்த கெடுதலும் பண்ணல. எங்களுக்கு நடந்த மாதிரி யாருக்கும் நடக்க கூடாதுன்னுதான் அப்படி பண்ணினோம் என்றாள். நீ செஞ்சத பத்தி குறை சொல்ல வரலை. நீங்க தொடர்ந்து அதை செஞ்சா உங்களுக்கு ஆபத்து அப்படின்னு சொல்லத்தான் வந்தேன் என்றான். எங்க பொண்ணே போன பிறகு நாங்க நடைபிணமாத்தான் வாழ்ந்துகிட்டு இருக்கோம்.அவர் சம்பாதிக்க மட்டும் வெளிநாடு போகலை. எங்களால் முடிஞ்ச அளவுக்கு அந்த கும்பலை ஒழிக்க முயற்சி பண்ணுவோம் என்றாள். ராம் விடைபெற்றுகொண்டான்.
தீபு சுமதி ரொம்ப பிடிவாதமா இருக்காங்க. அந்த மரணம் அவங்களை ரொம்பவே பாதிச்சிருக்கு என்றான். ரஹீம் இரண்டு நாட்களில் ஏர்போர்ட்டில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டான். அவன் தனக்கு எதுவும் தெரியாது என்றான். இருமல் மருந்தை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றான். ராம் இப்போது சுமதியின் அடுத்த இலக்கு யாராக இருக்கும் என யோசித்தான். பரந்தாமன் மற்றும் கீதா மேல் நிச்சயமாக இருக்கும் என தோன்றியது. கீதாவுக்கு ரம்யா கடத்தலில் நேரடி தொடர்பு உண்டு. பரந்தாமனுக்கு நேரிடையான தொடர்பு இல்லை. ஜானும், முனீரும் இதில் சம்பந்தப்படாதவர்கள். ஸ்ரீதர் வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் தன்னை சந்திக்கும்படி சொல்லி இருந்தான் ராம். சுமதியும் சரி என்று சொல்லி இருந்தாள்.
கீதா பரந்தாமனுக்கு ஃபோன் செய்தாள். என்ன சார் நடக்குது உங்க வொய்ஃப் ஸ்டேஷன் ல கைது பண்ண ஆளுங்க செத்துகிட்டே இருக்காங்க என்றாள். அதுதான் எனக்கும் புரியல. அவ இப்போதான் டூட்டில ஜாயின் பண்ணியிருக்கா எல்லாம் சரி பண்ணிடுவா என்றான் .
கீதா ஜானை கண்காணித்து வந்தாள். அவன் முனீரின் பாதுகாப்பில் இருக்கும் வரை ஒன்றும் செய்ய முடியாது என்பதை உணர்ந்து இருந்தாள். கடைக்காரர் ஜாமீனில் வெளிவந்து மறுபடி கடை நடத்த தொடங்கி விட்டார்.பரந்தாமன் காரில் ஒட்டியிருந்த ஸ்டிக்கர் சரியாக கவனிக்கவில்லை. ஏதோ கார் நோட்டீஸ் என்று இருந்தார். இரண்டாம் முறை கவனித்த போதுதான் அடுத்து நீதான் என எழுதி இருந்ததை கவனித்தான் . அவன் அதை அலட்சியபடுத்தினான் .அடுத்த அரை மணியில் டையர் வெடித்து தடுப்பு சுவர் மீது கார் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.ஆம்புலன்ஸ் மூலம் ஹாஸ்பிடல் அழைத்து போனார்கள். பரந்தாமன் மயக்கத்தில் இருந்தான். போலீஸ் வழக்கு பதிவு செய்தது . அந்த நோட்டீஸ் பற்றி பரந்தாமன் பிரேமாவிடம் சொன்னான். ஜானுவுக்கு இந்த விவகாரம் தெரிய வந்தது. ஜானு ராமிடம் சொன்னாள்.ராம் எப்படியாவது சுமதி இதில் தலையிடாமல் இருக்க வேண்டும் என நினைத்தான்.
ரஹீம் சிறையிலேயே தற்கொலை முயற்சி செய்தான். அவனையும் சிகிச்சைக்காக ஹாஸ்பிடல் சேர்த்தார்கள். பரந்தாமன் இரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் கார் அப்பளம் போல நொறுங்கி போயிருந்தது பிழைத்ததே பெரிய விஷயம் என்றார்கள். ரஹீமை பார்க்க ராம் போயிருந்தான். இருமல் மருந்து யூஸ் பண்ணியது உண்மை ஆனால் இந்த பாட்டில் இல்லை என்றான். யாரோ வேண்டுமென்றே என்னை மாட்டி விட்டு இருக்கிறார்கள் என்றான்.ராம் அப்புறம் ஏன் வெளிநாடு போனாய் என்றான்.அவன் மௌனமாக இருந்தான்.சொல்லமுடியாத காரணமாக இருக்கலாம். சுமதி ஸ்ரீதர் வெளிநாட்டில் இருந்து வந்து விட்டதாக சொன்னாள். இவன் உடனே போய் அவனை பார்க்க துடித்தான். அவன் போன நேரம் வீட்டில் ஸ்ரீதர் இல்லை. புதிய கார் ஒன்று நின்றது. வெளியே போயிருக்காரு இப்போ வந்துடுவாறு என்றாள்.
அரைமணி நேரத்தில் வந்து விட்டான். சுமதி எல்லாம் சொன்னாள். எங்களுக்கு உயிர் பயம் இல்லை. பயமெல்லாம் அந்த பரந்தாமனுக்கும், கீதாவுக்கும் தான் என்றான். ராம் திகைத்து போனான். நீங்க என்ன சொல்லறீங்க. பரந்தாமன் ஜஸ்ட் எஸ்கேப் ஆயிட்டான். ராம் எதுவும் சொல்ல வார்த்தையில்லாமல் நின்றான். சுதா பிரியாணியில் தடை செய்யப்பட்ட இருமல் மருந்து கலந்ததும் நான்தான்..திவ்யாவுக்கும் இது தெரியும் என்றான் . ராம் நீங்க எதைபத்தியும் கவலைப்பட வேண்டாம்.நாங்க எங்கள் பொண்ணுக்காக எதையும் செய்வோம் . ராம் சொல்லாமல் கிளம்பினான். தீபு ஸ்ரீதர் என்ன சொன்னாரு என்றாள். ராம் அவர் பரந்தாமனை பழி வாங்க முடிவு பண்ணியிருக்காரு ..
ஜான் அன்று அதிகாலையில் படுக்கையிலேயே மரணம் அடைந்த சேதி அறிந்து ராம் அவன் வீட்டுக்கு போனான். முனீர் வந்திருந்தான். சிகரெட் பிடிக்கும்போதே நின்னுடுச்சு என்றாள் ஜானின் மனைவி. ஜானின் வண்டியை ஆராய்ந்து அதில் இருந்த சிகரெட் பண்டிலை பத்திரப்படுத்தினான். போலீஸ் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை . சிகரெட்டை பரிசோதனைக்கு அனுப்பினான் ராம். கீதா நிம்மதி அடைந்தாள். அந்த சிகரெட் வெளிநாட்டில் இருந்து வந்தது என்று முதல் நாள் ஒருவர் கொடுத்து போனதாக ஜானின் மனைவி சொன்னாள். அவளுக்கு அந்த ஆளை பற்றிய வேறு அடையாளம் தெரியவில்லை. அது ஒரு புது கார் என்று மட்டும் சொன்னாள் . ராம் அந்த காரை அவளுக்கு போனில் காட்டினான். ஆமாம் இந்த கார் தான் என்றாள். ஸ்ரீதர் கார் தான் அது. ராம் சந்தேகப்பட்டபடி சிகரெட்டில் விஷ ரசாயனம் கலக்கப்பட்டு இருந்தது.
முனீர் ஜானின் இறுதி சடங்கில் கலந்து கொண்டான்.ராம் அந்த நாளை மறக்கவில்லை. இன்னும் எத்தனை கொலைகளை ஸ்ரீதர் பண்ண போகிறானோ என அச்சமாக இருந்தது. வருண் ராமுக்கு ஃபோன் செய்தான். எப்படி இருக்கீங்க என்றான். நல்லாயிருக்கேன் ஆனா நான் நல்லாயில்லையே என்றான் வருண். நீங்க ஜானுவுக்கு ஏதாவது தொல்லை கொடுத்துகிட்டே இருக்கீங்க என்றான். இவன் பதில் சொல்லவில்லை. ஃபோன் வைத்துவிட்டான். கீதா பரந்தாமனை போய் வீட்டில் பார்த்தாள். என்ன ஆச்சு? ஆக்சிடென்ட் எப்படி நடந்தது என்றாள். இவன் நடந்ததை விவரித்தான். இவள் ஆறுதல் சொல்லிவிட்டு வெளியே வந்தாள். அவன் அவளையே பார்த்து கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றான். கீதா காரை எடுத்தாள். அதில் ஒரு வெளிநாட்டு கார் பொம்மை இருந்தது. அந்த பொம்மை ரிமோட் கார் கீதாவின் மகனுக்கு ரொம்ப பிடித்திருந்தது .
கீதா ஷாப்பிங் போய்விட்டு திரும்போது அவள் மகனை காணவில்லை. துடித்து போய்விட்டாள். அக்கம் பக்கம் விசாரித்தாள். பரந்தாமனுக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னாள். அவன் உடனே வந்தான். எல்லா இடங்களிலும் தேடினார்கள். மாலை ஆகிவிட்டது. கீதா அழுதாள். அவன் வைத்திருந்த ரிமோட் கார் உள்ளே ஒரு சீட்டு இருந்தது. அடுத்து நீதான் என குறிப்பிடப்பட்டு இருந்தது. கீதா மகனை கண்டுபிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. போலீஸ் சுறுசுறுப்பாக இயங்கியது. பிரேமா எல்லா போலீசையும் முடுக்கி விட்டாள். ஸ்ரீதர் கீதாவுக்கு ஃபோன் செய்தான் பையன் என்கிட்டதான் இருக்கான். நிறைய டாய்ஸ் இருக்கு விளையாட. அதான் விளையாடுகிறான் என்றான். கீதா யாருடா நீ என்றாள். ரம்யா அப்பா என்றான். ராம் ஸ்ரீதர் வீட்டுக்கு விரைந்தான் வீடு பூட்டியிருந்தது. சுமதிக்கு ஃபோன் செய்தான் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. அந்த பையன் வீட்டு வாசலில் அழுது கொண்டிருந்தான். ராம் ஜானுவுக்கு ஃபோன் செய்து பையன் கிடைத்துவிட்டான் என சொன்னான்.