இரவு 20
ஆபத்து வரும் முன் களைவதே நல்லது என ராம் தீர்மானித்தான். மீரா விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என உள்ளுணர்வு சொன்னது. அஜய் படித்த அகாடமியில் அவன் வீட்டு அட்ரஸ் வாங்கினான். ஜானுவிடம் இது பற்றி சொல்லலாமா என யோசித்தான். அவளுக்கு ஃபோன் பண்ணினான். என்னாச்சு ராம் சார் அந்த அஜய் விஷயத்துல என்ன முடிவு எடுத்து இருக்கீங்க ஜானு? ஏதோ சின்ன பையன் அப்படின்னு பார்த்தேன். நீங்க எனக்காக ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா ராம் சார் சொல்லுங்க ஜானு . அஜய் ஃபேமிலியை பார்த்து ஒரு ஒரு வார்த்தை சொல்லிட்டு வாங்க . அப்படியும் அவன் கேட்கலை அப்படின்னா பார்த்துக்கலாம் என்றாள் . சரி ஜானு நான் பார்த்துக்கிறேன் . ராம் காலை 8 மணிக்கெல்லாம் அஜய் வீட்டுக்கு போய்விட்டான். சராசரியான குடும்பம். வீட்டுக்கு ஒரே பிள்ளை. யார் சார் வேணும் என்றார் அஜய் அப்பா. நான் ராம் மீராவோட ப்ரதர். யாரு மீரா ? உங்களுக்கு தெரியாது உங்க பையனுக்கு தெரியும் என்றான். அஜய் அஜய் என குரல் கொடுத்தார். உள்ளே வாங்க சார் பேசலாம் என்றார். உள்ளே போய் நடந்ததை சொன்னான். இனிமே இது மாதிரி நடக்காம பார்த்துக்குங்க என்றான் ராம். நிச்சயமா சார். அஜய் தோய்ந்த முகத்துடன் வீட்டுக்குள் சென்றான்.
ஜானுவுக்கு ஃபோன் பண்ணி தான் அஜய் அப்பாவிடம் பேசியதாகவும் இனி அவன் பிரச்சனை பண்ண மாட்டான் எனவும் சொன்னான். ரொம்ப தாங்க்ஸ் ராம் சார். ரெண்டு நாளா சரியான தூக்கம் இல்லை அவ இப்போதான் படிச்சு முன்னேறனும்னு நினைக்கிறா. நான் தலையிட்டா அது நல்லா இருக்காது அதுதான் உங்களையே பார்க்க சொன்னேன். இட்ஸ் ஓகே என்றான் ராம். பாண்டியின் உறவினரான குமாரை யார் சுமதியை கொள்ள தூண்டினார்கள் என்பதை கண்டுபிடிக்க விரும்பினான் ராம். பாண்டி இறந்த போது அவன் வீட்டுக்கு ஏற்கனவே போய் இருக்கிறான்.இப்போது கதிரையும் கூட அழைத்துக்கொண்டு போனான். இவங்ககிட்ட கேட்டா சொல்லுவாங்களா சார் . எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு.குமார் ஜெயிலிலே இருக்குறதுனால அவங்க சம்பந்தபட்ட ஆள் மேல கோவமாய் இருக்கலாம் . ஓ அதுவும் சரிதான் என்றான் கதிர். நீ பாண்டி இறந்தப்போ வெளிநாட்டில் இருந்ததாகவும் இப்போது தான் வந்ததாகவும் சொல். மத்ததை நான் பார்த்துக்கிறேன் . சரி சார்.
பாண்டி மனைவி வீட்டு வாசலில் எதையோ காயப்போட்டு கொண்டிருந்தாள். கதிர் அழுதவாறே பாண்டி பாண்டி என்றான். இப்போதான் வெளிநாட்டிலே இருந்து வந்தாரு என்றான் ராம் . இன்னுமா பாண்டிய போட்டவங்ககளை சும்மா விட்டு வச்சிருக்கீங்க என்றான் கதிர். அது ஒரு நர்ஸ் அத எங்க சித்தப்பா பையன் கொன்னுட்டான் என்றாள். யாரு குமாரா என்றான் கதிர். அவனைத்தான் ஜெயில்ல போட்டுட்டாங்க .. எங்க அண்ணன் ரவிக்குதான் எல்லாம் தெரியும் என்றாள். நமக்கு தெரிஞ்ச வக்கீல் இருக்காரு அவரை விட்டு பேச சொல்லவா? ரவி நம்பர் கொடுங்க என்று வாங்கினான்.கொடுத்தாள். செலவுக்கு கொஞ்சம் பணம் அவளிடம் கொடுத்தான் ராம்.ராமும் ,கதிரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.
கதிர் ரவிக்கு ஃபோன் பண்ணவா என்றான். இப்போது வேண்டாம் சந்தேகம் வரும் அப்புறம் பண்ணிக்கொள்ளலாம். ஓகே சார்.
ரவி கந்தவேலுவை சந்தித்தான். என்ன தலைவரே குமாரை போலீஸ் பிடித்து கொண்டு போய் இத்தனை நாளாவுது என்றான் ரவி. எனக்கென்னப்பா தெரியும் மினிஸ்டர் குழந்தைவேலு சொல்லித்தான் துப்பாக்கி குடுத்தேன். இவன் அதை ஸ்பாட் ல போட்டுட்டு ஓடி வந்தா நான் என்ன பண்ணுறது. இந்த ஜானு வேற அந்த கேஸ் விட மாட்டேன் என்கிறாள். சரி நான் ஒண்ணு பண்ணுறேன் இன்னிக்கி சாயங்காலம் மீட்டிங் வருவாரு அப்ப அவர் காதுல போட்டு வைக்கிறேன் என்றான். சரிங்க தலைவரே.
இப்போ ரவிக்கிட்ட பேசி என்ன ஆக போகுது என்றாள் தீபு. அவன் ஒரு வேளை சொல்லலாம் இல்லையா ? அதெல்லாம் சொல்ல மாட்டான்.வேணும்னா கந்தவேலுக்கு தெரிந்திருக்கும் என்றாள் . நீ சொல்லுறதும் சரிதான். எதுக்கும் ரவிக்கு ஃபோன் பண்ணி பார்க்கிறேன் என்றான் ராம். ரவி போனை எடுத்தான். குமார் கேசுல ஆஜர் ஆக வக்கீல் வேணும்னு பாண்டி சம்சாரம் சொன்னாங்க. அதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம். நான் மினிஸ்டர் லெவல் ஆளுங்க கிட்ட பேசி அப்பாய்ண்ட்மென்ட் வாங்கி தரேன் என்றான் ராம். நாங்களே மினிஸ்டர் சொல்லிதான் இதை செஞ்சு அவஸ்தைப்படுறோம்.. நீ வேற இடையில போனை வைய் என்றான் ரவி. ராம் இதை எதிர்பார்த்திருந்தான். மினிஸ்டர் யாரோ சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். ஜானுவிடம் இதை சொன்னான். நான் இதை உடனடியாக மேலிடத்தில் சொல்லி குமாருக்கு அதிக பாதுகாப்பு கொடுக்க ஏற்பாடு செய்கிறேன் என்றாள் .
பரிதி சிறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்ய முயன்று தற்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தான். ராமும், ஜானுவும் அவனை போய் பார்த்தார்கள். பரிதி என் குடும்பம் ஆபத்தில் இருக்கிறது. ஹெல்த் மினிஸ்டர் குழந்தைவேலு சம்பந்தப்பட்டு இருப்பதால் என் குடும்பத்தாரை மிரட்டுகிறார்கள் என்றான்.நீ பயப்படாதே தைரியமாக இரு . நாங்கள் அவரிடம் பேசுகிறோம் என்றாள் ஜானு. எங்களை காப்பாத்துங்க மேடம் என அழுதான்.ராமும் , ஜானுவும் அங்கிருந்து கிளம்பினர். இப்போ என்ன பண்ணுறது ராம். நாம நேரிடையா மினிஸ்டர் கிட்ட பேச முடியாது. பொறுத்திருந்து பார்ப்போம் என்றான். இதற்கிடையில் ஸ்ரீதர் ராமை சந்தித்தான். நான் வேணும்னா இந்த கேஸ் வாபஸ் வாங்கிக்கிறேன் என்னால உங்க எல்லாருக்கும் பிரச்சனை என்றான். அதெல்லாம் ஒண்ணுமில்லை. இல்லை நீங்க மினிஸ்டர் லெவல் பிரஷர் எல்லாம் ஹாண்டில் பண்ண வேண்டியிருக்கு அதுவும் இப்போ என்னை நம்பி பார்வதி வேற இருக்கா. அதனாலதான் யோசிக்கிறேன். நீங்க கவலைப்படாதீங்க ஸ்ரீதர். ஜானு எல்லாம் பாரத்துக்குவாங்க என்றான் ராம்.
ஜானுவுக்கு குழந்தைவேலுவிடம் இருந்து கால் வந்தது. என்னம்மா நீ இந்த போஸ்ட்ல இருக்கிறதுல உனக்கு விருப்பம் இல்லையா. சஸ்பெண்ட் இல்லை ஒரேடியா வீட்டுக்கு அனுப்பவா ? என்ன விஷயம் சார். நடிக்காதே அந்த குமாரை ரிலீஸ் பண்ணுற வழியை பாரு. நீ கஞ்சா கேசெல்லாம் பிடிச்சு பேர் வாங்குன ஆளுன்னு தெரியும். நாம கோர்ட்ல சந்திப்போம் என்றாள். குமார் , பரிதி எல்லாம் கோர்ட் வாசப்படிய கூட மிதிக்க மாட்டாங்க. சரிம்மா நான் சொல்லுறத கேளு உனக்கு ஒரு தங்கச்சி இருக்கா நல்லா யோசிச்சுக்க என்றார். ஜானு போனை வைத்தாள். ராமிடம் சொன்னாள். குழந்தைவேலு இந்த விவகாரத்துல தலையிடுவார் அப்படின்னு நான் எதிர்பார்க்கல என்றாள் . குமாருக்கு கொடுக்கப்பட்ட அதிக பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது . ஜானுவை அசிஸ்டண்ட் கமிஷனர் வர சொல்லியிருந்தார். என்ன ஜானு மினிஸ்டர் உன்கிட்ட ஃபோன் ல பேசினாராமே .. என்ன சொன்னார். குமாரை ரிலீஸ் பண்ண சொன்னார். பண்ண வேண்டாம் . அவர் இன்னும் கொஞ்சம் இறங்கி வரட்டும். எனக்கு அவரால் வேலை ஆக வேண்டியிருக்கிறது என்றார். ஜானு இதெல்லாம் உனக்கு புரியாது.அந்த குமாரை ஆண்டவனே வந்தாலும் காப்பாற்ற முடியாது என்றார்.
ஜானு மீராவிடம் மறுபடி அஜய் உன்னை தொந்தரவு செய்யவில்லையே என்றாள். இல்லை நிச்சயமாக இல்லை அக்கா. சரி மீரா நீ எதைப்பற்றியும் கவலைப்படாதே .. அக்கா உனக்கு துணை இருக்கிறேன்.ஜானு ராமிடம் கமிஷனர் சொன்னதை சொன்னாள். இவர்கள் மத்தியில் தனியாக ஒரு சிஸ்டம் இருக்கிறது.அதை யாராலும் பிரேக் பண்ண முடியாது என்றான். கவலைப்படாதீர்கள் ஜானு எல்லாம் சில காலம் தான்..அதிகாரம் இருக்கும் வரை மட்டும்தான்.எனக்கு ஒரு மினிஸ்டர் இப்படி மிரட்டுவார் என்று தோன்ற வில்லை.நாளைக்கு எனக்கு பர்த்டே என்றாள் ஜானு. அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்ததுக்கள் . நாளைக்கு சாயங்காலம் ஹோட்டல் ருக்மணியில் சிறிய பார்ட்டி ஒன்று வைத்திருக்கிறேன். கதிரிடமும் சொல்லியிருக்கிறேன் என்றாள். தீபுவை மறக்காமல் அழைத்து வரவும் என்றாள். மீரா உற்சாகத்துடன் இருந்தாள். அக்காவோட பர்த்டே பார்ட்டி சிறப்பா கொண்டாட வேணும் அப்படிங்கிறது என்னோட ரொம்ப நாள் ஆசை என்றாள். எல்லோரும் உற்சாகத்தோடு பார்ட்டியில் கலந்து கொண்டார்கள்.
ராம் ஏதோ சிந்தனையில் இருப்பதை பார்த்த கதிர் , என்ன சார் யோசனை என்றான். குமார் உயிருக்கு ஆபத்து வந்து விடுமோ அதனால் ஜானு பதவிக்கு ஆபத்து வருமோ என யோசிக்கிறேன் என்றான். நாம் இதில் இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாதல்லவா என்றான் கதிர். வேறு ஏதாவது வழி என்றால்? அதில் மினிஸ்டர் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிந்த ஆள் கந்தவேல் தான். அவன் எப்படி எதிர் சாட்சி சொல்லுவான்.அதுதான் அவனை எப்படி சாட்சி சொல்ல வைப்பதென்று யோசிக்கிறேன். வருண் ரொம்ப நாள் சிறையில் இருப்பது நல்லதல்ல என குமரஜோதி கருதினார். திவ்யாவை பார்த்தும் பேசினார். என் கையில் ஒன்றும் இல்லை எல்லாம் ஜானுவின் கையில் இருக்கிறது என்றாள் . ராம் மினிஸ்டர் குழந்தைவேலுவின் பி ஏ வை பார்த்தால் ஏதாவது விஷயம் கிடைக்கும் என நினைத்தான்.குழந்தைவேலு பி ஏ பிஸி ஆக இருந்தார். அஜயால் மீராவை மறக்க முடியவில்லை. அவனால் படிப்பில் ஒழுங்காக கவனம் செலுத்த முடியவில்லை. அவன் தந்தை அவனுக்கு அறிவுரை கூறினார்.
பரிதி ஹாஸ்பிடலில் இறந்து விட்டதாக தகவல் கிடைத்தது. உடனே ஜானு அங்கு போனாள். அங்கு கூடியிருந்த கூட்டத்தை கலைக்க போலீஸ் ஆபீசர்களுக்கு உத்தரவிட்டாள். இங்கும் அவன் பாத்ரூம் ஜன்னல் கம்பியில் தூக்கில் மாட்டி இறந்திருந்தான் . ஜானுவுக்கு அது தற்கொலை அல்ல எனப்பட்டது. அந்த கம்பி அத்தனை வலுவானதாக இல்லை . ராமுக்கு தகவல் சொன்னாள். ராம் விரைந்து வந்தான். போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் இரண்டு நாட்கள் கழித்துதான் கிடைக்கும் என்றார்கள். பரிதி குடும்பத்தாரை நினைத்து ராம் வருத்தம் அடைந்தான். அவர்கள் அழுதபடி உடலை பெற்றுக்கொண்டனர். ராம் எப்படியும் கந்தவேல் மயானத்துக்கு வருவான் என எதிர்பார்த்தான். அதன் படியே வந்தான். இறுதி வரை கொள்ளி வைக்கும் வரை இருந்தான். ராம் அவனுடைய கணிப்பு சரியாக இருந்தால் கந்தவேலுவை யாராவது பரிதி குடும்பத்தார் தாக்குவார்கள் என நினைத்தான். பரிதியின் 17 வயது மகன்தான் அதை செய்தான். கந்தவேலு கோபத்துடன் அங்கிருந்து கிளம்பினான். ஜானுவுக்கு பரிதி சாவு தொடர்பாக உடனடியாக ரிப்போர்ட் தரும்படி உத்தரவு வந்தது. அது திருப்தியாக இல்லை என்று சொல்லி ஜானுவை 2 மாதம் சஸ்பெண்ட் செய்தார்கள். ராம் இதை கேட்டு நிலைகுலைந்து போனான்.ராம் பரிதியின் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் பார்க்க வேண்டும் என்பதற்காக ரொம்பவும் முயற்சி செய்தான்.