iravai sudum velicham in Tamil Thriller by kattupaya s books and stories PDF | இரவை சுடும் வெளிச்சம் - 24

Featured Books
Categories
Share

இரவை சுடும் வெளிச்சம் - 24

இரவு 24
அந்த பெண்ணின் பெயர் ஹரிதா என்பது தெரிந்தது. கீதாவின் ஃபோன் ரிப்பேர் செய்தது அவள் தான் என சொன்னார்கள். ஜானு தன்னுடைய போனில் சில பிரச்சனைகளை சொன்னாள். ஹரிதா அதை சரி செய்து கொடுத்தாள். அவளுக்கு ஒரு அண்ணன் இருந்தான். அதே கடையில் சேல்ஸ் பிரிவில் வேலை பார்த்து வந்தான் அவன் பெயர் சேகர். அவனும் எந்த பதட்டமும் இல்லாமல் இருந்தான். ஹரிதா , சேகர் இருவரையும் தனியாக கூப்பிட்டு விசாரித்தாள் ஜானு. நாங்க எதுவும் செய்யல மேடம் என்றார்கள். உங்க ஃபோன் நம்பர் ,வீட்டு அட்ரஸ் எழுதி கொடுங்க என வாங்கிகொண்டாள். தீபு அந்த வாய்ஸ் ரெகார்டிங்கை பழைய குற்றவாளிகளின் குரலோடு ஒப்பிட்டு பார்த்தாள். குறிப்பாக குழந்தை கடத்தலில் ஈடுபடுவோரோடு ஒப்பிட்டு பார்த்தாள் . ஒரு குரல் மேட்ச் ஆனது . அவன் பெயர் சுதாகர். தற்போது சிறையில் இருக்கும் சுதாகர் குழந்தை கடத்தல் வழக்கில் கைதானவன். 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையில் இருப்பவன். ஜானுவுக்கு இந்த விஷயத்தை தீபு சொன்னாள்.சிறையில் இருந்து கொண்டே போனில் மிரட்டுகிறானா அவனை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றாள் .

ராம் பன்னீர் மூலம் அதிக தகவல் பெற முடியவில்லை.பன்னீர் விரக்தியில் இருந்தார். செய்யாத தப்புக்கு செல்வம் தண்டனை அனுபவிப்பதை அவர் விரும்பவில்லை. ராம் வேறு ஏதாவது செய்து தான் பரிதி கொலை குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என நினைத்தான். கதிர், தீபு இருவரிடமும் கலந்தாலோசித்தான். கதிர் யோசித்தவன் கந்தவேல் ஒருவேலை இந்த கொலையை செய்திருக்க கூடாது என்றான். அவன் ஹாஸ்பிடல் பக்கமே வரவில்லை. அப்படியானால் அவனுடைய ஆட்கள் யாராவது செய்திருக்க வாய்ப்பிருக்கிறது. இது ஒருவேளை சரியில்லாமல் இருக்கலாம் ஆனால் வாய்ப்பிருக்கிறது என்றான் கதிர். நாம் பரிதி மகன் முத்துவிடம் பேசிப்பார்க்கலாம் என்றான் ராம். அவனுக்கு அந்த அரசியல்வாதிகள் பற்றி நன்றாக தெரிய வாய்ப்பிருக்கிறது. முத்துவிற்கு ஃபோன் செய்து எனக்கு ஒரு உதவி வேண்டுமே என்றான் ராம். சொல்லுங்க சார் என்றான். உங்க அப்பவோட குளோஸ் ஆ இருந்தவங்க யாராவது அவரை வந்து அவர் இறந்த நாள் அன்று வந்து பார்த்தங்களா. ஆமா சார் ஜி ஆர் வந்து பார்த்தார். அவர் வட்ட செயலாளர். அவர் துண்டை கூட விட்டுட்டு போயிட்டார். நாங்க இன்னும் அதை பத்திரமா வச்சிருக்கோம் என்றான். நான் உடனே வரேன் எனக்கு அந்த துண்டை பார்க்கணும் என்றான் ராம்.

ராம் பரிதி வீட்டுக்கு போன போது அந்த துண்டை எடுத்து கொடுத்தான் முத்து. இந்த துண்டுல என்ன சார் இருக்கு. நான் இதை எடுத்துட்டு போலாமா என்றான் ராம். தாராளமா எடுத்துட்டு போங்க. அதை கவனமாக ஆராய்ந்தான். அந்த துண்டு கட்சி துண்டு அதில் ஜி ஆர் என நூலால் தைக்கப்பட்டு இருந்தது. ஜி ராஜேந்திரன் என்பதன் சுருக்கமே ஜி ஆர். அந்த துண்டு பாத்ரூமில் இருந்து எடுக்கப்பட்டது என முத்து சொல்லியிருந்தான். கதிர் அதை எடுத்துக்கொண்டு ஜி ஆர் வீட்டுக்கு சென்றான். அவன் காலை 10 மணி போல சென்றிருந்தான். அங்கே அதிக பேர்கள் இல்லை.சாரை பார்க்கணும் என ஜி ஆரின் மனைவியிடம் சொன்னான். என்ன விஷயம்பா என்றார் ஜி ஆர். நான் பரிதி கொலை விஷயமா விசாரிக்கிறேன் . இந்த துண்டு ? ஆமா என்னோடதுதான். அது அங்கே இருந்த பாத்ரூம்ல தவறி போச்சு என்றார். அது தவறிப் போச்சா இல்லை நீங்க பரிதி கழுத்துல இறுக்கி கொன்னப்போ அங்கேயே விட்டுட்டு வந்தீங்களா? நீ யார் தம்பி ஓவரா பேசுறே.. அவனை நான்தான் இந்த துண்டால இறுக்கி கொன்னு போட்டேன். தலைவருக்கு எதிரா வேலை செஞ்சான் அதான் கொன்னேன் . உன்னால என்ன முடியுமோ செய்.. உன்னால என்ன நிருபிக்க முடியும்? போ இங்கிருந்து போயிடு என்றார்.

கதிர் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. கதிர் அவனே கொலை பண்ணினதா ஒத்துகிட்டான்.. அடுத்ததா அதை ப்ரூவ் பண்ணனும் சார் என்றான். கதிர் நீ நல்ல விஷயம் பண்ணியிருக்க.விடு நாம பார்த்துக்கலாம் என்றான் ராம். ஜானு அந்த சுதாகரை சந்தித்தாள். அவனிடம் இருந்த ஃபோன் பறிமுதல் செய்யப்பட்டது. எதுக்காக கீதாவை மிரட்டுன ? அவளே இப்போதான் ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆயிருக்கா .. சொல்லு என்றாள் ஜானு. அவ அந்த தொழில் விட்டு போக கூடாதுன்னு நினைச்சேன். நாங்க எல்லாம் கஷ்டப்பட்டுட்டு இருக்கப்போ அவ மட்டும் பாரின் போய் குழந்தை,புருஷன் கூட சந்தோஷமா இருக்க கூடாதுன்னு நினைச்சேன் என்றான். நான் வேணா சொல்லுறேன் பாருங்க மேடம் அவ திரும்ப தொழிலுக்கு வருவா.. வர வைப்பேன் என்றான். ஜானு அந்த ஃபோன் ல பக் வைச்சது யாரு. நான்தான் சேகருக்கு பணம் கொடுத்து வைக்க சொன்னேன். இனிமே இந்த வேலை பண்ணினா நீ நிரந்தரமா ஜெயிலுக்குள்ளே இருக்க வேண்டியதுதான் என்றாள். சுதாகரின் ப்ரோஃபைல் தரவாக செக் பண்ண உத்தரவிட்டாள்.


கீதாவுக்கு ஃபோன் பண்ணினாள் ஜானு. அவன் பெயர் சுதாகர். அவன் உன்னோட ஏற்கனவே குழந்தை கடத்தல் சம்பந்தப்பட்டவன். நீ இப்போதைக்கு வெளிநாடு போக வேண்டாம். நான் எல்லாம் கிளியர் பண்ணுணதுக்கு அப்புறம் போகலாம் என்றாள் . இனிமே எந்த தொந்தரவும் இருக்காது . சேகரை ஃபோன் பண்ணி எச்சரித்தாள். அவனும் சாரி மேடம் பணத்துக்கு ஆசைப்பட்டு இப்படி பண்ணிட்டேன் என்றான். இந்த விஷயம் ஹரிதாவுக்கு தெரிய வேண்டாம் என்றான். ராமிடம் பேசினாள்.ராம் பரிதி விஷயத்தை சொன்னான். நான் உங்களை ஈவினிங் மீட் பண்ணுறேன் என்றாள் .கீதா விஷயம் முடிந்ததற்காக தீபுவும், ராமும் நிம்மதி அடைந்தனர். ராமுடைய எரிந்த காருக்கு இன்சூரன்ஸ் இருந்ததால் பணம் கிடைத்தது. ராம் புது கார் ஒன்று வாங்கினான். நல்ல வேலையாக பழைய காரில் ஏதும் டாகுமெண்ட்ஸ் வைத்திருக்கவில்லை.தீபு காரை எடுத்துக்கொண்டு அப்படியே ஒரு ரவுண்ட் பீச் வரை போலாமா என்றாள். நிச்சயமாக ஜானு ஈவினிங் வரட்டும் அவங்களையும் சேர்த்து அழைச்சிட்டு போகலாம் என்றான்.

புது கார் நன்றாக இருக்கிறதென்று தீபு சொன்னாள். அதோடு நவீன வசதிகள் கொண்டது. ராம் ஆபீஸ் பக்கத்தில் இருந்த ஷோ ரூமில் இருந்து காரை எடுத்து கொண்டான். ஜானுவும் இதுவும் ஒரு வகையில் நல்லது தான். பழைய கார் ராசியான கார் என்று ராம் சொன்னான். தீபு முன் சீட்டில் அமர்ந்திருந்தாள். ஜானு பின் சீட்டில் உட்காரந்திருந்தாள். பீச் பக்கம் போனார்கள். நானும் வருணும் ஒன்றாக கல்யாணத்துக்கு பீச் முன் வருவதாக பேசியிருந்தோம். என்னால் கடைசி வரை அவனோடு வர முடியாமல் போய்விட்டது என்றாள் ஜானு. வருத்தப்படாதீங்க எல்லாம் சரி ஆயிடும் என்றாள் தீபு. கடல் கடலையில் கால் நனைத்தபடி மூவரும் சிறிது தூரம் நடந்தார்கள். ராம் வாழ்க்கை இப்படியே இருந்தா ? ரொம்ப போர் அடிக்கும் என்றாள் தீபு. கதிருக்கு ஃபோன் பண்ணலாம் என தீபு சொன்னாள். ராம் கதிருக்கு ஃபோன் பண்ணினான். அவன் நான் ஒரு அரை மணி நேரத்தில் வருகிறேன் என்றான். கதிர், அவன் வொய்ஃப் தீபாலியும் வந்திருந்தாள். பார்வதி ,ஸ்ரீதர் வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார்கள்.அன்றைய மாலைப்பொழுது நல்லபடியாக நிறைவடைந்தது.

ஜானு பரிதி கேசில் ஜி ஆரை எவிடென்ஸ் இல்லாமல் அரெஸ்ட் பண்ண முடியாது என்றாள் . ஜி ஆர் ஹாஸ்பிடல் வந்து போன ரிஜிஸ்டர் ஸைன் இருந்தது. அதை வைத்து ஒன்றும் பண்ண முடியாது. ஹாஸ்பிடலில் வேலை பார்த்த யாராவது அந்த சம்பவத்தை பார்த்திருந்தால் உண்டு என நினைத்தான் ராம். பக்கத்து பெட்டில் இருந்த யாராவது பார்த்திருக்க வாய்ப்பு அதிகம் என்றான் கதிர். ராம் ஸ்ரீதரின் உதவியை நாடினான். சுமதி அந்த ஹாஸ்பிடலில் வேலை செய்திருந்ததால் யாராவது தெரிந்த நர்ஸ் இருக்க வாய்ப்புண்டு என நினைத்தான் . ரேவதி என்ற நர்ஸ் ஃபோன் நம்பர் தருகிறேன் என்றான் ஸ்ரீதர். ரேவதியை தொடர்பு கொண்ட போது பரிதி அட்மிட் ஆகியிருந்த போது ஒரு நோயாளி திடுமென அங்கிருந்து டிஸ்சார்ஜ் ஆகி போய்விட்டார். அவருடைய டீடெயில்ஸ் நான் எடுத்து தருகிறேன் ஆனால் இரண்டு நாட்கள் அவகாசம் வேண்டும் என்றாள். சரி மேடம் ரொம்ப தாங்க்ஸ் என்றான் ராம்.

ராம் இப்போது இருக்கிற நிலமையில் அந்த நோயாளி சாட்சி சொன்னால் மட்டுமே நாம் ஜி ஆரை அரெஸ்ட் பண்ண முடியும். ம் அதுவும் ப்ரூவ் பண்ணுவது ரொம்ப கஷ்டம் என்றான் கதிர். நாம் காத்திருப்போம் என்றாள் தீபு. வருண் என்ன செய்கிறான் அதோடு திவ்யா கேஸ் என்ன ஆனது என்றாள் தீபு. அந்த கேஸ் இப்போதைக்கு முடிவடையாது போல. திவ்யா அமைதியாக இருக்கிறாள். ஆனால் வருண் அந்த குமரஜோதியை அடிக்கடி சந்திக்கிறான் சிறையில் என்றான் கதிர். குமரஜோதி முனீரை தொடர்பு கொண்டான். என்ன ஆச்சு முனீர் அந்த ராம் விவகாரம் என்றான். அது வந்து ஜஸ்ட் ல எஸ்கேப் ஆயிட்டான். கேஸ் போலீஸ் ஸ்டேஷன் வரை போயிடுச்சு .கொஞ்சம் பொறுமையா இருங்க முடிச்சிடலாம் என்றான். ஸ்ரீதர், பார்வதி தம்பதியர் சந்தோஷமாக தங்கள் வாழ்க்கையை வாழ தொடங்கியிருந்தனர். ராமுக்கு அது மன நிறைவை தந்தது.

ராம் காரின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய ஒருவனை அடையாளம் காட்டியிருந்தான் ராம். அவனை ஜானு விசாரித்தாள். அவனோ எதையும் சொல்ல மறுத்தான். அவனுடைய வீட்டுக்கு போய் விசாரித்ததில் முனீரின் ஆள் என தெரிந்தது. முனீர் அவ்வப்போது அவன் வீட்டுக்கு நட்பு ரீதியாக பண உதவி செய்ததும் தெரிந்தது. முனீரை அரெஸ்ட் செய்ய அது மட்டும் போதாது. அவன் ஃபோன் வாங்கி செக் செய்து பார்த்தாள். எல்லா நம்பர்களும் அழிக்கப்பட்டு இருந்தது. அவனுடைய கால் ஹிஸ்டரி எடுக்க சொல்லி உத்தரவிட்டாள். மீரா இன்டர்வியூ நடக்கும் நாளுக்காக காத்திருந்தாள். அவள் அஜயை பற்றி மறந்து போயிருந்தாள். ராம் அவளுக்காக சில ஐபிஎஸ் சம்பந்தப்பட்ட புத்தகங்களை ஜானுவிடம் கொடுத்து அனுப்பியிருந்தான். அவள் ராமை தொடர்பு கொண்டு பேசினாள். சீக்கிரம் ஐபிஎஸ் ஆகுங்க மேடம் என்றான். நிச்சயமா.. தாங்க்ஸ் புத்தகம் அனுப்புனதுக்கு என்றாள். நிச்சயம் உனக்கு ஹெல்ப்பா இருக்கும் என்றான் ராம்.

அந்த நர்ஸ் ரேவதி பரிதிக்கு அருகே இருந்த நோயாளி ஃபோன் நம்பர் கொடுத்தாள். அவள் பெயர் தமிழரசி . வைரஸ் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தாள். அவள் ஃபோன் நம்பர் கால் செய்தான் ராம். சொல்லுங்க சார் நான் நர்ஸ் ரேவதி மூலமாத்தான் இந்த நம்பர் வாங்கினேன், உங்களை நேரில் பார்க்கணுமே என்றான். சரி வாங்க என்னோட ஆபீஸ் மவுண்ட் ரோட்ல இருக்கு என்றாள். அட்ரஸ் மெசேஜ் பண்ணியிருந்தாள். ராம் எப்படியும் ஜி ஆர் உள்ளே போக வேண்டிய ஆள் தான் என யோசித்து கொண்டே அவள் சொல்லியிருந்த ஆபீஸ் உள்ளே பார்க்கிங் பகுதியில் வண்டியை நிறுத்தினான். அவளுக்கு ஃபோன் பண்ணிவிட்டு காத்திருந்தான்.