iravai sudum velicham in Tamil Thriller by kattupaya s books and stories PDF | இரவை சுடும் வெளிச்சம் - 26

Featured Books
Categories
Share

இரவை சுடும் வெளிச்சம் - 26

இரவு 26

ராம் முத்துவை அந்த பில்டிங் வாசலில் சந்தித்தான். என்னாச்சு முத்து ஜி ஆரும் மத்தவங்களும் பில்டிங் மேலே போனவங்க இன்னும் கீழே வரலை என்றான். சரி வா மேலே போய் பார்ப்போம் என்றான் ராம். இருங்க சார் அவங்க லிப்ட்ல வந்துகிட்டு இருக்கலாம் என்றான் முத்து. அதே சமயம் பவர் கட் ஆனது. எங்கு பார்த்தாலும் கும்மிருட்டு. ராம் முத்து முத்து என குரல் கொடுத்தான் அவனை காணவில்லை. பதட்டமானான். சரியாய் 5 நிமிடம் கழித்து யாரோ அம்மா என அலறும் சத்தம் கேட்டது. ராம் மேலே போகும் பாதையை தேடினான். லைட்டர் வெளிச்சத்தின் துணை கொண்டு படிக்கட்டுகளில் ஏறினான். எதிரே திபு திபுவென ஆட்கள் இறங்கினார்கள். இறங்கி ஓடினார்கள். எதற்காக இப்படி ஓடுகிறார்கள் என்றே தெரியவில்லை. அலறல் சத்தம் எந்த திசையில் இருந்து வந்தது என்றும் புரியவில்லை. இவன் 5வது மாடிக்கு போன போது போலீஸ் வாகன சத்தம் கேட்டது. மாடியில் இருந்து டார்ச் அடித்து பார்த்தான் ஒன்றும் தெரியவில்லை. பவர் வந்து விட்டது. கீழே யாரோ விழுந்து கிடந்தார்கள்.ராம் லிப்ட் யூஸ் பண்ணி கீழே வந்தான் . ஆட்கள் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள்.ஜி ஆர் தான் மேலேயிருந்து கீழே விழுந்து செத்திருந்தார் .

போலீஸ் எல்லோரையும் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து போனது அவர்களில் ராமும் இருந்தான். என்ன நடந்தது ? என கேட்டார் இன்ஸ்பெக்டர். அண்ணன் சூட்கேஸ் எடுத்துக்கிட்டு மேலே போனார். நாங்களும் பின்னடியே போனோம் 4 த் ஃபுளோர் போனதும் கரண்ட் போயிடுச்சி .. அதுக்கப்புறம் நாங்க மேல போனோம். அவர் கீழே விழுந்து அலறல் சத்தம் கேட்டுச்சு. நாங்க அத்தனை பேரும் ஓடி வந்து பார்த்தோம்.. அண்ணன் செத்து கிடந்தாரு என்றான். அந்த சூட்கேஸ் என்ன ஆச்சு? தெரியலங்க .. மேல யாராவது இருந்தாங்களா இல்லைங்க .. தெரியலங்க .. அப்புறம் எதுக்கு இத்தனை பேர் போனீங்க? முத்துவையும் விசாரித்தார். அவன் தான் ராம் கூட இருந்ததாக தெரிவித்தான். ராம் தானும் இருட்டில் தவித்ததாக கூறினான். அந்த நேரத்துல அங்க இருந்த செக்யூரிட்டி நீதானே எப்பவுமே பேக்அப் ஜெனரேட்டர் உடனே ஆன் பண்ணலையா ..ஆன் பண்ணாத்தான் போனேன் கொஞ்சம் லேட் ஆயிடுச்சி என்றான்,எல்லோரும் அட்ரஸ் ஃபோன் நம்பர் எழுதி கொடுத்துட்டு போங்க என்றார் இன்ஸ்பெக்டர்.

ஜி ஆர் மரணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அவர் எடுத்து போன பணம் என்னவானது என தெரியவில்லை. போலீஸ் ஜி ஆருடைய போனை கைப்பற்றி லாஸ்ட் கால் யாருடையது என பார்த்தபோது முனீரின் நம்பர் தான் என தெரிய வந்தது. முனீரை போலீஸ் தேட துவங்கியது. மறுபுறம் முனீர் குழம்பி போயிருந்தான். நாம போறதுக்கு முன்னாடியே எவனோ போயிருக்கான். திட்டம் போட்டு பணத்தையும் அடிச்சு நம்மளையும் மாட்டி விட்டுருக்கான். ஜி ஆர் கொலைப்பழி வேற. எல்லோரும் கொஞ்ச நாள் தலைமறைவா இருப்போம் என்றான் முனீர். ஜி ஆர் செத்துட்டதால அந்த வீடியோவால எந்த பிரயோஜனமும் இல்லை என்றும் கூறினான். போலீஸ் பரிதியை ஜி ஆர் கொல்லும் வீடியோவை மீடியாவுக்கு கொடுத்தது. இது முத்துவுக்கு அதிர்ச்சி கொடுத்தது. ராமுக்கு ஃபோன் பண்ணினான். இது நிஜமா சார் அந்த வீடியோ நிஜமா சார் என்றான். ஆமாம்பா அந்த வீடியோ வாங்கத்தான் பணம் எடுத்துட்டு ஜி ஆர் அந்த பில்டிங் போனாரூ என்றான் ராம்.


நாம மறுபடி அந்த பில்டிங் போய் விசாரிப்போம் என்றான் ராம். முத்து நான் வரலை சார் .. போலீஸ் என் மேல ஏற்கனவே சந்தேகப்படுறாங்க என்றான். பரவாயில்லை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றான் ராம். கதிரை கூப்பிட்டு கொண்டான். கதிரும் ராமும் 5வது மாடியில் இருந்து சுற்றி பார்த்தனர். ஜி ஆரை கொன்றவர்கள் எப்படி வந்து போனார்கள் என புதிராக இருந்தது.அவர்கள் இருட்டிலும் துல்லியமாக ஜி ஆரை தள்ளி விட்டு கொன்று இருக்கிறார்கள் .முனீர் இதை செய்ய வாய்ப்பில்லை அவனுக்கு தேவை பணம் தான். கதிர் அங்கிருந்த பில்டிங் லிப்ட்டை சோதித்தான். ஒரு வேளை கொலையாளி மேலே போயிருந்தால் ? மேலே போய் பார்ப்போம் என 6த் ஃபுளோர் ,மொட்டை மாடி போன்ற இடங்களை பார்த்தார்கள். ஒரு க்ளூவும் கிடைக்கவில்லை. மொட்டை மாடியில் பதுங்கியிருந்துவிட்டு பிறகு போயிருக்கலாம் என்றான் கதிர். ராம் இந்த கேஸ் இடியாப்ப சிக்கலாய் இருக்கும் போலயே என்றான். ஜானுவை போய் பார்த்தான். முனீருக்கு எதிராக வாரண்ட் கேட்டிருக்கிறார்கள் . சீக்கிரம் அவனை அரெஸ்ட் பண்ணிவிடுவோம் என்றாள்.

ஜி ஆரின் மரணம் அரசியல் ரீதியாகவும் ஆராயப்பட்டது. அரசியல் எதிரிகள் யாராவது இதை செய்திருப்பார்களோ என்ற கோணத்திலும் ஆராயப்பட்டது.கந்தவேல் முத்துவை வந்து பார்க்க சொல்லி ஆட்கள் மூலமாக சொல்லி அனுப்பினான். முத்துவும் போனான். நீயும் அந்த ராமும் சேர்ந்துதான் ஜி ஆரை கொன்னு போட்டீங்க என்றான். இல்லை . ஊருக்குள்ள அப்படித்தான் பேசிக்கிறாங்க . நான் வெளியே வந்ததும் முதல் பலி நீதான் என்றான். நான் அந்த பில்டிங் போனது உண்மை . ஆனா நாங்க ஜி ஆரை கொல்லலை. யாரு இந்த வேலைய செஞ்சிருப்பா அப்படின்னு எனக்கு நல்லா தெரியும் . என்னை உன்னால ஒண்ணும் பண்ணமுடியலை அப்படிங்கிற கோபத்துல நீ போட்ட பிளான் தான் இது. நீங்கதான் அடியாள் வச்சு என்னை அடிக்க பார்த்தீங்க. ராம் சார் வந்துதான் என்னை ஹாஸ்பிடல்ல சேர்த்தாரு என்றான். அதெல்லாம் பழைய கதை . நீ எதுக்கும் ஜாக்கிரதையா இரு எந்த நேரம் என் ஆளுங்க உன்னை போடலாம் அதை சொல்லத்தான் கூப்பிட்டேன் என்றான்.முத்து எதுவும் சொல்லாமல் கிளம்பினான்.

கதிர் ஒருவேளை கீதா தான் இந்த டபுள் க்ராஸ் வேலைய செஞ்சிருக்கலாமோ என்றான். கீதாவிடம் விசாரித்த போது நானே பயந்து போய் பாஸ்போர்ட் ஆபீஸ் கூட போகாம இருக்கேன் அப்படி இருக்கப்ப இந்த கொலையை எப்படி செய்வேன் என்றாள். குமரஜோதி
முனீருடன் நெருக்கமா இருப்பதால் அவனையும் போலீஸ் விசாரித்தது. இது ஏதோ புது கேங் வேலைதான் என சொன்னார் குமரஜோதி. ராம், தீபு, கதிர் மூவரும் முனியாண்டி மர்டர் குறித்தும், ஜி ஆர் மர்டர் குறித்தும் கலந்தாலோசித்தார்கள். ஜி ஆர் மர்டர் இப்போது செய்யக்கூடியது ஒன்றும் இல்லை.ஆனால் முனியாண்டி மர்டர் கேஸ் அவசியம் தீர்க்க வேண்டிய ஒன்று என்றான் கதிர். கதிர் சொல்வது முக்கியமான பாயிண்ட். ஜி ஆர் விவகாரத்தை போலீஸ் பார்த்துக்கொள்ளும் அவர்கள் அவ்வளவு சீக்கிரம் விட்டு விட மாட்டார்கள் என்றான் ராம். ஆனால் முனியாண்டி மர்டர் செல்வத்தின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது என்றும் கூறினான்.

ராம் தீபு அந்த கொலை எங்கு நடந்தது ஏதோ கட்சி விவகாரத்தில் பகையாக இருந்த கந்தவேல் முனியாண்டியை அவரது கிராமத்தில் அரிவாளால் வெட்டி கொன்றதுதான் கேஸ். ஆனால் அந்த பழி செல்வம் மேல் வந்தது விதி என்றாள். நான் நாளைக்கே அந்த கிராமத்துக்கு செல்கிறேன் என்றான் ராம். அங்கு எங்கு தங்குவீர்கள் யாராவது உதவிக்கு இருப்பார்களா ? பன்னீர் அந்த கிராமத்தில் ஒருவர் வீட்டில் தங்க ஏற்பாடு செய்து தருவதாக சொல்லி இருக்கிறார். கதிர் நான் இரண்டு நாட்களில் உங்களோடு வந்து சேர்ந்து கொள்கிறேன் என்றான். ராம் பல கோணங்களில் யோசித்தும் செல்வம் எப்படி மாட்டிக்கொண்டார் என்பது புரியாமல் இருந்தது. போலீஸ் ரெகார்ட்களில் அது செல்வத்தின் தோட்டத்தில் நடந்த சம்பவம் என்றே பதிவாகியிருந்தது. ராம் எப்படியாவது இந்த கேசில் சாட்சிகளை கண்டுபிடித்து விட வேண்டும் என நினைத்தான்.

முனீர் வேறு வழியில்லாமல் போலீசில் ஸரண்டர் ஆனான். அவனை போலீஸ் தொடர்ந்து விசாரித்தது. அந்த பணம் எங்கே என கேட்டு அவனை விசாரித்தார்கள். நாங்கள் போகும் முன்பே எல்லாம் நடந்துவிட்டது என்றான் முனீர்.நீ சொல்வது ஒன்றும் நம்பும் படி இல்லையே நீயே யாரையாவது வைத்து ஜி ஆரை கொன்றாயா என்றார்கள் போலீசார். நிஜமாக இல்லை சார். நான் ரேவதியிடம் இருந்து கொலை சம்பந்தப்பட்ட வீடியோ உள்ள ஃபோன் வாங்கினேன். அதுதான் நான் செய்த தவறு என்றான்.அவனை 15 நாட்கள் சிறையில் அடைத்தார்கள். ராம் அந்த அழகிய கிராமத்துக்கு போனான். அவன் டிரைன் மூலம் போயிருந்தான். அவனை ஸ்டேஷன் வந்து பன்னீர் சொல்லிவிட்ட ஆள் அழைத்து போனார். அவர் சற்று வயதானவராக இருந்தார். நீங்களாவது வந்தீங்களே சார். ஒருத்தருக்கும் அந்த கந்தவேலை எதிர்த்து பேச துணிச்சல் இல்லை என்றார். அப்பாவி செல்வம் அநியாயமா ஆயுள் தண்டனை அனுபவிக்கிறான் என்றார்.

ஜானு ஃபோன் பண்ணியிருந்தாள். என்ன சார் சிட்டி விட்டு வில்லேஜ் போய் விட்டீர்கள் இங்க ஜி ஆர் கேஸ் தலைய பிச்சுக்க வைக்குது என்றாள். முனீர் ஸரண்டர் ஆயிட்டான் ஆனா அவனுக்கும் எதுவும் தெரியாது அப்படின்னு சொல்லுறான் என்றாள் . இந்த கேஸ் முதல்ல முடிச்சிட்டு வரேன் அப்புறம் ஜி ஆர் கேஸ் தான் என்றான் ராம். ஓகே பை என்றாள் . இங்க கொஞ்சம் வசதி குறைச்சலாதான் இருக்கும் பொறுத்துக்குங்க என்றார் பெரியவர். அதெல்லாம் பரவாயில்லை. உங்களுக்கு சாப்பாடு கொடுக்க எதிர் வீட்டுல சொல்லியிருக்கேன் என்றார். ரொம்ப நன்றி என்றான். குளித்து விட்டு ஃபிரெஷ் ஆகி லேப்டாப் எடுத்தான். தீபு ஃபோன் செய்தாள். ராம் சார் எப்படி இருக்கீங்க என்றாள். எனக்கென்ன இங்கே அன்புக்கு பஞ்சமில்லை என்றான். சரி சரி ரொம்ப நாள் டேரா போட்டுராதீங்க என்றும் சொன்னாள். ராம் கிராமத்தை சுற்றி பார்த்தான். அந்த பெரியவர் சில அறிவுரைகளை சொல்லியிருந்தார். முக்கால்வாசி பேர் கந்தவேல் சொந்தக்காரர்கள் அதனால் ஜாக்கிரதையாக பேச வேண்டும் என்று சொல்லியிருந்தார்.

ஒரு வீட்டில் மோர் குடுத்தார்கள். ராமுக்கு யாரிடம் விசாரிக்க ஆரம்பிக்கலாம் என எண்ணிய போதே பன்னீர் ஃபோன் பண்ணினார். நீங்கள் அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகே வெயிட் பண்ணுங்கள் .. இப்போது கொஞ்ச நேரத்தில் மணிமாறன் என்பவன் வருவான் அவன் உங்களை ஊர் பெரியவர்களிம் அழைத்து போவான் என்றான். சரி பன்னீர். மணிமாறன் 20 வயதிருக்கும். வாங்க சார் இந்த கேஸ் தீராத கேஸ். எப்படித்தான் சால்வ் பண்ண போறீங்களோ என்றான். ராமை அங்குள்ள பஞ்சாயத்து ஆபீஸ் அழைத்து சென்றான். விஷயத்தை சொன்னதும் எல்லோரும் ஒரு நிமிடம் திரும்பி பார்த்தார்கள். நாங்களும் எவ்வளவோ முயற்சி பண்ணி பார்த்தோம் தம்பி.. மேல் கோர்ட் வரைக்கும் போய் பார்த்தோம் ஆனா அந்த பரிதி சொன்ன சாட்சியினால கடைசி வரை எங்களால அந்த செல்வத்தை காப்பாத்த முடியாம போயிடுச்சு . இப்போ உங்களுக்கு என்ன தகவல் வேணும்.முனியாண்டியை கொன்ன இடத்தை பார்க்கணுமே என்றான். நாங்க வரணுமா ? யாராவது இந்த கிராமத்தை பத்தி தெரிஞ்சவர் வந்தா போதும். சரி அனுப்புறேன் என்றார்.