iravai sudum velicham in Tamil Thriller by kattupaya s books and stories PDF | இரவை சுடும் வெளிச்சம் - 12

Featured Books
Categories
Share

இரவை சுடும் வெளிச்சம் - 12

இரவு 12

கீதாவுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்ட போதும் அது போதுமானதாக இருக்காது என்பதை ராம் உணர்ந்திருந்தான்.எனவே ஜானுவிடம் கீதாவை தற்போது கோர்ட்டுக்கு அழைத்து வர வேண்டாம் என சொன்னான். ஜானு வீடியோ கான்பரன்ஸ் முறையில் நீதிபதியிடம் கீதாவை ஆஜர் படுத்த முடிவு செய்தாள். அதன் படியே செய்யவும் செய்தாள். கீதா பரந்தாமனுக்கு எதிராகவும் பிரேமா இந்த குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததாகவும் கோர்ட்டில் சொன்னாள் . முனீரின் ஆட்கள் ஏமாற்றமடைந்தனர். முனீர் மிகுந்த ஆத்திரத்தில் இருந்தான். கோர்ட் பரந்தாமனுக்கு எதிராக பிடி வாரண்ட் உத்தரவு பிறப்பித்தது. ஜானு உடனடியாக பரந்தாமனை பிடிக்க ஏற்பாடுகள் செய்தாள். ஆனால் அவன் எப்பவோ தலைமறைவாகி இருந்தான். பிரேமாவை விசாரிக்க முயற்சித்த போது அவளும் வெளியூர் போயிருப்பதாக தகவல் மட்டுமே கிடைத்தது. இருவரும் எங்கு போனார்கள் என்பதே தெரியாமல் இருந்தது. பரந்தாமனை தேடப்படும் குற்றவாளியாக போலீஸ் அறிவித்தது. கதிர் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு வருத்தம் அடைந்தான்.

கதிர் அடுத்து என்ன செய்வது என்ற குழப்பதில் இருந்தான். இந்த என்குயரியை தொடர்வதா வேண்டாமா என்ற எண்ணமே அவனுக்குள் ஓடிகொண்டிருந்தது. பரந்தாமனுக்கு ஃபோன் போட்டான் அவன் எடுக்கவில்லை. போலீஸ் பிரேமா மீதான புகார்கள் குறித்து ஒரு விசாரணை கமிட்டி அமைத்தது. இரண்டு வாரங்களுக்குள் அந்த கமிட்டி ஒரு முடிவை எடுக்க வேண்டும் என தீர்மானம் செய்யப்பட்டது.ஜானு ராமிடம் பேசினாள். கீதா சிறையில் இருந்தாள். அவளது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ராம் சொன்னான். கதிர் வந்த டூ வீலர் கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. கதிர் நூலிழையில் உயிர் பிழைத்தான் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவசரமாக கவர்ன்மெண்ட் ஹாஸ்பிடல் ஒன்றில் சேர்த்தார்கள். கதிர் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கதிர் மயக்கத்தில் இருந்தான். காலில் பெரிய கட்டு போடப்பட்டு இருந்தது. சுமதி அந்த ஹாஸ்பிடலில்தான் நர்ஸ் ஆக பணிபுரிந்து வந்தாள். கதிரை அங்கு பார்த்ததும் ஆச்சரியம் அடைந்தாள்.கதிரை பார்க்க அவனுக்கு திருமண நிச்சயமான பெண் தீபாலி வந்திருந்தாள். அவள் ஏன் இந்த மாதிரி வண்டி வேகமா ஓட்டுறீங்க என்றாள்.

தீபாலி அருகில் இருந்து அவனை கவனித்து கொண்டாள். ராம் மதியம் போல வந்து பார்த்தான். கதிர் தூங்கி கொண்டிருந்தான். அவனை எழுப்பவா எனக்கேட்டாள் தீபாலி.வாங்கி வந்த பழக்கூடையை அவளிடம் கொடுத்தவன் வேண்டாம் வேண்டாம் நான் வந்து பார்த்ததாய் சொல்லுங்கள் என் பெயர் ராம் என்றான். அப்போது சுமதி எதிரே வந்தாள். டாக்டர் கதிரை இரண்டு வாரங்கள் ஓய்வெடுக்க சொல்லி இருக்கிறார் என்றாள் சுமதி. ராம் விடைபெற்று கொண்டான். ஜானு கதிரை பற்றி ராமிடம் விசாரித்தாள். என்னால் தற்போது கதிரை பார்க்க வர முடியாத சூழ்நிலை இருக்கிறது என்றாள். சார் அடுத்து என்ன என்றாள் தீபு. முனீர் அரெஸ்ட்தான். அதற்காக ஜானு ஆதாரங்களை திரட்டும் பணியில் இருக்கிறாள். வாரண்ட் கிடைத்ததும் உடனடி அரெஸ்ட் தான் என்றான். கதிர் ஃபோன் பண்ணியிருந்தான் இரவு 8 மணி இருக்கும். ரொம்ப நன்றி சார் வந்து பார்த்ததற்கு என்றான். நீங்கள் பரந்தாமன் விஷயத்தில் என்ன முடிவு எடுக்க போகிறீர்கள் ? எனக்கும் குழப்பமாய் இருக்கிறது. சுமதி மேடம், ஸ்ரீதர் பக்கம் நியாயம் இருப்பதாய் படுகிறது என்றான்.யோசித்து முடிவு செய்யுங்கள் நான் வைக்கிறேன் என்றான் ராம். சரி சார்.

என்ன தீபாலி இங்கேயே தங்கி விட்டாயா என்றான் கதிர் கிண்டலாக. அதெல்லாம் ஒன்றுமில்லை நீங்கள் முழுமையாக குணம் பெரும் வரை நான் எங்கும் போக போவதில்லை என்றாள்.தீபாலி மீது இவனுக்கும் அன்பிருந்தது. யாராவது ஃபோன் பண்ணினார்களா என்றான். பரந்தாமன் என்பவர் பண்ணினார் என்றாள். இவன் போனை எடுத்து செக் செய்தான். அவனுக்கு ஃபோன் செய்தான். எடுத்தான் பரந்தாமன் . என்ன ஆக்சிடென்ட் ஆகிவிட்டதாமே .சாரி என்றான். ஏதாவது ரிப்போர்ட் கிடைத்ததா என்றான். இல்லை சார் நான் இந்த என்குயரியில் இருந்து விலகி கொள்கிறேன் என்றான். சரி உன் விருப்பம் என்றான். நான் ஃபோன் பண்ணிய விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம் . ஓகே சார்.
பரந்தாமன் பிரேமாவிடம் பேசினான். நான் இங்கே தெரிந்த ஒருவரிடம் பத்திரமாக இருக்கிறேன். நீ கவலைப்பட வேண்டாம் என்றான். போலீஸ் கமிட்டி பிரேமாவிடம் விசாரணை நடத்தியது, அவள் ஒத்துழைக்கவில்லை.அவள் எனக்கு எதுவும் தெரியாது என்றே சொல்லிக்கொண்டிருந்தாள். கடைசியாக கேட்கிறோம் ஜானு கத்தி குத்து சம்பவத்தில் உங்களுக்கு தொடர்பு உண்டா இல்லையா ? இந்த கேள்வியை கேட்டதும் பிரேமா அதிர்ந்தாள். அவள் மௌனமாக இருந்தாள். எந்த பதிலும் சொல்லவில்லை.

பிரேமாவை டிஸ்மிஸ் செய்ய போலீஸ் விசாரணை கமிட்டி பரிந்துரைத்தது. எல்லோருக்கும் இது அதிர்ச்சி அளித்தது. பிரேமாவை போலீஸ் டிஸ்மிஸ் செய்தது. ஜானு மிகவும் வருத்தப்பட்டாள். அதே சமயம் ஜானுவுக்கு பிரேமா ஃபோன் செய்தாள். என்ன ரொம்ப சந்தோஷத்துல இருக்கியா ஜானு.. இது வெறும் ஆரம்பம்தான் என்றாள்.மேடம் நான் உங்களை மாட்டி விட வேண்டும் என்று நினைக்கலை என்றாள். எனக்கு எல்லாம் தெரியும் ஜானு. நீ உன் வேலையை பாரு நான் என் வழியை பார்க்கிறேன் என்றும் சொன்னாள். கதிர் ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனான். சுமதிக்கு அவன் நன்றி சொன்னான். ஜானுவை போய் பார்த்தான். ஜானு ரொம்ப சாரி நான் வந்து உங்களை பார்க்கணும் அப்படின்னு நெனைச்சேன் என்றாள். அது பரவாயில்லை. உங்களால எனக்கு உதவ முடியுமா என்றாள் ஜானு. சொல்லுங்க மேடம் என்ன செய்யணும் என்றான். திவ்யா அப்படிங்கிற என்னோட போலீஸ் ஃப்ரெண்ட் காணாம போயிட்டாங்க அவங்களை தேடிட்டு இருக்கோம். உங்களால அந்த விஷயத்துல ஹெல்ப் பண்ண முடியுமா? நிச்சயமா பண்ணுறேன். நான் அவளோட டீடெயில்ஸ் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் என்றாள்.

இருக்கிற இடம் தெரியாமல் இருந்தான் பரந்தாமன். ராம் கதிர் டிஸ்சார்ஜ் ஆன சேதியை அறிந்தான். கீதாவை சந்தித்து பேச விரும்பினான். அவள் பாதுகாப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவும் நினைத்தான். தீபுவை அனுப்பி கீதாவை சந்திக்க ஏற்பாடு செய்தான். தீபு போய் அவளை சந்தித்து விட்டு வந்தாள். என்ன தீபு சொன்னாள் கீதா. அவள் நல்ல பாதுகாப்போடு இருக்கிறாள். ஆனால் பிள்ளையையும் கணவனையும் நினைத்து கவலையோடு இருக்கிறாள். அவர்கள் அவளை இன்னும் சிறையில் போய் பார்க்கவில்லை.நீ என்ன நினைக்கிறாய் கீதா திருந்தி விட்டாளா ? நிச்சயமாக என்றாள். பிரேமாவை கைது செய்து விசாரிக்க ஜானு முடிவு செய்தாள்.பிரேமாவுக்கு ஃபோன் செய்தாள். ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. நீலாங்கரையில் உள்ள அவளது வீட்டுக்கு போனாள். வீடு பூட்டியிருந்தது.வீட்டின் பின்புறம் செல்லும் வழி இருந்தது. அது மண் பாதையாய் இருந்தது. அவள் மட்டுமே போயிருந்தபடியால் சற்றே டென்ஷன் ஆக இருந்தாள். பிரேமா மேடம் என குரல் கொடுத்தவாறே சென்றாள். நேரம் ஆகிக்கொண்டிருந்தது அங்கே யாரும் இல்லை.

ஒருபுறம் பரந்தாமன், மறுபுறம் பிரேமா என தேடுதல் தொடர்ந்தது. திவ்யா பற்றிய விவரங்கள் கிடைத்ததும் கீதா வீட்டுக்கு போனான் கதிர். அவர்கள் தங்களுக்கு தெரிந்த விவரங்களை சொன்னார்கள். திவ்யா போன் எங்கே என்றான். அது ஜானுவிடம் தான் இருக்கிறது என்றார்கள். ஜானு அதை கதிருக்கு கூரியர் மூலம் அனுப்பி வைப்பதாக சொன்னாள்.பிரேமாவின் ஃபோன் லாஸ்ட் லொகேஷன் ஒரு ஸ்விம்மிங் ஃபூல் ஒன்றை காட்டியது. அந்த லொகேஷன் பெங்களூர் அருகே இருந்தது. கர்நாடகா போலீசிடம் சொல்லி விசாரிக்க சொன்னார்கள். அப்படி யாரும் அங்கு இல்லை.ஃபோன் மட்டுமே கிடைத்தது என்றார்கள். ஃபோன் இரண்டு நாட்களில் சென்னை வந்தது. பரந்தாமன் நம்பர் கிடைத்தது. ஆனால் அவன் எடுக்கவில்லை. பரந்தாமன் லொகேஷன் டிரேஸ் செய்யவும் முயற்சித்தார்கள். பலன் எதுவும் கிடைக்கவில்லை. பிரேமா போட்டோவை கர்நாடக போலீசுக்கு அனுப்பி தேட சொல்லி வேண்டுகோள் விடுத்து இருந்தார்கள். அவர்கள் எல்லா இடங்களிலும் தேடினார்கள். பிரேமா அவர்கள் நல்லா தேடட்டும் என்று பரந்தாமனிடம் சொல்லி கொண்டிருந்தாள். அப்போது அவளுக்கொரு மெசேஜ் வந்தது. பரந்தாமன் சரணடையாவிட்டால் நீ கொல்லப்படுவாய் என்றது மெசேஜ்.பிரேமா அதை உதாசீனப்படுத்தினாள்.

பிரேமா கர்நாடக எல்லையில் இருந்த எஸ்டேட் ஒன்றில் தங்கியிருந்தாள்.திவ்யாவின் ஃபோன் ஆன் செய்தான். அதில் தகவல்கள் இருக்கவில்லை. ஒரு லொகேஷன் மட்டும் அடிக்கடி சர்ச் செய்யப்பட்டது தெரிய வந்தது. அது வாரணாசியில் உள்ள கோவில். அந்த கோவில் நிர்வாகத்திடம் பேசினான். யாரும் அது போல அங்கு தங்கியிருக்கவில்லை என்றார்கள். வாரணாசி போலீசின் உதவியை நாடினான்.பிரேமாவை போலீஸ் நெருங்கி விட்டதாக தகவல் கிடைத்தது. ஜானு உடனே பெங்களூர் புறப்பட்டாள். கதிர் அனுப்பிய போட்டோபடி ஒரு சடலம் ரயில்வே டிராக் அருகே ஒரு வாரம் முன்பு கிடைத்ததாக போலீஸ் சொன்னது. இவன் ஜானுவிடம் சொல்லிவிட்டு வாரணாசி விரைந்தான். பிரேமா போலீஸ் உன்னை தீவிரமாக தேடுகிறது என்றான் பரந்தாமன். எனக்கு ஒரு மிரட்டல் மெசேஜ் வந்தது என்றாள் பிரேமா . ஜாக்கிரதையாக இரு பிரேமா என்றான்.தனிப்படை முனீரை இரவோடு இரவாக கைது செய்தது. அவன் தப்ப முடியாதபடிக்கு ராம் அவன் தங்கியிருந்த இடத்தை ஸ்கெட்ச் போட்டு கொடுத்திருந்தான்.

கதிர் இரண்டு நாள் பயணத்தில் அந்த போலீஸ் ஸ்டேஷன் அடைந்தான். அவர்கள் அவனை மார்ச்சுவரி அழைத்து போனார்கள். அது திவ்யா இல்லை. உடன் போயிருந்த திவ்யா அப்பா உறுதி படுத்தினார். அவன் திவ்யா அப்பாவை திரும்ப ஊருக்கே அனுப்பி வைத்தான். பரந்தாமன் பிரேமாவுக்கு ஃபோன் செய்த போது அவள் எடுக்கவில்லை. தொடர்ந்து முயற்சித்தான் . ரிங் போய் கொண்டு இருந்தது. என்ன பிரேமா உன் புருஷன் ஆசையெல்லாம் நிறைவேற்றுவாயே இந்த ஃபோன் காலை எடுக்க முடியவில்லையா என்றாள் பார்வதி. பிரேமா கை ,கால் கட்டப்பட்டு இருந்தது. பார்வதி உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்றாள். உன் புருஷனால் இந்த ஊரை விட்டே போனேன். என்னுடைய அம்மா சாவுக்கு கூட என்னால் வர முடியாமல் போனது. நீ போய் சேர வேண்டிய நேரம் வந்து விட்டது. நீ என்ன என்னை பயமுறுத்துகிறாயா ? என்றாள் . பயமெல்லாம் பழைய பார்வதியோடு போய்விட்டது. நீ பார்ப்பது பழி வாங்க துடிக்கும் பார்வதி என்றாள்.