iravai sudum velicham in Tamil Thriller by kattupaya s books and stories PDF | இரவை சுடும் வெளிச்சம் - 13

Featured Books
Categories
Share

இரவை சுடும் வெளிச்சம் - 13

இரவு 13

பிரேமா நீ அதிகம் பேச வேண்டாம் என்றாள் பார்வதி. உனக்கு நன்றாக நீந்தத் தெரியும் என்பதை நான் அறிவேன் ஆனால் கால்களையும் கைகளையும் கட்டி நீச்சல் குளத்தில் போட்டால் நீ எவ்வாறு நீந்துகிறாய் என்பதை பார்க்க விரும்புகிறேன் என்றாள். பரந்தாமன் உன்னை சும்மா விடமாட்டாரு நிச்சயம் என்னை தேடி வருவாரு என்றாள் பிரேமா . அவன் வருவான் நிச்சயம் உன் இறுதிசடங்கிற்கு . நீ என்ன நினைத்தாய் பார்வதி இதனுடைய விளைவுகள் மோசமாய் இருக்கும். ஏற்கனவே எல்லாவற்றையும் கடந்துதான் வந்திருக்கிறேன். நீ என்ன செய்கிறாய் ஒரு ஸ்டேட்மெண்ட் கொடு. நீ செய்த பாவங்கள் குறித்த ஸ்டேட்மெண்ட் ஒன்று ஆடியோவாக கொடு. உன்னை போலீஸ் தேடிக்கொண்டிருக்கிறது. உன்னை அவர்களிடம் ஒப்படைக்கலாமா என யோசனை . என்னால் அதெல்லாம் கொடுக்க முடியாது என்றாள் பிரேமா. நிச்சயமாக யோசித்துதான் சொல்கிறாயா ? ஆமாம் என்னால் முடியாது. சரி நாளை வரை உனக்கு டைம் தருகிறேன்.

கதிர் திவ்யாவை தேடும் பணியை தொடங்கினான். அவன் அவள் சாமியார் ஆகிவிட்டாள் என்று சிலர் சொன்னதை நம்பவில்லை.
மீரா பிளஸ் டூ படிப்பு முடித்து விட்டாள். அவள் இப்போது ஐபிஎஸ் கோச்சிங் சென்டர் ஒன்றில் சேர விருப்பப்பட்டாள். வருண்தான் நல்ல கோச்சிங் சென்டர் ஆக பார்த்து சேர்த்து விட்டான். ஜானுவுக்கும் அதில் மகிழ்ச்சிதான். அவள் அம்மாவுக்குத்தான் சற்று உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. ஜானு அவ்வப்போது போய் பார்த்து வந்தாள். பிரேமாவின் உடல் கை கால்கள் கட்டிய நிலையில் ஸ்விம்மிங் பூலில் மிதந்தது. தகவல் அறிந்ததும் ஜானு அங்கே போனாள். பிரேமா குறித்த பல நினைவுகள் நிழலாடின.
யார் பிரேமாவை கொலை செய்து இருப்பார்கள் என புரியாமல் தவித்தாள். சுமதி அந்த நேரத்தில் ஹாஸ்பிடல் டூட்டியில் இருந்தாள் என்பது உறுதியானது. ஸ்ரீதர் எங்கோ வெளியூர் போயிருந்தான்.
பிரேமாவின் உடலை ஒப்படைக்க நினைத்தால் அவர்களுக்கு குழந்தைகள் கிடையாது.

பிரேமா இறந்த செய்தியை கேள்விப்பட்டதும் போலீசில் சரணடைய முடிவு செய்தான் பரந்தாமன். ஜானுவுக்கு ஃபோன் செய்து தான் இருக்கும் இடத்தை சொன்னான். ஜானு வருத்ததுடனேயே அவனை அரெஸ்ட் செய்தாள். அவன் பிரேமா உடலை மார்ச்சுவரியில் பார்த்ததும் கதறி அழுதான்.பிரேமாவுடைய இறுதி சடங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மின்சார மயானம் என்றாலும் சற்றே போலீஸ் தளர்வாக இருந்தது. கையில் விலங்கோடு இறுதி காரியங்களை செய்தான். நிறைய போலீசார் வந்திருந்தனர். ராம் வந்திருந்தான். மறுபடி ஜீப்பில் எட்ட முயன்றபோது ஒரு கார் வந்து விரைவாக பரந்தாமனை காரில் ஏற்றி சென்றது. ஜானு திகைத்து போனாள். அவன் ஏற்கனவே இதை திட்டமித்திருக்க வேண்டும் என ஜானு எண்ணினாள்.போலீஸ் அலட்சியத்தால் இது நிகழ்ந்தது என மக்கள் பேசிக்கொண்டனர். அந்த கார் நம்பர் ராம் நோட் செய்திருந்தான். ஆனால் என்ன செய்வது பரந்தாமன் எங்கு போனானோ ?

ஜானு தன் போலீஸ் பரிவாரங்களை முடுக்கி விட்டாள். அவனை அழைத்து சென்றது யார் என்ற கேள்வியும் எழுந்தது.பார்வதி ராமுக்கு ஃபோன் செய்தாள். ராம் நான் சொல்லுறத மட்டும் கேளுங்க என்றாள். பரந்தாமன் என்கிட்ட பத்திரமா இருக்கான். ஜானுகிட்ட சொல்லுங்க. இரண்டு நாளிலே அவனை ரிலீஸ் பண்ணுறேன் உயிரோட என்றாள். பார்வதி பார்வதி என்றான். அவள் போனை துண்டித்து விட்டாள். ராம் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. தீபு கூட ஆச்சர்யப்பட்டாள் . ஜானுவுக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னான். அவளும் அந்த பார்வதி நம்பர் வாங்கி டிரேஸ் செய்தாள். பிரயோஜனம் இருக்கவில்லை. ஜானு கவலையுடன் இருப்பதை பார்த்த வருண் எல்லா பிரச்சனையும் தீர்ந்து கொண்டிருக்கிறது நீ ஏன் கவலைப்படுகிறாய் என்றான். பார்வதி சிக்கலில் மாட்டி கொள்ள கூடாதென்பதே என் விருப்பம் என்றாள்.


ஒரு வழியாக திவ்யாவை தேடி கண்டுபிடித்தான் கதிர். நிஜமாகவே அவள் சாமியார் ஆகி விட்டாள் என தெரிந்தது. அவளுக்கு சீடர்கள் இருந்தனர். தன்னை அறிமுகபடுத்தி கொண்டான் கதிர். அவள் நான் காணாமல் போகலை . பந்தங்களை உதறிவிட்டு வந்தேன் என்றாள். இவன் அவள் அனுமதியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டான். ஜானுவுக்கும்,ராமுக்கும் ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னான். எல்லோருக்கும் திவ்யா உயிருடன் இருக்கிறாள் என்பதில் சந்தோஷம். மயக்கம் தெளிந்து எழுந்த பரந்தாமன் பார்வதி எதிரே இருப்பதை பார்த்து அதிர்ந்தான். நீ ஏன் என்னை கடத்தினாய் என்றான். பிரேமா உனக்காக வெயிட்டிங் என்றாள். அவளை கொன்னதும் நீதானா ? அவ குற்றங்களை ஒத்துக்கலை எனக்கு வேற வழி தெரியலை என்றாள். நீ யாரு இதை செய்ய. ஞாபகம் இருக்கா என்னை நீ அடைய துடிச்ச ? அதுக்காக என்னை டார்ச்சர் பண்ணின .. அதுக்காக பிரேமாவை கொல்லனுமா என்றான். சாரி அது முடிந்து போன கதை என்றாள். என்னதான் வேணும் உனக்கு. நீ எல்லா குற்றத்தையும் ஒத்துகிட்டு ஸரண்டர் ஆகணும். ஆனா அது போதாது. நான்தான் ஏற்கனவே சரண்டர் ஆகி விட்டேனே என்றான்.

உனக்கு முன்னாடி அடைக்கலம் குடுத்தது யாருன்னு எனக்கு தெரியும்.அதை பத்தி நாம இப்போ பேச வேண்டாம். நீ ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுக்குற என்றாள்.என்னால் முடியாது. சரி வேண்டாம் உன்னை போலீஸ் ஸ்டேஷன் வாசலிலேயே டிராப் பண்ணிவிடுகிறேன் என்றாள்.பரந்தாமனுக்கு மயக்கமாக இருந்தது. அதோடு கடுமையான வயிற்று வலியும் ஏற்பட்டது.
கண்விழித்து பார்த்த போது கையில் விலங்கோடு ஹாஸ்பிடல் ஒன்றில் சேர்க்கப்பட்டு இருந்தான். டாக்டர் அவன் அருகே போய் விசாரித்தார். எப்படி இருக்கீங்க பரந்தாமன் என்றார். எனக்கு என்ன ஆச்சு டாக்டர் என்றான். யாரோ உங்களுக்கு காலாவதியான ஊசி போட்டிருக்காங்க என்றார் டாக்டர். இவனுக்கு மறுபடி மயக்கம் வந்தது. பரந்தாமன் திரும்ப போலீஸ் ஸ்டேஷன் வாசலில் மயக்கம் வந்து கிடந்ததை யாரும் நம்பவில்லை.ஜானுவும்,ராமும் அவனை வந்து பார்த்து போயினர்.

எல்லா பிரச்சனையும் முடிந்தது நாம ஒரு ட்ரிப் போகலாமா என்றான் வருண். ஜானு உயரதிகாரிகளிடம் பேசி லீவு வாங்கி கொண்டாள்.தீபுவும், ராமும் வருவதாய் சொன்னார்கள். ஜானு, ராம்,தீபு, வருண். மீரா உள்ளிட்டோர் கிளம்பினர்.ஊட்டி, கொடைக்கானல் , மேட்டூர், ஏற்காடு போன்ற பகுதிகளை பார்க்கலாம் என முடிவு செய்திருந்தனர். ராமும் தீபுவும் ரொம்ப நாள் கழித்து ரிலாக்ஸ் ஆக வெளியே போவதில் மகிழ்ச்சி அடைந்தனர்.ஒரு பிரைவேட் டெம்போ டிராவல்லர் ஏற்பாடு செய்திருந்தனர். ஜானு இன்னமும் என்ன கவலை.பிரேமாவை கொன்னவங்க யாருன்னு தெரியலை ? பரந்தாமனுக்கு இன்னும் சீரியஸ் கண்டிஷன் ஆ தான் இருக்கு என்றாள். ஹேய் ஜானு நாம கொஞ்ச நாளைக்கு எல்லாத்தையும் மறக்கத்தான் ட்ரிப் வந்திருக்கோம் என்றான் வருண். மீரா தன்னுடைய மொபைலில் இயற்கை காட்சிகளை படமெடுத்த வண்ணம் இருந்தாள்.

ஊட்டி போய் அங்கிருந்த ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார்கள். தீபு மீராவோடு தங்கியிருந்தாள். ராம் தனியறையில் தங்கி இருந்தான். கதிர் ஃபோன் பண்ணியிருந்தான். அவனுடைய கல்யாணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க ராம் ஆபீஸ் போயிருந்ததாக சொன்னான். நாங்கள் நிச்சயம் வருகிறோம் என்றான் ராம். தீபுவிடமும், ஜானுவிடமும் இதை சொன்னான் ராம்.ஊட்டியில் போட்டிங், அருவிகள் போன்றவற்றை பார்த்தனர். மீரா எல்லோருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டாள் . ஜானுவும், வருணும் குதிரை சவாரி செய்தனர். தீபுவும், ராமும் சைக்கிளிங் செய்தனர். மீரா அவர்களுடன் கலந்து கொண்டாள். மாலை ஹோட்டல் திரும்பினர். ராம் பார்வதியுடன் பேச விரும்பினான். அவளுக்கு ஃபோன் செய்தான். ஏன் பார்வதி இப்படி செய்தாய் என்றான். எது எதை பற்றி சொல்கிறீர்கள். பரந்தாமனுக்கு காலாவதியான ஊசி போட்டதை பற்றி. அது அவன் செய்த வினை அனுபவிக்கிறான். நீங்கள் எங்கே ஊட்டியிலா? என்றாள். ஆமாம் என்றான். ஹோட்டல் பெயரை சொல்லி விசாரித்தாள். இவனும் சொன்னான்.

கொடைக்கானல். ஏற்காடு எல்லாம் போனார்கள். வருண் ஜானுவோடு டூர் போக நேரம் கிடைத்ததே பெரிய விஷயம் என்றான்.மீரா விதவிதமான உணவுகளை எல்லோருக்கும் ஆர்டர் செய்தாள். வருங்கால ஐபிஎஸா இல்லை குக்கா என்று வருண் கிண்டல் செய்தான்.ஜானு நாம ஒரு சின்ன வாக் போலாமா வருண் என்றாள். அவன் நான் ரொம்ப டையர்டு ஆ இருக்கிறேன் நீங்க போயிட்டு வாங்க என்றான். ராம், ஜானு, தீபு , மீரா நால்வரும் அந்த மலைப்பாதையில் நடக்க தொடங்கினர். மீரா எல்லா பிரச்சனையும் முடிந்தது அக்கா இனிமேலாவது சந்தோஷமா இரு என்றாள். அது அப்படியில்லை மீரா நாம அரெஸ்ட் பண்ணினதோட கடமை முடியறது இல்லை. அவங்களுக்கு சட்டப்படி தண்டனை வாங்கி கொடுக்கணும் என்றாள். ராம் அதை ஆமோதித்தான். தீபு அவர்கள் பேசுவதை கவனமாக கேட்டுக்கொண்டு வந்தாள்.

சுமதியும், ஸ்ரீதரும் பரந்தாமன் முடிவை எதிர்பார்த்து காத்திருந்தனர். என்ன ஸ்ரீதர் அவனை நாமே முடிக்கலாமா என்றாள் சுமதி. அதெல்லாம் வேண்டாம் பார்வதி போட்டது ஹெவி டோஸ் அவன் பிழைக்க வாய்ப்பே இல்லை என்றான். வருண் ரூமில் இருந்தான். இவர்கள் ஒரு மணி நேரத்துக்கு பிறகு ஹோட்டல் சென்றடைந்தார்கள். வருண் ரூமில் இல்லை. ஃபோன் பண்ணி பார்த்தான் ராம் . ஃபோன் ரிங் போனது யாரும் எடுக்கவில்லை. மணி இரவு 12 ஆகி விட்டிருந்தது. ரிசப்ஷன் கவுண்டரில் ரூம் சாவியை கொடுத்து சென்று இருந்தான். ஜானு பதட்டமடைந்தாள். லோக்கல் போலீஸ் இன்ஃபார்ம் செய்தாள். அவர்கள் உடனடியாக தேட தொடங்கினார்கள். மணி 3 அளவில் எல்லோரும் காலையில் தேடலாம் என முடிவெடுத்தார்கள். ராம் மிகுந்த கவலை அடைந்தான்.


காலையில் அந்த ஸ்டேஷனுக்கு நேரில் போய் கம்ப்ளைண்ட் ஒன்றை கொடுத்தாள் ஜானு. அவர்கள் தேடிக்கொண்டிருப்பதாக சொன்னார்கள்.மீராவையும், தீபுவையும் ஊருக்கு அனுப்பி வைத்தான் ராம். ஜானுவுக்கு ஆறுதல் கூறினான். வருணை கடத்த என்ன அத்தியாவசியம் இருக்கிறது என்றான் ராம். வருண் ஒரு அப்பாவி என்றாள் ஜானு. ஹோட்டல் சிசிடிவி செக் செய்தார்கள். ரூம் பாய்களிடம் விசாரித்தார்கள் .பிரயோஜனம் இருக்கவில்லை. வருண் எங்கு போனான் என்பதே தெரியவில்லை. வருணின் பெற்றோரும் ,ஜானுவின் அம்மாவும் கவலை அடைந்தனர். வருண் காரில் சென்றதாக ஒரு தகவல் கிடத்தது. அந்த கார் எண்ணும் பரந்தாமனை அழைத்து சென்ற காரும் ஒன்றுதான் என தெரிந்தது.ராம் பார்வதிக்கு ஃபோன் செய்தான். என்ன செய்தாய் பார்வதி வருணை என்றான். அவன் என்னிடம் இருந்து தப்ப முடியாது என்றாள்.ராம் திகைத்து போனான்.