இரவு 14
என்னாச்சு பார்வதி ஏன் இப்படி பண்ணுறே என்றான் ராம். எல்லாமே காரணத்தோடுத்தான் பண்ணுறேன். நான் எல்லாம் முடிஞ்சப்புறம் உங்களுக்கு விளக்கமா சொல்லுறேன் என்றாள். ஜானுவிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் தவித்தான் ராம். ஜானு என்ன ராம் ஏதாவது தகவல் தெரிந்ததா என்றாள். அது வந்து .. வந்து பார்வதி தான் வருணை கிட்நாப் பண்ணியிருக்கா. வாட் பார்வதியா என்ன ராம் சொல்லறீங்க .. உண்மை அதுதான் என்றான். அவளுக்கு என்ன ஆச்சு ராம் நீங்க எதையோ என்கிட்ட மறைக்கிறீங்க ராம் என்றாள். நான் எதுவும் மறைக்கல எனக்கும் என்ன ஆச்சு அப்படின்னு தெரியல. சரி நான் பேசி பார்க்கட்டுமா . ஓகே.ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. பார்வதி நிச்சயம் இங்குதான் எங்கோ பதுங்கி இருக்க வேண்டும் அவளை நிச்சயம் கண்டுபிடித்து விடலாம் என்றாள் ஜானு. வருண் கால் ஹிஸ்டரி செக் செய்யலாம் என யோசனை தெரிவித்தான் ராம். சரி உடனே ஏற்பாடு செய்கிறேன். அதன்படி வருணின் கால் ஹிஸ்டரி கிடைக்க ஈவினிங் ஆகும் என தெரிவிக்கப் பட்டது. மீரா ஃபோன் பண்ணி விசாரித்தாள். ஜானு இப்போதைக்கு எந்த தகவலும் இல்லை என்றாள்.
என்னை எதுக்காக கடத்துனே பார்வதி. ஜானு அங்கே டென்ஷன் ல இருப்பா நான் போகணும் விடு என்றான். எல்லா வேலையும் செய்து விட்டு தப்பிக்கலாம் அப்படின்னு பார்க்கறியா ? என்றாள்.
நான் என்ன செய்தேன் . நீதான் பரந்தாமன் பாஸ் அப்படின்னு எனக்கு முதல்ல தெரியல. லேட் ஆ தான் தெரிஞ்சது. ஜானுவுக்கு துரோகம் பண்ண எப்படி மனசு வந்தது. நான் பரந்தாமனுக்கு பாஸா இது என்ன புது கதை ? நீ பண்ணுற drug பிஸினஸ் பத்தி சொல்லவா. காலேஜ் பசங்களுக்கு கஞ்சா சப்ளை பண்ண புரொஃபசர் வேலைக்கு போன நீ. நீ அபாண்டமா பழி போடுறே. எல்லாத்துக்கும் என்கிட்ட ஆதாரம் இருக்கு . உன்னால ஜானுவுக்கு ஆபத்து அதனாலதான் இப்போ உன்னை கடத்துனேன். பார்வதி நீ யார்கிட்ட மோதுறேன்னு தெரிஞ்சுதான் மோதுறேன். உனக்கு பின்னாடி இருக்குற இன்டர்நேஷனல் connections பத்தி தெரிஞ்சுதான் உன்கிட்ட பேசுறேன் என்றாள். நான் வீட்டுக்கு போகலைனா நீ உயிரோட இருக்க முடியாது பார்வதி. நான் அதை பத்தி கவலைப்படலை. உன்னால எத்தனை பேரோட வாழ்க்கை சீரழிஞ்சிருக்கு. இப்போ என்னதான் உன் முடிவு. நீ இங்கேயே கிடந்து சாகப்போறியா இல்லை உண்மை என்ன அப்படின்னு வெளி உலகத்துக்கு சொல்ல போறியா ? நீ நெருப்போட விளையாடுற பார்வதி. சரி வருண் அப்புறம் பார்க்கலாம். வருண் நாற்காலி ஒன்றில் கை கால்கள் கட்டப்பட்டு இருந்தான்.
பரந்தாமன் ஹாஸ்பிடலில் இறந்து விட்டதாக செய்தி கிடைத்ததும் ஜானு அங்கிருந்து கிளம்பினாள். ராம் மட்டும் அந்த ஹோட்டலில் தங்கி வருணை தேடும் பணியில் இறங்கினான். ஜானு ஹாஸ்பிடல் சென்று பரந்தாமனுக்கு இறுதி காரியங்கள் செய்யும் ஏற்பாட்டை செய்தாள். ராமுக்கு வருணின் கால் ஹிஸ்டரி கிடைத்தது. முதலில் அதில் எந்த தெளிவும் கிடைக்கவில்லை. ஆனால் போக போக அதில் நிறைய இன்டர்நேஷனல் கால்ஸ் இருப்பது தெரிய வந்தது. ராம் அதில் வாரணாசியில் இருந்து நிறைய முறை இன்கமிங் கால் வந்திருப்பதை அறிந்தான். அப்புறம் அது திவ்யா நம்பர் தான் என்பதை உறுதி செய்தான். திவ்யா ஆசிரமத்தின் நம்பர் தான் அது. ராமுக்கு குழப்பமாக இருந்தது. திவ்யா எதற்கு வருணுக்கு கால் பண்ண வேண்டும் என நினைத்தான். மறுபடி பார்வதிக்கு ஃபோன் செய்தான். பார்வதி எடுத்தாள். நடந்ததை சொன்னாள். திவ்யா ஒரு drug மாபியா தலைவி என்பதை சொன்னாள். இதை கேட்ட ராம் அதிர்ச்சியின் எல்லைக்கே போனான்.பார்வதி வருணை என்னிடம் ஒப்படைத்து விடு நான் பார்த்துககொள்கிறேன் என்றான். அதெல்லாம் வேண்டாம் என்று போனை வைத்தாள் பார்வதி.
ஜானுவிடம் இந்த தகவலை எப்படி சொல்வது என தடுமாறினான் ராம். இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என ஆராய வேண்டும். ரொம்ப விவகாரத்தை பெரிது படுத்தினால் திவ்யா உஷாராகி விடுவாள். கதிரை தொடர்பு கொண்டு திவ்யாவின் தங்குமிடம் குறித்த டீடெயில்ஸ் வாங்கிக்கொண்டான். ஜானுவிடம் தான் கீதாவை பார்க்க வேண்டும் அவசர வேலை என்று சொல்லிவிட்டு போனான். ஜானு எதுவும் சொல்லவில்லை. பரந்தாமன் இறுதி காரியங்கள் முடிந்ததும் அந்த ராமிடம் இருந்து வந்த வருணின் கால் ஹிஸ்டரி பார்த்தாள். அவள் அதில் திவ்யாவிடம் வருண் பேசியிருப்பது கண்டு யோசனையில் ஆழந்தாள். வருண் பார்வதியிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்ற யோசனையில் இருந்தான்.வருண் ஃபோன் ஹோட்டல் அறையில் இருந்தது. அதை தவற விட்டு சென்றிருந்தான். ஜானு அந்த போனை ஆராய்ந்தாள் . சில கால்கள் பரந்தாமனுக்கும் செய்திருப்பதை பார்த்தாள் . செய்வதறியாது திகைத்தாள்.
ராம் கதிரை வாரணாசி வர சொல்லி இருந்தான். இருவரும் ஆசிரமத்தில் தங்கி தியானத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த வெளிநாட்டு பக்தர்களிடம் பேச்சு கொடுத்தனர். அவர்கள் இங்கு எல்லாம் கிடைக்கும் என்றனர். ராம் நாம் திவ்யாவை சுற்றி வளைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றான். ஒரு சில வெளிநாட்டு பக்தர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கே சென்று அங்கு கஞ்சா தாராளமாக திவ்யா ஆசிரமம் மூலம் கிடைப்பதை உறுதி செய்தான்.லோக்கல் போலீஸ் இதை கண்டு கொள்ள மாட்டார்கள் என்பதை ராம் உணர்ந்திருந்தான்.ஜானுவுக்கு ஃபோன் செய்து கஞ்சா வியாபாரத்தில் வருணுக்கும் ,கீதாவுக்கும் உள்ள தொடர்பு பற்றி தெரிவித்தான். ஜானு தான் உடனே வாரணாசி வருவதாக தெரிவித்தாள். வருண் பற்றி விசாரித்தாள். பார்வதி மறுபடி பேசவில்லை என ராம் சொன்னான். ஜானு வாரணாசி வந்து மாற்று உடையில் திவ்யாவை ஆசிரமத்தில் சந்திக்க அப்பாய்ண்ட்மென்ட் கேட்டு இருந்தாள்.
வருண் தன்னிடம் இருந்த ஆட்டோமேடிக் லைட்டர் உதவியுடன் கயிறுகளை அறுத்துக்கொண்டு பார்வதியிடம் இருந்து தப்பினான்.
அவனுக்கும் காலாவதியான ஊசிகளை போட்டிருந்தாள் பார்வதி.சுமதி ஸ்ரீதரிடம் பேசினாள். அவன் ரொம்ப தூரம் போய்விட முடியாது. அப்படியே போனாலும் இனி அவனால் பழையபடி நடமாட முடியாது என்றாள் பார்வதி. ஜானுவை அடையாளம் கண்ட திவ்யா குழப்பமடைந்தாள் . பிறகு அவளை வரவேற்றாள் . ஜானு எப்படி இருக்கிறாய். நான் நன்றாக இருக்கிறேன் நீ தான் ஆளே மாறி விட்டாய் என்றாள் ஜானு. இங்கே நான் நிம்மதியாக இருக்கிறேன். பரந்தாமனும் ,பிரேமாவும் இறந்த விஷயம் கேள்விப்பட்டேன் என்றாள். அது முடிந்து போன கதை.. நான் இங்கே உன்னுடன் ஒரு வாரம் நிம்மதியாக தங்கி விட்டு போக வந்தேன் என்றாள் ஜானு.அதற்கென்ன நீ தாராளமாக தங்கி கொள் என்றாள் .
அவளிடம் இருந்து தப்பித்த வருண் மயக்கம் அடைந்தான். அவனை லோக்கல் ஹாஸ்பிடல் ஒன்றில் யாரோ சேர்த்திருந்தார்கள்.கண் விழித்த போது யாரும் அருகில் இல்லை.
வருண் இது எந்த இடம் எனக்கேட்டபடி இருந்தான். யாரும் பதில் சொல்லவில்லை. அது ஒரு மன நல காப்பகம் போல இருந்தது. சில பேரே நடமாடினார்கள். இருட்டாய் இருந்தது. அவனுடைய காலில் சங்கிலி பிணைக்கப்பட்டு இருந்தது. வருண் பயந்து போனான். பார்வதி வருண் சரியான இடத்துக்கு போயிருப்பதாக ஸ்ரீதர் சுமதியிடம் சொன்னாள். ஜானு அந்த ஆசிரமம் பற்றிய தகவல்களை சேகரித்தாள் .திவ்யா எவ்வாறு கஞ்சாவை கொண்டு வருகிறாள் எவ்வாறு சப்ளை செய்கிறாள் என தெரிந்து கொள்ளும் முயற்சியில் இறங்கினாள். ராமும் கதிரும் வெளியில் திவ்யாவின் நடமாட்டத்தை கண்காணித்தனர். வருண் அருகே அந்த நர்ஸ் வந்தாள். இந்த மாத்திரையை போட்டுகோங்க என்றாள். நான் நல்லாத்தானே இருக்கேன் என்றான். அது எங்களுக்கும் தெரியும் என்றாள் நர்ஸ் .
வருணுடைய ஃபோனுக்கு திவ்யாவிடம் இருந்து வாய்ஸ் மெசேஜ் வந்திருந்தது,ஜானு ஏன் இங்கு வந்திருக்கிறாள். நீ ஏன் போனை எடுக்கவில்லை என்று கேட்டிருந்தாள்.ராமும், கதிரும் போதுமான ஆதாரங்கள் கிடைத்து விட்டதாக ஜானுவிடம் சொன்னார்கள். அதை காட்டி அரெஸ்ட் வாரண்ட் வாங்கலாம் என்றார்கள். ஆனால் அவளுடைய செல்வாக்கு ரொம்ப ஜாஸ்தி. நாம் ஜாக்கிரதையாக இதை கையாள வேண்டும் என்றாள் . பார்வதி போலீசில் சரணடைந்தாள். பிரேமாவையும், பறந்தாமனையும் நான்தான் கொன்றேன் என்றாள். ஜானு உடனே ஊருக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ராமும், கதிரும் தாங்கள் வாரணாசியில் இருந்து திவ்யாவை தொடர்ந்து கண்காணிப்பதாக சொன்னார்கள்.
ஜானு பார்வதியை சந்தித்தாள் . வருண் எங்கே . அவன் என்னிடம் இருந்து தப்பித்து விட்டான் என்றாள். எதற்காக பிரேமாவையும் ,பரந்தாமனையும் கொன்றாய் பார்வதி ? அவர்கள் இந்த சமுதாயத்திற்கு ரொம்ப ஆபத்தானவர்கள் என்றாள்.
வருண் வந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. என்னை விட்டு விடுங்கள் நான் உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்றான். அந்த நர்ஸ் புன்னகைத்தாள். வருண் தன் நிலை குறித்து கவலை அடைந்தான். ராம் எதிபார்த்த அந்த செய்தி கிடைத்தது. வெளிநாட்டில் இருந்து இன்று இரவு அவர்கள் ஒரு சிலையின் மூலமாக கஞ்சாவை கொண்டு வர இருக்கிறார்கள் . ராம் ஜானுவுக்கு தெரிவித்தான். அவள் போலீஸ் தலைமை அலுவலகத்தில் பேசி இரவு 2 மணிக்கு ஆசிரமத்தில் ரைட் நடத்த ஏற்பாடு செய்தாள்.ராமும் கதிரும் ஆசிரமத்தில் தங்கி கொண்டனர். இரவு 2 மணிக்கு அதிரடிப்படை அங்கு நுழைந்தது. எங்கு தேடியும் திவ்யா இல்லை. கஞ்சா பிடிபட்டது. பக்தர்கள் இங்குமங்கும் ஓடினர். திவ்யாவை பிடிக்க எல்லா ஏற்பாடுகளும் அரேஞ்ச் பண்ணப்பட்டது.
ஜானு வருண் அப்பா, அம்மாவிடம் என்ன சமாதானம் சொல்வதென்று புரியாமல் தவித்தாள். அவர்கள் ஜானுவை குறை சொல்லவில்லை. பார்வதியை அழைத்து கொண்டு சம்பவம் நடந்த இடதுக்கு அழைத்து போனார்கள். அவள் தனியாக இதை செய்திருக்க முடியாது என நம்பினார்கள் . இப்போது எதற்காக ஸரண்டர் ஆனாய் என்ற கேள்விக்கு என் வேலை இன்னும் முடியவில்லை என்றாள். திவ்யா தாய்லாந்து தப்பி போனது தெரிய வந்தது. போலீஸ் சர்வதேச போலீசின் உதவியை நாடியது. பார்வதி தொடர்ந்து விசாரிக்கப்பட்டாள். அவள் சிறையில் அடைக்கப்பட்டாள். ஸ்ரீதரும்,சுமதியும் வந்து பார்த்து போனார்கள். திவ்யா வெளிநாடு தப்பி போனதை அவர்கள் சொன்னார்கள். ராம் அவளை சும்மா விடமாட்டார் என்றாள்.
கதிரின் கல்யாணம் தீபாலியோடு சிறப்பாக நடைபெற்றது. ராம்,ஜானு, சுமதி, ஸ்ரீதர், தீபு ஆகியோர் கலந்து கொண்டனர். ஜானு ஸ்ரீதர் , சுமதியிடம் வருண் பற்றி தகவல் தெரியுமா எனக் கேட்டாள். எங்களுக்கு தெரியாது என்றார்கள். ராம் வருண் இருக்கும் இடத்தை விரைவில் கண்டுபிடிப்பேன் என்றான்.