iravai sudum velicham in Tamil Thriller by kattupaya s books and stories PDF | இரவை சுடும் வெளிச்சம் - 15

Featured Books
Categories
Share

இரவை சுடும் வெளிச்சம் - 15

இரவு 15

நடப்பவை பற்றி தீபுவிடம் விரிவாக பேசினான் ராம். ஒருபுறம் திவ்யா வெளிநாட்டுக்கு தப்பியதும், பார்வதி சரணடைந்ததும் குறித்து பேசினான். இன்னமும் ஸ்ரீதர், சுமதிக்கு ஆபத்து நீங்கவில்லை என்றும் சொன்னான். வருணை கண்டுபிடிக்க ஏதாவது செய்தாக வேண்டும் அது குறித்து அவனுடைய உடைமைகளை சோதிக்க ஜானுவிடம் பேச முடிவெடுத்தான். ஜானுவை நேரில் சந்திக்க அனுமதி கேட்டான். இதுக்கென்ன பர்மிஷன் நைட் 7 மணிக்கு வீட்டுக்கு வாங்க என்றாள். ஜானு வருண் பத்தி ஏதும் தெரிஞ்சதா என்றான். பார்வதி வாயை திறக்க மாட்டேங்குறா . சரி வருண் லேப்டாப் பார்க்க முடியுமா. பார்க்கலாம் என்று உள்ளே போய் எடுத்து வந்தாள். அதன் பாஸ்வேர்ட் ஜானுவுக்கு தெரிந்திருந்தது. அதில் கோட்கள் நிரம்பிய பைல்கள் இருந்தன. அவை ரகசிய கோடுகள் ஆக இருக்க வேண்டும் என ராம் சொன்னான். திவ்யாவுக்கும், வருணுக்கும் மட்டுமே தெரிந்த லாங்குவேஜ் ஆக அது இருக்கக்கூடும் என ஜானு சொன்னாள். மற்றபடி அந்த லேப்டாப்பில் பெரிய விஷயங்கள் இருக்கவில்லை.

அந்த பைல்களை ராம் தன்னுடைய லேப்டாப்புக்கு மாற்றி கொண்டான். நான் எதற்கும் இவற்றை மொழிபெயர்க்க முயற்சிக்கிறேன் என்றான். ஜானு நாம் கூடிய சீக்கிரமே திவ்யாவை தேடி தாய்லாந்து செல்ல வேண்டி வரலாம் என்றாள். நீங்கள் எப்போதும் தயாராய் இருங்கள் என்றும் சொன்னாள்.வருணுக்கு வேறு ஏதாவது பிளாட் அல்லது சொந்தமான இடம் இருக்கிறதா. நான் வருணுடைய அப்பாவிடம் பேசிவிட்டு உங்களுக்கு கால் பண்ணுகிறேன். சரி ஜானு அப்போது நான் கிளம்புகிறேன் என்றான். சுமதிக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக கதிருக்கு ஃபோன் பண்ணி சுமதி சொன்னாள். நீங்க பயப்படாதீங்க நான் என்னன்னு பார்க்கிறேன் என்றான். கீதாவை சிறையில் சந்தித்தாள் பார்வதி. கீதா எதுவும் பேசவில்லை. என்ன கீதா கண்டுக்காம போற என்றாள். நான் எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கி விட்டேன். தண்டனை அறிவிப்பிற்காக காத்திருக்கிறேன் என்றாள். ஆனா நீ செஞ்சதுக்கு வெறும் சிறை தண்டனை போதுமா? ஏன் என்னையும் பரந்தாமன், பிரேமாவை மாதிரி கொல்ல போகிறாயா என்றாள் . அதெப்படி நான் உடனே உன்னை கொல்லுவேன் சாவு பயம் என்றால் என்ன என்பதை உனக்கு காட்டியே கொல்லுவேன் என்றாள் பார்வதி.


சுமதி அந்த கொலை மிரட்டல் மெசேஜ்களை கதிருக்கு அனுப்பி இருந்தாள்.கதிர் அந்த நம்பருக்கு ஃபோன் பண்ணி பார்த்தான் . ஒருவரும் எடுக்கவில்லை. ராமிடமும் சொன்னான். ராம் உடனடியாக சிறையில் இருந்த மெடிக்கல் ஷாப் ஓனரை போய் பார்த்தான். எனக்கு தெரியும் ராம் நீதான் என்னை காட்டிக்கொடுத்தது என்று சொன்னார். அதோடு கூடிய சீக்கிரம் உனக்கு வேண்டப்பட்டவர்களை ஒவ்வொருவராய் இழப்பாய் என்றார். நான் செய்த தப்புக்கு அவர்களுக்கு எதற்கு தண்டனை என்றான். நீ அவர்கள் எல்லாம் சேர்ந்துதான் என்னை சிறையில் தள்ளினீர்கள். நான் சும்மா விடமாட்டேன் என் ஆட்கள் களத்தில் இருக்கிறார்கள் எந்த நேரமும் உனக்கு சாவு செய்தி வரும் என்று சொன்னார். இவன் அரைமனதாக அங்கிருந்து கிளம்பினான். தீபு நிலைமை மோசமாக இருக்கிறது. மெடிக்கல் ஷாப் ஓனர் நம் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார். நாம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றான்.

சுமதியையும், ஸ்ரீததரையும் ராம் சந்தித்தான். நீங்கள் இனியும் இந்த ஊரில் இருக்க வேண்டாம் .. வெளிநாடு சென்று விடுங்கள் என்றான்.என்னுடைய பெண் நினைவாகத்தான் நாங்கள் இங்கேயே இருக்கிறோம். எங்களுக்கு வேறு யோசனை இல்லை என்றாள் சுமதி. ஸ்ரீதர் ராம் சார் நீங்கள் கவலைப்பட வேண்டாம் நாங்கள் ஜாக்கிரதையாக இருப்போம் என்றான்.முனீருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.நீண்ட கால குற்றவாளியை ஆதாரத்துடன் பிடித்ததற்காக ஜானுவுக்கு நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது. பார்வதி கீதாவை சிறையிலயே வைத்து கொள்ள திட்டமிட்டாள். இரண்டு மூன்று பெண் கைதிகளிடம் பேசினாள். அவர்கள் ஒத்துழைப்பதாக சொன்னார்கள். கீதா இடையில் தன் கணவரை மட்டும் சந்தித்தாள். அவனிடம் நீ என்னை பார்ப்பது இதுவே கடைசி முறையாக இருக்கலாம் என்று சொன்னாள்.

திவ்யாவை தேடி கைது செய்யும்படி ஜானுவை தாய்லாந்து செல்ல போலீஸ் உயரதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்தது. ராம் உடன் அழைத்து போக பர்மிஷன் வாங்கினாள். வருண் நிலைமை என்னவாயிற்று என்ற கவலையும் எழாமல் இல்லை. தீபு காலையிலேயே ராமுக்கு அவசரமாக ஃபோன் செய்தாள். ராம் சார் யாரோ நைட் வந்து எல்லாத்தையும் கலைத்து போட்டிருக்காங்க என்றாள். தீபு நீ ஆபீஸ் பூட்டிவிட்டு வீட்டுக்கு போ. நான் வந்து பார்த்துக்கொள்கிறேன் என்றான்.சிசிடிவியையும் அடித்து நொறுக்கியிருக்கிறார்கள் என்று தீபு சொன்னாள். ராம் ஸ்டேஷன் போய் கம்ப்ளைண்ட் கொடுத்து வந்தான். அவர்கள் வந்து விசாரித்து விட்டு போனார்கள். ராம் தாய்லாந்து செல்லும் நாள் வந்தது. தீபுவும், கதிரும் ஏர்போர்ட் வந்திருந்தார்கள். சுமதி ஸ்ரீதர் ஜாக்கிரதை என்று கதிரிடம் ராம் சொன்னான்.


கதிர் தீபு ஆபீஸ் சென்று எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்த உதவினான். யார் இந்த வேலையை செய்திருப்பார்கள் என்று தெரியவில்லை என்று தீபு சொன்னாள் . சீக்கிரமே கண்டுபிடித்து விடலாம் என்றான் கதிர். பார்வதி திட்டப்படி இரவு கீதாவை கழுத்தை நெரித்து கொல்ல திட்டமிடப்பட்டது. யாரோ கூச்சலிடவே பார்வதி தப்பித்து விட்டாள். அவளை அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்கள். பார்வதியை தனி செல்லுக்கு மாற்றினார்கள். ஜானுவும் ஊரில் இல்லாததால் கீதா தனித்து விடப்பட்டாள் . சுமதியை யாரோ பின் தொடர்வதாக ஸ்ரீதர் சொல்லியிருந்தான். கதிர் உடனடியாக அவர்கள் இருக்கும் லொகேஷன் விரைந்தான். அவர்கள் அங்கு இல்லை. மறுபடி ஃபோன் செய்தான். ஸ்ரீதர்தான் எடுத்தான். அவர்கள் போய்விட்டார்கள். நாங்கள் வீடு அருகே இருக்கிற பார்க்கில் இருக்கிறோம் என்றான். கதிர் அவர்களை சந்தித்தான். ஆறுதல் கூறினான்.

தாய்லாந்து போய் இறங்கியதும் தீபுவுக்கு ஃபோன் செய்தான் ராம். தீபு கதிர் தனக்கு உதவி செய்ததாக சொன்னாள். வருண் வைத்திருந்த கோட் லாங்குவேஜ் குறித்து முயற்சித்து பார்க்கும்படி தீபுவிடம் சொன்னான். சரி சார் நான் நிச்சயம் பார்க்கிறேன் என்றாள் . ராமும், ஜானுவும் ஹோட்டல் ஒன்றில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தனி தனி அறையில் தங்கினார்கள்.கீதாவை அவள் கணவன் வந்து ஆஸ்பத்திரியில் பார்த்து சென்றான். திவ்யாவை தேட லோக்கல் போலீஸ் உதவி தேவைப்பட்டது. அந்த நகரில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் போய் தான் இந்தியாவில் இருந்து வந்து இருப்பதாக ரிப்போர்ட் செய்தாள் ஜானு. அவர்கள் சில இடங்களுக்கு அழைத்து சென்றார்கள். அவள் திவ்யா இருக்கக்கூடிய சில லொகேஷன்களை சொல்லி அங்கெல்லாம் செல்ல வேண்டுமென்றாள் . கார் ஒன்றை ஏற்பாடு செய்து தந்திருந்தார்கள். ராம் அந்த காரை ஓட்டினான். சுமதி , ஸ்ரீதர் கதிர் கொடுத்த தைரியத்தில் சற்றே ஆசுவாசத்துடன் இருந்தார்கள்.

வருண் நீண்ட தூக்கத்துக்கு பிறகு விழித்தான். இப்போது ஒரு சக்கர நாற்காலியோடு பிணைக்கப்பட்டு இருந்தான். அவனை ஒரு நர்ஸ் தள்ளிக்கொண்டு போனாள்.எங்கு கொண்டு போகிறீர்கள் என்னை என்றான். ஆபரேஷன் தியேட்டர் என்று சிரித்தாள். சும்மா சொன்னேன். நீ நடக்க முடியாதபடி ஆகிவிட்டாய் அதுதான் வண்டியில் அழைத்து போகிறேன் என்றாள். வருண் பதட்டத்துடன் இருந்தான். தலைமை டாக்டர் வருணை சோதித்து பார்த்தார். பிறகு எதுவும் சொல்லாமல் போனார். யாருக்கோ ஃபோன் செய்தது மாதிரி தெரிந்தது. ஓகே நான் பார்த்து கொள்கிறேன் என்றார். வருணுக்கு ஒன்றும் புரியவில்லை. திவ்யாவை தேடும் பணி தொடர்ந்தது. ராமும், ஜானுவும் இரவு 10 மணிக்கு ஹோட்டல் அறைக்கு திரும்பினார்கள். குளித்துவிட்டு சாப்பிட்டு விட்டு தூங்கினார்கள். ராம் அறை கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. அவன் தயங்கினான். ரூம் சர்வீஸ் என்றது குரல். கதவை திறந்தவுடன் இருவர் அவனை தாக்க துவங்கினர்.ராம் பதிலுக்கு தாக்கினான். சிறிது நேரத்தில் கூட்டம் கூடி விட இருவரும் ஓடினர்.

ராமுக்கு வலது கையில் கட்டு போடப்பட்டு இருந்தது. சாரி ராம் நான் உடனே வந்திருக்கணும் என்றாள் ஜானு. இட்ஸ் ஓகே என்றான். நீங்கள் ஓய்வெடுத்து கொள்ளுங்கள் நான் மட்டும் போய் பார்த்து வருகிறேன் என்றாள். ராம் வருத்தமாய் இருக்கிறது என்னால் உங்களுக்கு உதவ முடியவில்லை என்றான். அதெல்லாம் ஒன்றுமில்லை என்றாள். ராம் அந்த டேப்லெட் போட்டுக்கொண்டு சிறிது நேரம் உறங்கினான். போலீஸ் வந்து அவனை விசாரித்து போனார்கள். சுமதிக்கு அன்று உறக்கமில்லை. தன்னுடைய பெண் காணாமல் போனது, திரும்ப கிடைத்தது. காலாவதியான மருந்தால் அவதிப்பட்டது என அவளது நினைவுகள் நீண்டன . கதிர் ஃபோன் பண்ணியிருந்தான். நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள் என்று சொல்லியிருந்தான். தீபு அந்த கோட் லாங்குவேஜ் என்னவென்று கண்டு பிடித்து விட்டாள் . அது தாய்லாந்தில் உள்ள வெவ்வேறு லொகேஷன்களின் கோட்தான்.ராமுக்கு ஃபோன் செய்து விஷயத்தை சொன்னாள் . வெரி குட் தீபு நீ உடன் எனக்கு மெயில் பண்ணு என்றான்.

ஜானுவுக்கும் ஃபோன் பண்ணி ராம் இந்த விஷயத்தை சொன்னான். அவளும் மகிழ்ச்சி தெரிவித்தாள். ஜானு கார் பிரேக்டவுன் ஆனது. அப்போது அந்த வழியாக வந்த போலீஸ் வாகனத்தில் ஏறி ஹோட்டல் வந்து சேர்ந்தாள் . ராமிடம் இப்போது கை வலி எப்படி இருக்கிறது என விசாரித்தாள். இந்த மெயில் பாருங்கள் என லொகேஷன் காண்பித்தான். ஜானு நாம் நிச்சயம் இதை ஃபாலோ செய்வோம் என்றாள். வருண் தப்பிக்க முடிவு செய்தான். அவன் பாத்ரூம் போக மட்டும் கால் விலங்குகளை அவிழ்த்து விடுவார்கள். வாய்ப்புக்காக காத்திருந்தான். அவள் எப்போதும் போல சங்கிலியை அவிழ்த்தாள். அங்கிருந்த பாத்ரூம் உள்ளே சென்றவன் அதன் சன்னலின் கண்ணாடிகளை கழற்றி விட்டு அதன் வழியாக வெளியே குதித்தான். அங்கே ஒரே இருட்டாக இருந்தாது.காலிலும் கையிலும் முட்கள் ஏற வலியால் துடித்தான். சிறிது தூரம் விழுந்து உருண்டான் . மயக்கமாய் இருந்தது.

கதிர் சுமதிக்கு ஃபோன் செய்தான். எடுக்கவில்லை ஸ்ரீதரும் எடுக்கவில்லை. இவனுக்கு சும்மா சும்மா தொந்தரவு செய்கிறோமோ என்ற பயமும் இருந்தது. கீதா நலமடைந்தவுடன் திரும்ப ஜெயிலுக்கு போனாள். அவளை வேறு ஒரு ஊரின் சிறைச்சாலைக்கு சீக்கிரமே மாற்ற முடிவு செய்திருந்தார்கள். சுமதி இறந்து விட்டதாக எல்லோருக்கும் ஸ்ரீதரிடம் இருந்து மெசேஜ் வந்திருந்தது.