இரவு 16
சுமதி இறந்த செய்தி கேட்டு தீபுவும், கதிரும் சம்பவ இடத்துக்கு சென்றனர். ராமும் ஜானுவும் ரொம்ப வருத்தப்பட்டனர். ராம் ஸ்ரீதருக்கு ஃபோன் பண்ணி ஆறுதல் சொன்னான். சுமதி தன்னுடைய வீட்டு வாசலருகே நெஞ்சில் இரண்டு குண்டுகள் பாய்ந்து இறந்து கிடந்தாள். ஸ்ரீதர் அழுதபடி நின்றிருந்தார். போலீஸ் இன்னும் வந்திருக்கவில்லை. யாரோ பெல் அடிச்சாங்க அவதான் நானே போய் பார்க்கிறேன் என்றாள். யாரோ கார்ல வந்தவங்க தான் சுட்டிருக்கணும் அப்படின்னு சில பேர் சொன்னாங்க. எனக்கு எப்படி ஆறுதல் சொல்லறதுன்னு தெரியல. நிச்சயம் சுமதி மேடம் கொன்னவங்களை பிடிச்சு சட்டத்து முன்னாடி நிறுத்துவேன் என்றான் கதிர். தீபு வீட்டின் உள்ளே போய் சிசிடிவி காட்சிகளை பார்த்தான். இரண்டு முகமூடி அணிந்தவர்கள் காரில் இருந்தபடி சுமதியை துப்பாக்கியால் சுட்ட காட்சி பதிவாகி இருந்தது. ராம் கதிரிடம் பேசினான். தீபுவிடமும் ஜாக்கிரதையாக இருக்கும்படி சொன்னான்.
ஹாஸ்பிடலில் இருந்து வருண் தப்பித்தான். அங்கிருந்து சிலரிடம் லிப்ட் கேட்டு ஒரு இடத்தில் இறங்கி கொண்டான். அது ஒரு ஆசிரமம் ஆக இருந்தது. வருண் இருக்கிற நிலை பார்த்து அவனை பரிதாபப்பட்டு சேர்த்து கொண்டார்கள். அவனும் உடல் நிலை தேரும் வரை அங்கேயே தங்கி விட முடிவு செய்தான். பார்வதிக்கு வருண் ஹாஸ்பிடலில் இருந்து தப்பிய செய்தி போய் சேர்ந்தது. ஸ்ரீதர் தான் திரும்ப வெளிநாடு போக விரும்புவதாக கதிரிடம் சொன்னான் . அவன் மறுப்பேதும் சொல்லவில்லை.ராமும் ஜானும் சுமதியை கொன்றவர்களை சும்மா விடக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தனர். அன்றைய தினம் இரவில் திவ்யாவை தேடும் பணி தொடர்ந்தது. திவ்யாவை தேடுவதில் செலக்ட் செய்யப்பட்ட லொகேஷன்கள் இருந்தாலும் அவள் அடிக்கடி அதை மாற்றிக்கொண்டிருக்கிறாளோ என்ற சந்தேகமும் ஏற்பட்டது. ஜானு ஏன் ராம் சார் நாம் பிரிந்து தேடினால் என்ன? என்றாள் . நானும் அதைத்தான் யோசித்தேன் என்றான். அதன்படி ஆளுக்கொரு திசையில் சென்றார்கள்.
மறுநாள் காலையில் ராமை தாக்கியவர்கள் யார் என்று போலீஸ் கண்டுபிடித்து விட்டதாகவும் அவர்களை உள்ளூர் சாமியார் ஒருவர் அனுப்பியதாகவும் சொன்னார்கள். உடனே அந்த சாமியாரை விசாரிக்க ஜானு ராமோடு கிளம்பினாள் . அந்த சாமியார் இவர்களை வரவேற்றார். நீங்கள் எல்லோரையும் சந்தேகப்படுவதால் எனக்கு கோபம் ஏற்பட்டது அதனால்தான் ஆட்களை அனுப்பினேன் என்றார்.உங்களுக்கு இந்த பெண்ணை தெரியுமா என ஜானு திவ்யாவின் போட்டோவை காட்டி கேட்டாள். இரண்டு நாட்கள் முன்பாக ஒரு சந்திப்பில் பார்த்தேன் என்றார். ஹோட்டல் ஒன்றை குறிப்பிட்டு அங்கு போய் விசாரிக்கும்படி சொன்னார். உடனடியாக அங்கு விரைந்தனர். சிசிடிவி ஃபுடேஜ் செக் செய்தனர்.திவ்யா இப்போது கேஷுவல் உடையில் இருந்தாள். அவள் தங்கி இருந்த அறைக்கு சென்றனர். அவள் ஏற்கனவே காலி செய்து விட்டு போயிருந்தாள்.
அந்த அறை சுத்தமாக இருந்தது. ஆனாலும் ஏதாவது கிடைக்கும் என ராம் நம்பினான். அவன் தேடியது கிடைத்தது அவள் ஷாப்பிங் செய்த உடையின் ரசீது கிடைத்தது. இதை வைத்து என்ன செய்வது ராம். அவள் நிச்சயம் டெபிட் கார்ட் பயன்படுத்தி இருப்பாள். அதனுடைய விவரங்களை பெற முடியும் அதோடு அவள் அந்த டெபிட் கார்ட் பயன்படுத்தாமல் முடக்கவும் முடியும் என்றான்.
ராம் நீங்கள் ஹோட்டல் போய் ரெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள் நான் போய் விசாரித்து வருகிறேன் என்றாள் ஜானு. சரி ஜானு ஜாக்கிரதை என்றான். ஜானு அந்த ஷாப்பிங் மால் சென்று விசாரித்த போது அவள் ஒரு இன்டர்நேஷனல் கார்ட் பயன்படுத்தியதும் ஃபோன் நம்பர் பயன்படுத்தியதும் தெரிய வந்தது. அந்த ஃபோன் நம்பர் லொகேஷன் டிரேஸ் செய்ய சொல்லி உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தாள்.அவர்கள் துரிதமாக செயல்பட்டார்கள். ஆனால் அவள் ஃப்ளைட் ஏறி அடுத்த லொகேஷன் 1500கி மீட்டர் அப்பால் உள்ள சிறிய தீவுக்கு சென்று விட்டதாக தகவல் கிடைத்தது. ராம் இது ஒரு நல்ல முன்னேற்றம் என்றான். அவள் உஷாராவதற்குள் நாம் அங்கு போய் சேர வேண்டும் என்றான். ஜானு நான் ரெடி உடனே ஹோட்டல் அறையை காலி செய்து விட்டு கிளம்பினார்கள். வருணுக்கு திவ்யா தாய்லாந்து தப்பி சென்றது சற்று தாமதமாகத்தான் தெரிந்தது. அவளுக்கு ஒரு ஈமெயில் அனுப்பினான். நான் தாய்லாந்து வர விரும்புகிறேன் இங்கே போலீஸ் என்னை தேடுகிறார்கள் என்று சொல்லியிருந்தான்.
திவ்யா என்னையும் போலீஸ் தேடுகிறது ஆனால் நீ வருவதால் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை . இன்னும் இரண்டு நாட்களில் ஃப்ளைட் டிக்கெட் அனுப்புகிறேன் என்றாள் . கதிர் சுமதி கொலை சம்பந்தப்பட்ட நபர்களை தேடும் முயற்சியில் இறங்கினான். தீபு அவனுக்கு எல்லாவித ஒத்துழைப்பையும் வழங்குவதாக சொன்னாள்.வருண் தாய்லாந்து செல்வதற்கு முன் அப்பா அம்மாவை ஒரு தடவை பார்க்க நினைத்தான். அது ஆபத்துதான் எனவும் உணர்ந்திருந்தான். ஆனால் தன்னுடைய குடும்ப நிலவரம் தனக்கு தெரிய வேண்டும் என்றும் தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். அந்த சிறிய தீவில் ஃப்ளைட் பிடித்து போய் இங்கினார்கள் ராமும், ஜானுவும். ஹோட்டல் ஒன்றில் தங்கினார்கள். இரவு தேடுவதுவான் சரியாக இருக்கும் . அவள் ஃபோன் இருக்கும் லொகேஷன் பற்றி போலீஸ் அப்டேட் செய்து கொண்டிருந்தது. கதிர் சுமதியை சுட்ட துப்பாக்கியின் வகையை ஆராய்ந்து கொண்டு இருந்தான். அது ஒரு நாட்டுத்துப்பாக்கியாக இருக்க வாய்ப்பு அதிகம் இருந்தது. பறவைகள், விலங்குகளை சுட பயன்படுத்தும் துப்பாக்கியாக இருக்கும் என ஊகித்தான்.
தீபு அந்த துப்பாக்கி வைத்திருப்பவர்களின் லிஸ்ட் போலீஸ் ஸ்டேஷனில் போய் சிரமப்பட்டு வாங்கி வந்தாள். அதில் சந்தேகப்படும் நபர்களை குறித்து கொள்ளவும் செய்தாள். அதில் இருந்த இருவரின் அட்ரஸ்களையும் குறித்து கொண்டு கதிருக்கு அனுப்பினாள். ரொம்ப தாங்க்ஸ் தீபு என்றான் கதிர். ராமுக்கு அவ்வப்போது தகவல்களை அனுப்பி வந்தாள். வருண் சென்னை கிளம்ப ஆயத்தமானான் . அவனுக்கு இப்போது பதட்டமாய் இருந்தது. இரவு 2 மணிக்கு போய் சேர்ந்தான். காலையில் வீடு போய் சேர்ந்த போது எல்லோரும் தூங்கி கொண்டிருந்தனர். வருண் வந்ததை அறிந்த அவனது அப்பா அம்மா மகிழ்ந்தனர். அவர்கள் அதே சமயம் அவனை போலீஸ் தேடுகிறது எதற்காக எனவும் விசாரித்தனர். தான் இன்றே தாய்லாந்து போக இருப்பதாகவும் அவசர வேலை எனவும் சொன்னான். மீராவுக்கு தகவல் போய் அவள் மூலமாக ஜானுவுக்கு தகவல் போனது. அவன் எங்கும் தப்பி செல்லக்கூடாது என நினைத்தாள் ஜானு. உடனடியாக அவனை அரெஸ்ட் செய்யும்படி போலீசுக்கு உத்தரவிட்டாள். ஆனால் அவன் மதியம் 3 மணிக்கு ஏர்போர்ட் போய் சேர்ந்து விட்டான்.
அப்போது திவ்யாவிடம் இருந்து ஃபோன் வந்துவிட்டது. நீ தாய்லாந்து வர வேண்டாம் அந்த ஜானு என்னை நெருங்கி விட்டாள். நீ எப்படியாவது தப்பித்து கொள் அந்த டிக்கெட் கேன்ஸல் செய்து விட்டேன் என்றாள் திவ்யா. இதை கேட்ட வருண் அதிர்ந்தான். போலீஸ் அவனை ஏர்போர்ட் வாசலிலே வளைத்து பிடித்தது. ஜானுவுக்கு தகவல் பறந்தது. அன்று இரவு திவ்யா தங்கியிருக்கும் இடத்துக்கு அருகில் இருந்த வீட்டுக்கருகில் போலீஸ் பதுங்கி இருந்தார்கள். எல்லாம் ஸ்மூத் ஆக போய்க்கொண்டிருந்தது.ஜானுவை பின்தொடர்ந்தான் ராம். திவ்யாவின் வீட்டருகே டாக்ஸி ஒன்று வேண்டுமென்றே நிறுத்தப்பட்டது. திவ்யா தப்ப விரும்பினால் அதற்கென ஒரு கார் வைத்திருந்தாள். அவளுடைய அடுத்த திட்டம் என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. திவ்யா 12 மணிக்குத்தான் அந்த வீட்டுக்கு வந்தாள்.போலீஸ் பின் பக்க கதவை உடைக்க தயாராய் இருந்தது.
தீபு குடுத்த அட்ரஸ் சென்று கூரியர் பாய் போல நோட்டமிட்டான் கதிர். அங்கே யாரும் இல்லை. வீட்டின் பின் பக்கம் சென்றும் பார்த்தான். ஏமாற்றமடைந்தான். இன்னொரு வீட்டுக்கு போனான். அங்கே ஆட்கள் நிறைய பேர் இருந்தார்கள் அது ஒரு கவுன்சிலர் வீடு போல இருந்தது. ஒரு கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. கதிர் அந்த காரை ஆழமாக பார்த்தான். அந்த காரின் டையர்களில் செம்மண் படிந்திருந்தது. சுமதி வீட்டு வாசலில் கொட்டியிருந்த செம்மண் . இருந்தாலும் அவன் ஏதும் செய்யாமல் திரும்பினான். வருண் கைது செய்யப்பட்டதை அறிந்த தீபுவும், கதிரும் அதை பற்றி பேசி கொண்டனர். என்ன ஆச்சு நாட்டுத்துப்பாக்கி விவகாரம் என்றாள் தீபு. அந்த காரை நான் பார்த்தேன் என்றான். ஆனால் அந்த துப்பாக்கி அந்த வீட்டில்தான் இருக்கிறதா என்பதை உறுதிபடுத்த வேண்டும். நாளைக்கு நான் வேண்டுமானால் போகிறேன் என்றாள். தீபு இது ரொம்ப ரிஸ்க் எடுக்கிற மாதிரி என்றான். பரவாயில்லை நான் மக்கள் தொகை கணக்கெடுக்க போகிற மாதிரி போகிறேன் என்றாள். சரி உங்கள் விருப்பம் என்றான்.
உத்தரவு வந்ததும் திவ்யா தங்கியிருந்த வீட்டுக்குள் போலீஸ் நுழைந்தனர். திவ்யா பதறி அடித்து கொண்டு ஓடினாள். அவளை வாசலில் போலீஸ் மடக்கி பிடித்தது. ஜானு நிம்மதி பெருமூச்சு விட்டாள். ராம் நிம்மதி அடைந்தான். வருண் சிறையில் அடைக்கப்பட்டான். அவனிடம் போலீஸ் விசாரணையை துவங்கி இருந்தது. சில ஃபார்மாலிட்டீஸ் முடிக்க ஒரு நாள் டைம் கேட்டனர் தாய்லாந்து போலீசார்.ஜானுவும், ராமும் ஒரு நாள் தங்கும்படி ஆனது தாய்லாந்தில் . ஜானுவுக்கு சிறிய பாராட்டு விழா நடத்தப்பட்டது.
ராமுக்கு பெருமையாக இருந்தது. ஸ்ரீதர் வெளிநாடு போக தயாராகி விட்டான், அவன் நாளை போவதாக சொல்லி இருந்தான். தீபுவும் . கதிரும் ஏர்போர்ட் போயிருந்தனர் அவனை வழி அனுப்ப. அவனை அதிக விவரம் கேட்கவில்லை. கதிர் ஒரு லைசென்ஸ் உள்ள துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தான். ஸ்ரீதர் பத்திரமாக வெளிநாடு செல்லும் வரை அது உதவும் எனவும் நினைத்திருந்தான்.
ஃபார்மாலிட்டீஸ் முடிந்து திவ்யாவுடன் இந்தியா திரும்ப ஏர்போர்ட் வந்திருந்தார்கள் ஜானுவும் ராமும். திவ்யா எதுவும் பேசவில்லை. ராமும் எதுவும் பேசவில்லை.
ஸ்ரீதர் நீங்கள் இருவரும் எனக்காக நிறைய உதவிகள் செய்திருக்கிறீர்கள் அதற்க்கு நன்றி என்றான். காரில் ஏறி மூவரும் ஏர்போர்ட் அடைந்தார்கள். அது கதிரின் கார். அப்போது ஸ்ரீதர் நான் போய்க்கொள்கிறேன் என்றான். நாங்களும் வருகிறோம் என்றான் கதிர். இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது ஃப்ளைட் பிடிக்க. கதிரும்,தீபுவும் சுற்றுமுற்றும் பார்த்தபடி இருந்தார்கள். ஸ்ரீதர் ஃப்ளைட் ஏறி விட்டான். இவர்கள் நிம்மதி அடைந்தார்கள். ஜானுவை வரவேற்க ஒரு போலீஸ் பட்டாளமே வந்திருந்தது. ஜானு, திவ்யா,ராம் மூவரும் இந்தியா வந்தடைந்தார்கள்.