இரவு 17
திவ்யாவை பாதுகாப்பாக இந்தியா கொண்டு வந்து சிறையில் அடைத்தார்கள். ஜானுவுக்கு வருத்தமாய் இருந்தாலும் அதை காட்டிக்கொள்ளவில்லை.இரண்டு வார காலமாய் தாய்லாந்தில் அலைந்த களைப்பு தீர சற்று ஓய்வெடுத்து கொண்டாள் ஜானு. ஜானு உடல்நிலை சரியில்லாத அவள் அம்மாவை போய் பார்த்தாள். மீராதான் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தாள். ஜானு அம்மா ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டு இருந்தாள். என்னம்மா உன் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சே நீயே வருணை ஜெயிலில் தள்ளிட்டியே என்றாள். அதெல்லாம் நினைத்து நீங்க கவலைப்படாதீங்க அம்மா விதிப்படிதான் எல்லாம் நடக்கும் என்றாள் ஜானு.நீங்க ரெஸ்ட் எடுத்து கொள்ளுங்கள் நான் சாயங்காலம் வந்து பார்க்கிறேன் என்றாள். மீராவிடம் பேசிவிட்டு அவளிடம் கொஞ்சம் பணமும் கொடுத்துவிட்டு வந்தாள். ராம் ஃபோன் பண்ணியிருந்தான். வருணை பார்க்க விரும்புகிறேன் என்றான். நானும் உங்களோடு வருகிறேன் என்றாள் ஜானு. இதை வருண் விரும்புவாரா? அதை பற்றி எனக்கு கவலை இல்லை . மதியம் 2 மணிக்கு நான் உங்களை ஆபீசில் பிக்அப் செய்து கொள்கிறேன் . சரி ஜானு.
தீபுவும், கதிரும் அந்த கவுன்சிலர் வீட்டுக்கு போன போது காலை 11 மணி. வீட்டில் இருந்த பெண்மணிகளிடம் விசாரித்த போது அவர்களுக்கு அதிக விவரம் தெரியவில்லை. கவுன்சிலர் பெயர் கந்தவேல் என்று தெரிய வந்தது. அவருக்கு ஸ்கூல் போகும் வயதில் மகனும், மகளும் இருக்கிறார்கள். தீபுவும், கதிரும் ஏமாற்றம் அடைந்தனர். தீபு அந்த துப்பாக்கி பற்றி கேட்கலாமா என்றாள். அவர்கள் உஷாராகி விடுவார்கள் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றான்.சிறையில் திவ்யாவை சந்தித்தாள் பார்வதி. திவ்யா பெயருக்கு பார்வதியை நலம் விசாரித்தாள். என்ன திவ்யா இதெல்லாம் உண்மையா ? என்றாள் பார்வதி. எல்லாம் அந்த கடவுளுக்கு தெரியும் . இங்கே வந்தாலும் தத்துவமா ? அப்படியில்லை நான் மெய் ஞானம் தேடி போனேன். கடைசியில் விதி என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்து விட்டது. வருணுக்கும் உனக்கும் எப்படி பழக்கம் ? அது பற்றி இப்போது பேச வேண்டாமே .. உனக்கு ஏன் இப்படி நிகழ்ந்தது என்பது எனக்கு புரியவில்லை அதுதான் கேட்டேன். அந்த வருண் என்னிடம் இருந்து தப்பித்து விட்டான். ஆனால் சட்டத்தின் பிடியில் மாட்டிக்கொண்டான் .
மதியம் 2 மணிக்கு ஜானுவும், ராமும் வருண் இருக்கும் சிறைக்கு வந்தனர். வருணை கைவிலங்கோடு காவலர்கள் அழைத்து வந்தனர். நீ மட்டும் வந்திருக்க கூடாதா ஜானு? கூடவே ராம் எதற்கு என்றான். அவர் இருந்தால் என்ன அது எந்த வகையில் உன்னை பாதிக்கிறது. நீ உண்மையை ஒப்புக்கொண்டு ஸரண்டர் ஆகியிருந்தால் இவ்வளவு தூரம் நடந்திருக்காது என்றாள் . போதும் ஜானு நான் தப்பு செய்தேன் தான் ஆனால் அதன் விளைவுகளை சிந்தித்து பார்த்திருக்க வேண்டும். உன்னை குறைத்து எடை போட்டுவிட்டேன் என்றான். நீ திருந்த போவதே இல்லையா வருண். உன் அப்பா அம்மா எவ்வளவு வருத்தப்படுகிறார்கள். சரி இப்போது எதற்காக வந்தாய் ஜானு . இன்னும் உன் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்றாள் . அவன் மௌனமாய் இருந்தான். சரி உன் விருப்பம். நான் கிளம்பிகிறேன். ராம் நீ என்னை அளவுக்கு மீறி சோதித்து விட்டாய் . நான் பதில் சொல்லும் காலம் வரும் என்றான். காவலர்கள் வருணை அழைத்து சென்றனர்.
அன்று இரவே ஜானுவின் அம்மா காலமாகி விட்டதாக தகவல் கிடைத்தது. உடனே தீபு, கதிர், ராம் எல்லோரும் ஜானு வீட்டுக்கு போனார்கள்.ஜானு மிகுந்த துக்கத்தில் இருந்தாள்.மீரா அழுதபடி ஆம்புலன்ஸில் இருந்து இறங்கினாள். ஜானு இறுதி காரியங்களை செய்தாள் . ஜானுவின் சொந்தக்காரர் ஒருவர் ஜானுவின் அம்மாவுக்கு கொள்ளி வைத்தார். ராம் ஜானுவுக்கு எவ்வாறு ஆறுதல் கூறுவது என்று புரியாமல் தவித்தான். தீபுவின் தோள் மீது சாய்ந்து அழுதாள் .கதிர் தன் மனைவி தீபாலியோடு வந்திருந்தான். வருண் அப்பா அம்மா வந்திருந்தார்கள். பாதுகாப்பு காரணங்களுக்காக வருண் வர வேண்டாம் என ஜானு சொல்லிவிட்டாள். ராம் தீபுவுடன் அங்கிருந்து கிளம்பினான். ராம் ஜானுவுக்கு ஏன் இவ்வளவு சோதனை என்பது புரியவில்லை என்றான்.தீபு எல்லாவற்றையும் காலம் சரி செய்யும் என்றாள். மெடிக்கல் ஷாப் ஓனர் போராடி ஜாமீன் வாங்கினார். அவரது ஆட்களை கூப்பிட்டு பேசினார். இனி நாம் பழையபடி பிஸினஸ் நடத்தலாம் ஆனால் எச்சரிக்கையோடு நடத்த வேண்டும் என்றார்.
மெடிக்கல் ஷாப் ஓனர் குமரஜோதி வருணை சந்திக்க அனுமதி வாங்கினார். வருண் சோர்ந்து போயிருந்தான். நீ கவலைப்படாதே வருண் உன்னுடைய முழு ப்ரோஃபைல் எனக்கு தெரியும். உன்னை வெளியே கொண்டு வருவேன் அதன் பிறகு நாம் பிஸினஸ் செய்யலாம் என்றார். நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி என்றான். ராம்,கதிர் இருவர் மீதும் எனக்கு அடங்காத கோபம் உள்ளது . நேரம் வரும் போது அதை வெளிப்படுத்துவேன் என்றார்.என்னுடைய காலாவதியான மருந்து விற்பனையை காட்டிக்கொடுத்ததும் இல்லாமல் என்னையும் சிறையில் தள்ளிவிட்டான் ராம். அவனுடைய ஆபீஸ் மீது என் ஆட்களை விட்டு அட்டாக் பண்னினேன்.அப்போதும் அவன் பயப்படவில்லை என்றார். சரி நான் கிளம்புகிறேன் அடுத்த முறை உன்னை சிறைக்கு வெளியில்தான் பார்ப்பேன் . போதிய ஆதாரங்களை காண்பித்த பிறகும் கூட வருணும், திவ்யாவும் குற்றங்களை ஒப்புக்கொள்ளவில்லை .பிடிவாதமாய் இருந்தனர். இது போலீசுக்கு பெரிய தலைவலியாக இருந்தது.இருவருக்கும் ஆஜராக வக்கீல் ஒருவரும் இருந்தார்.
கீதா வேறு ஊரில் உள்ள சிறைக்கு மாற்றப்பட்டாள் . அவள் மீதான குற்றங்கள் நிரூபிக்கபட்டு அவள் தண்டனை விவரங்கள் தெரியும் தேதி தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. ராம் கவுன்சிலர் கந்தவேல் அசிஸ்டண்டிடம் பேசினான். அவன் பிடிகொடுக்கவில்லை.பிறகு அந்த துப்பாக்கி புல்லட் விவரங்களை கொண்டு வந்து தர பணம் கேட்டான். ராம் ஒப்புக்கொண்டான். நமக்கு வேறு வழியில்லை கதிர் என்றான். அவன் ஒரு வாரத்தில் புல்லட் விவரங்களை தருவதாக சொன்னான். ராம் சுமதி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட வீடியோ ஃபுடேஜை திரும்ப பார்த்தான். அதில் டிரைவர் சீட்டில் ஒருவன் அமர்ந்திருக்க இன்னொருவன் தான் சுட்டான். ராம் அந்த வீடியோவை கவனமாக பார்த்த போது சுடுபவனுக்கு ஆறு விரல் இருப்பது உறுதியானது. அதோடு அவனுடைய கண்கள் பழைய குற்றவாளிகளோடு ஒத்து போகிறதா என பார்த்தான். அவன் பெயர் குமார் என தெரிந்தது. ஜானுவின் உதவியோடு அவன் வீட்டு விலாசத்தை கண்டுபிடித்தான்.
திவ்யா , வருண் கேஸ் சீக்கிரம் முடிக்க வேண்டும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி தண்டனை வாங்கி தரவேண்டும் என ஜானு நினைத்தாள். சில சர்வதேச நிறுவனங்களும் திவ்யாவுக்கு ஆதரவாக ஆஜர் ஆக தயாராய் இருந்தார்கள். ஒரு சில நிறுவனங்களால் திவ்யாவின் உயிருக்கே ஆபத்து இருந்தது. இந்த நிலையில்தான் ஜானு திவ்யாவை சந்தித்து மறுபடி பேசினாள். உனக்கு ஏன் இந்த நிலை நன்றாக யோசித்து பார். ஜானு என்னிடம் பேசுவதை விட்டு ஆக வேண்டியதை பார். கோர்ட்டில் பார்த்துக்கொள்ளலாம் . நான் உன்னை அப்படியே விட்டுவிட போவதில்லை திவ்யா என்றாள் ஜானு. ம் எல்லாம் அந்த சிவனுக்கு தெரியும். நீ நினைப்பதும் நான் நினைப்பதும் அவ்வளவு சீக்கிரம் நடக்காது. ஜானு அங்கிருந்து ஒன்றும் சொல்லாமல் கிளம்பினாள் .பார்வதி மீதான குற்றங்களுக்கு ஒரு சாட்சி கூட இல்லை. கைரேகை கூட இல்லை .அவளாய் குற்றங்களை ஒப்புக்கொண்ட போதும் அவள் மீதான குற்றங்களுக்கு ஆதாரம் தேவைப்பட்டது. பார்வதி கூடிய சீக்கிரம் விடுதலை ஆவாள் என்ற செய்தி ராமுக்கு கிடைத்தது.
குமார் வீட்டுக்கு ராம் போனான்.குமார் வெளியூரில் இருப்பதாக சொன்னார்கள். அவன் வீட்டில் இறந்து போன பாண்டி படம் மாலையிடப்பட்டு இருந்தது. தான் பாண்டியின் நண்பர் என ராம் அறிமுகபடுத்தி கொண்டான்.குமார் பாண்டியின் சித்தப்பா பையன் என தெரிந்தது. அவன் வந்தால் இந்த நம்பர் மூலம் கூப்பிடும் படி சொல்லிவிட்டு வந்தான் ராம். கந்தவேல் அசிஸ்டண்ட் புல்லட் விவரங்களை கொடுத்தான். ராம் அதனை சுமதி போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்டில் குறிப்பிட்டிருந்த புல்லட்களோடு ஒப்பிட்டு பார்த்தான். இரண்டும் ஒன்றாக இருந்தது. ராம் குமாரின் ஃபோன் வருகைக்காக காத்திருந்தான். ஸ்ரீதர் ஃபோன் பண்ணியிருந்தான். ஸ்ரீதரிடம் விஷயத்தை சொன்னான் ராம். பாண்டி சொந்தக்காரனா ? ம் நான் பார்த்துககொள்கிறேன் என்றான் ஸ்ரீதர். எதிர்பார்த்தபடி குமார் ஃபோன் செய்திருந்தான். என்ன சார் வேணும் என்றான். நீதான் சுமதியை சுட்டது அப்படின்னு எங்களுக்கு தெரியும். பாண்டியை கொன்னதுக்கு பழி வாங்கத்தான் சுட்டேன் . அப்பவே ஸ்ரீதரை தீர்த்து இருப்பேன். கொஞ்சம் அவசர வேலையா போயிட்டேன் என்றான். நீ செஞ்சது தப்பு என்றான் ராம். அவன் போனை வைத்து விட்டான்.
கவுன்சிலர் கந்தவேல் துப்பாக்கி குமாருக்கு எப்படி கிடைத்தது என்ற கேள்வியும் எழுந்தது. போலீஸ் குமார் வீட்டை சோதனை செய்தது. ஒன்றும் கிடைக்கவில்லை. குமார் அவர்களிடம் இருந்து தப்பித்தான். பார்வதி விடுதலை ஆகிவிட்டாள். அவள் மீதுள்ள குற்றங்கள் நிரூபிக்க படாததால் விடுதலை செய்யப்பட்டாள். அவள் ராமை வந்து பார்த்தாள் . ராம் எனக்கு என்ன சொல்லுவது என்றே புரியவில்லை என்றான். சட்டம் ஓட்டைகள் நிரம்பியது என்றாள் . இனிமேலாவது நிம்மதியாய் இரு பார்வதி என்றான் ராம். இனிதான் எனக்கு வேலை அதிகம் என்றாள். ஸ்ரீதர் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அவனை இதில் இருந்து எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்றாள். உனக்கெப்படி தெரியும் எல்லாம் தெரியும். சிறையில் இங்கு இருப்பதை விட அதிக தகவல்கள் துல்லியமாக கிடைக்கும் என்றாள் . ராம் , தீபு, கதிர் , பார்வதி ஆகியோர் சேர்ந்து லஞ்ச் சாப்பிட்டனர்.
குமார் எங்கோ பதுங்கியிருந்தான். கந்தவேல் ராமுக்கு ஃபோன் பண்ணி மிரட்டினார். தம்பி குமார் விஷயத்திலே நீ தலையிடாதே என்றார். உங்களுக்கும் இதில் சம்பந்தம் இருக்கா என கேட்டான். நீ தேவையில்லாமல் பேசுகிறாய் என்றார் கந்தவேல். இவன் போனை வைத்தான்.
பார்வதி பரந்தாமனையும்,பிரேமாவையும் தீர்த்து கட்டினாள். ஆனால் அந்த குற்ற உணர்வின் காரணமாக ஜெயிலுக்கும் போனாள். கீதாவையும், வருணையும் கொலை செய்ய முயன்றாள் அது நடக்கவில்லை. அவளுடைய அடுத்த இலக்கு என்ன என்பதே புரியாமல் இருந்தது. ஒருவேளை சுமதியை கொன்றவர்களை பழி வாங்குவாளோ என்ற அச்சமும் ராமுக்கு இருந்தது.பார்வதியின் அணுகுமுறை வித்தியாசமாக இருந்தது,.