iravai sudum velicham in Tamil Thriller by kattupaya s books and stories PDF | இரவை சுடும் வெளிச்சம் - 18

Featured Books
Categories
Share

இரவை சுடும் வெளிச்சம் - 18

இரவு 18

ஸ்ரீதர் உயிருக்கு குமாரால் ஆபத்து இருப்பதை குறித்து ராம் ஆழ்ந்த கவலையில் இருந்தான். தீபு அவனுக்கு தைரியம் சொன்னாள். எபடியும் போலீஸ் குமாரை அரெஸ்ட் செய்துவிடும் என்று நம்புகிறேன் என்றும் சொன்னாள். ஒருபுறம் கந்தவேலும்,குமாரும். மறுபுறம் குமரஜோதி .இருவரது தொல்லைகளிலும் இருந்து தப்பித்தாக வேண்டும். பார்வதி ராமுடைய ஆபீஸ் வந்திருந்தாள். அடுத்து என்ன செய்வதாக உத்தேசம் என்றான் ராம். சொந்தமா டெக்ஸ்டைல் பிஸினஸ் பண்ண போகிறேன் என்றாள். அதெல்லாம் சரியாக வருமா பார்வதி ? நிறைய பணம் தேவைப்படுமே என்றாள் தீபு. ஸ்ரீதர் உதவி செய்வதாக சொல்லி இருக்கிறான். பாங்க் லோன் அப்ளை செய்யலாம் என இருக்கிறேன். ம் நல்ல விஷயம் அதை கடைசி வரை விடாமல் காப்பாற்ற வேண்டும் என்றான் ராம். சுமதி கொலையில் சம்பந்தப்பட்ட டிரைவரையும் போலீஸ் தேடியது. அவனும் போலீசுக்கு சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தான்.வருணுக்கு ஜாமீன் வாங்க குமரஜோதி வக்கீல் மூலமாக ரொம்பவே முயற்சி பண்ணிக்கொண்டிருந்தார்.

ராம் அந்த டிரைவர் பற்றியும் தேடுதல் முயற்சி மேற்கொண்டு இருந்தான். ஒரு க்ளுவும் கிடைக்கவில்லை.கதிர் மனைவி தீபாலியோடு இரண்டு வார பயணமாக ஹனிமூன் போயிருந்தான்.ராம் சுமதி சுடப்பட்ட தெருவிற்கு போய் சிலரை விசாரித்தான். அந்த கார் ரொம்ப நேரம் அந்த தெரு முனையில் நின்றதாக சொன்னார்கள். வண்டி நம்பர் யாரும் அறியவில்லை.ஏதேனும் தகவல் தெரிந்தால் தெரிவிக்கும்படி சொன்னான் ராம். அதே தெரு முனையில் மாஸ்க் ஷாப் ஒன்று இருப்பதை கண்டறிந்தான். ஒரு வேளை அந்த கடையில் இருவரும் மாஸ்க் வாங்கியிருந்தால் ? உடனடியாக அந்த கடை உரிமையாளரை அணுகினான். அவர் கடையில் சிசிடிவி இருந்தது. சம்பவம் நடந்த 1 மணி நேரம் முன்புதான் அந்த டிரைவர் காரில் இருந்து இறங்கி இருவருக்கும் மாஸ்க் வாங்குவது தெரிந்தது. குமார் காரிலேயே இருந்தான். காரின் எண் என்னவென்று தெரிந்து விட்டது. கடை ஓனருக்கு நன்றி தெரிவித்தான்.

சம்பந்தப்பட்ட கார் கவுன்சிலர் கந்தவேலுக்கு சொந்தமானது. டிரைவர் பெயர் பரிதி . ராம் பரிதியின் வீட்டு அட்ரஸ் கண்டுபிடித்து போனான். பரிதி வெளியூர் போயிருப்பதாக சொன்னார்கள். அதே வண்டி வீட்டுக்கு வெளியே நின்றது.பொய் சொல்லுகிறார்கள் என்று ராமுக்கு தோன்றியது.ராம் அங்கேயே ஒரு கடையில் நின்று நோட்டமிட்டான். சிறிது நேரத்தில் காரை எடுத்துக்கொண்டு பரிதி கிளம்பினான். ராம் பரிதி காரில் பொருத்தியிருந்த ஜி பி எஸ் அவன் காரை எங்கு எடுத்து போகிறான் என்பதை காட்டியது . நேராக கார் கவுன்சிலர் வீட்டுக்குத்தான் போனது. பரீதியிடம் என்ன விஷயம் என கேட்டான் கந்தவேல். அவன் என்னை தேடி வீடு வரை வந்துவிட்டான் என்றான் பரிதி . நல்லது அவனுக்கு நேரம் நெருங்கி விட்டது. நீ கவலைப்படாமல் போ என்றான். ராம் போலீசுக்கு தகவல் கொடுத்தான்.அடுத்த சில நாட்களில் சிசிடிவி ஆதாரத்தை வைத்து பரிதியை போலீஸ் கைது செய்தனர்.

பரிதி வாயே திறக்கவில்லை. விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தான். வருணுக்கு குமரஜோதி தயவால் ஜாமீன் கிடைத்தது. வருணால் இதை நம்ப முடியவில்லை. திவ்யாவுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை . ஜானு கோட்டைவிட்டு விட்டதாக மீடியாவில் செய்தி பரவியது. ராமும் அதிர்ச்சி அடைந்தான். வருண் சிறிது காலம் பிரேக் எடுத்துக்கொள்ள தீர்மானித்தான். அவனுக்கு சொந்தமான பிரைவேட் பங்களா ஒன்றில் தங்க முடிவெடுத்தான். பார்வதிக்கும் ஆச்சரியம் தாங்கவில்லை. எப்படி வெளியே வந்தான் என்பது புதிராக இருந்தது. ஜானு ராமிடம் சொல்லி வருத்தப்பட்டாள். ராம் நிச்சயம் இது நீடிக்காது என்றான்.வருண் பார்வதியிடம் போனில் பேசினான். என்ன பார்வதி கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்ட ? இப்போ நான் வெளியில. பார்வதி நான் உன்னை அந்த ஆஸ்பத்திரியில் இருந்து வெளியில் விட்டிருக்க கூடாது என்றாள்.இனிமேல்தான் வருணின் சுயரூபத்தை பார்க்க போகிறாய் என்று சொல்லிவிட்டு ஃபோனை வைத்தான்.

மீரா தன்னுடைய ஐபிஎஸ் தேர்வுக்கான பயிற்சி வகுப்பை நல்ல முறையில் நிறைவு செய்திருந்தாள். தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது இருந்தது. ஜானுவும் மீராவும் மனம் விட்டு பேசி பல மாதங்கள் ஆகியிருந்தது. ஜானுவுக்கு மீரா ஃபோன் செய்தாள். அக்கா என்ன பிஸியா ? ஆமாம் ஆனா என்ன விஷயம் சொல்லு மீரா.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும் நாளைக்கு காலைல கோவில்ல மீட் பண்ணலாமா ? சரி மீரா நான் வரேன் என்றாள். பாவம் மீரா அவளுக்கென்று வேறு யார் இருக்கிறார்கள். நான் இருக்கிற ஒருத்தரையும் ஜெயிலில் தள்ளி அவன் வெளியே தப்பி போனதை எண்ணி வருத்தப்பட்டு கொண்டிருக்கிறேன் என நினைத்தாள். மறுநாள் காலையில் மீராவை சந்தித்தாள் ஜானு. என்னவோ சொல்ல வேண்டும் என்றாயே என்றாள். வருண் மாமாவை நினைத்தால்.. அதெல்லாம் உனக்கு வேண்டாத வேலை . ம் உனக்கு எவ்வளவு கோவம் வருகிறது என்றாள். மீரா நீ உன் படிப்பில் மொத்த கவனத்தையும் செலுத்து என்றாள். சரி அக்கா.மீரா நாம் வீடு மாறி விடலாம் என நினைக்கிறேன் என்றாள்.

ராம் நடந்தவற்றை தீபுவிடம் விவரித்தான். அந்த டிரைவர் இப்படித்தான் மாஸ்க் வாங்க போகும்போது சிசிடிவி உதவியால் மாட்டிக்கொண்டான் என சொன்னான். குமார் எவ்வளவு நாள் இப்படி ஒளிந்து கொள்வான் என்று தீபு வினவினாள். அந்த துப்பாக்கி குமாரிடம்தான் இருக்க வேண்டும் என ராம் கூறினான். ராம் நான் நாளை போலீஸ் ஸ்டேஷன் வரை போய் அந்த பரிதியை பார்த்து வருகிறேன் என்றான். அவன் என்னை பார்த்தாலாவது ஏதாவது சொல்கிறானா என பார்ப்போம் என்றான். தீபு ஆல் தி பெஸ்ட் என்றாள். ராம் வருகையை பரிதி எதிர்பார்க்கவில்லை. ராம் நீ இப்படி செய்திருக்கக்கூடாது என்றான் பரிதி. கொலை செய்தது நீ. நான் ஒன்றும் சுமதியை சுடவில்லை என்றான். ராம் அங்கிருந்து கிளம்பினான். ஜானுவை சந்தித்தான். வருண் விவகாரத்தில் என்ன ஜானு செய்ய போகிறீர்கள் என்றான். நான் மேல்முறையீடு செய்ய போகிறேன் என்றாள். பரிதி டிரைவரை பார்த்தேன் அவன் ஒத்துக்கொள்ள மாட்டான் போல தெரிகிறது. அவனை நான் பார்த்துக்கொள்கிறேன் . சரி .

கோர்ட்டில் தொடர்ந்து விவாதங்கள் திவ்யா வழக்கில் நடந்தது. அவளுடைய நடவடிக்கைகள் தேச விரோதமானவை என வாதிடப்பட்டது. வருணுக்கும் அவளுக்கும் திவ்யா போலீஸ் ஆக பணியாற்றிய போதே பழக்கம் மற்றும் போதை பொருள் பரிமாற்றம் இருந்தது தெரிய வந்தது.திவ்யா மீது குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.வழக்கு இன்னும் மூன்று மாதங்களில் முடியும்என ஜானுவுக்கு தோன்றியது. வருண் அடுத்து என்ன செய்வதென ஆலோசனை செய்தான். வெளியூர் எங்கும் போக கூடாதென உத்தரவு போட்டிருந்தார்கள். குமரஜோதி மட்டும் அவ்வப்போது போனில் பேசி வந்தார். அவனுடைய அப்பா,அம்மாவை போய் பார்த்து வந்தான்.அவர்கள் தங்களுடைய சொத்தை ஜானு பேருக்கு மாற்ற முயன்று கொண்டிருந்தார்கள். பார்வதி எப்படியோ போராடி பாங்கில் லோன் வாங்கி விட்டாள். இன்னும் 3 மாதத்தில் டெக்ஸ்டைல் ஷோ ரூம் திறக்க ஏற்பாடு செய்துள்ளதாக ராமிடம் சொன்னாள்.

ஸ்ரீதர் அந்த டெக்ஸ்டைல் ஷோரூம் திறப்பு விழாவிற்கு வருவதாக சொல்லியிருந்தான். குமார் அந்த தருணம் எதிர்பார்த்து காத்திருந்தான். கதிர் ஹனிமூன் முடிந்து ஊரில் இருந்து வந்திருந்தான். ராமை சந்தித்தான். சுமதி கேசில் உள்ள முன்னேற்றங்களை கேட்டறிந்தான். ராமுக்கும், தீபுவுக்கும் கிப்ட் ஒன்றை வாங்கி வந்திருந்தான். வருண் சிறையில் இருந்த திவ்யாவை பார்த்தான். நிச்சயம் திவ்யாவை வெளியில் கொண்டு வருவதாக உறுதி அளித்தான். கீதாவுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. பரந்தாமனும், பிரேமாவும் தண்டனை அனுபவிக்காமல் போய் சேர்ந்துவிட்டதாக கீதா நினைத்தாள்.கதிர் குமார் ஸ்ரீதர் இங்கே வரும் பொது நிச்சயம் வருவான் என்றான். அது எனக்கு கவலையளிக்கிறது என்று ராம் சொன்னான்.பார்வதி அந்த கடையின் திறப்பு விழாவிற்காக பத்திரிக்கைகளை தெரிந்த எல்லோருக்கும் கொடுத்துக்கொண்டிருந்தாள் . பார்வதி செம ஸ்பீட் ஆக இருக்கிறாயே என்றான் ராம்.

கந்தவேல் வந்து பரிதியை பார்த்து போனதாக சொன்னாள் ஜானு. பரிதி இப்போதும் அப்படியே இருந்தான். குமார் எங்கே என்ற கேள்விக்கு அவனிடத்தில் பதில் இல்லை.ஸ்ரீதர் ஒரு மாதம் முன்பே வெளிநாட்டில் இருந்து வந்து விட்டான். பார்வதிக்கு எல்லா உதவிகளும் செய்தான். இது ஒரு புதிய தொடக்கமாக பார்வதிக்கு இருக்க வேண்டும் என நினைத்தான். ராம், கதிர், தீபு, ஜானு எல்லோரையும் சந்தித்தான். அவன் குமாரை பற்றி கவலைப்படவில்லை.கந்தவேல் அந்த காரை போலீஸ் ஸ்டேஷனில் சொல்லி எடுத்து போனான். ராம் அந்த கார் எங்கெல்லாம் போகிறதென்பதை கண்காணித்து வந்தான். பார்வதியை திருமணம் செய்து கொள்ளலாமே என ராம் கேட்டான் ஸ்ரீதரிடம். அதெல்லாம் வேண்டாம் சார். நானே ஆபத்தில் இருக்கிறேன் என்றான். அவன் ரம்யா, சுமதி தங்கியிருந்த வீட்டை விற்க முடிவு செய்தான் ஸ்ரீதர். எல்லாம் முடிஞ்சு போச்சு என்றான். பார்வதி வீட்டிலேயே தங்கி கொண்டான்.

ஷோரூம் திறப்பு விழாவிற்கு இரண்டு நாட்கள் முன்பு யாரோ புரோக்கர் வீடு பார்க்க வந்திருப்பதாக ஸ்ரீதருக்கு ஃபோன் வந்தது. நானும் வருகிறேன் என கதிரும் கூட போனான். கதிர் சந்தேகப்பட்டது சரியாய் போனது.புரோக்கர் கூட பேசிக்கொண்டிருக்கும் போதே யாரோ மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டார்கள். இந்த முறை திருப்பி சுட்டான் ஸ்ரீதர். அவனிடத்திலும் கன் இருந்தது. வந்தவர்கள் திரும்பி போக நினைத்த போது கதிர் சுட்டதில் குமாரின் காலில் குண்டு பாய்ந்தது. துப்பாக்கியை போட்டுவிட்டு காரில் ஏறி மறைந்தார்கள்.கதிர் அது சுமதியை சுட பயன்படுத்திய துப்பாக்கிதான் என உறுதிபடுத்தினான்.குமார் கந்தவேல் உதவியுடன் தனியார் ஹாஸ்பிடல் ஒன்றில் சேர்க்கப்பட்டான். போலீஸ் அவனை கைது செய்தது. துப்பாக்கி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டது. கந்தவேலும் கைது செய்யப்பட்டான். ஜானு இருவர் மீதும் ஸ்ரீதர் மீதான கொலை முயற்சி , சுமதி கொலை வழக்குகள் பதிய உத்தரவிட்டாள் . ராம் நிம்மதி அடைந்தான்.
ஷோ ரூம் திறப்பு விழாவிற்கு தன் மனைவி தீபாலியோடு வந்து வாழ்த்தினான் கதிர்.ஜானு, மீரா, ராம். தீபு ஆகியோர் வந்திருந்து வாழ்த்தினார்கள். ஜானு ராமிடம் பேசிக்கொண்டிருந்தாள். ஸ்ரீதருக்கு இவ்வளவு பிரச்சனைகள் இருந்த போதும் பார்வதிக்காக ரொம்ப உதவியிருக்கிறார் என்றாள். ராம் அதை ஆமோதித்தான்.