இரவு 21
ஒரு சின்னப்பய என் மேல கைய வெச்சுட்டான் .. எவ்வளவு திமிர் அவனுக்கு என்றான் கந்தவேல். ஆமா தலைவரே அவனை எங்க கிட்ட விட்டுடுங்க தலைவரே நாங்க பார்த்துக்கிறோம் என்றனர் அவனது சகாக்கள். அதெல்லாம் நேரம் வரும்போது பார்த்து பண்ணுங்க என்றான் கந்தவேல். ராம் பரிதியின் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்டை போராடி பெற்றான். அதில் கழுத்து இறுக்கப்பட்டு மரணம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது அதோடு சந்தேக மரணம் என குறிப்பிடப்பட்டு போலீஸ் ரெகார்ட்களிலும் பதியப்பட்டது. ராம் பரிதியின் மகனை சந்தித்தான். அவன் நான் யாரிடமும் பேச விரும்பவில்லை என்றான். உனக்கு ஏதாவது ஹெல்ப் தேவைப்பட்டால் இந்த நம்பரில் கூப்பிடு என்று சொல்லி கார்ட் ஒன்றை அவன் பாக்கெட்டில் வைத்தான். அவன் கோபம் தீர்ந்ததும் நிச்சயம் கூப்பிடுவான் என எதிர்பார்த்தான். சற்றும் எதிர்பாராத விதமாக அமைச்சர் குழந்தைவேலு போலீஸ் காவலில் இறந்த பரிதி குடும்பத்துக்கு 2 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்தார்.
ஜானு ராம் ஆபீஸ் வந்திருந்தாள். உங்களை இப்படி டூட்டி இல்லாம பார்க்கவே சங்கடமா இருக்கு என்றாள் தீபு. இதெல்லாம் அனுபவிக்கணும் அப்படின்னு தலையெழுத்து என்றாள் ஜானு.
பரிதியின் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் ஆழ்ந்து வாசித்தாள் ஜானு. இதுவும் மர்டர்தான் என நிச்சயமாக சொல்ல முடியுமா ஜானு என்றான் ராம். ம் இது ஒரு வகையில் அவனை கட்டாயப்படுத்தி தூக்கு மாட்ட செய்திருக்கலாம். இல்லை உடன் இருந்த நபரே அவனை கழுத்தை இறுக்கி கொண்டிருக்கலாம் என்றாள். அடுத்து என்ன செய்ய போகிறீர்கள் ராம். அது இன்னும் தெளிவாகவில்லை. பரிதி பையனை நேரில் போய் பார்த்தேன். அவன் இன்னமும் அவன் அப்பா இறந்த துக்கத்தில் இருந்து மீளவில்லை. பரிதியை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க வேண்டும் அப்போது தான் உங்கள் மேலிருந்த கெட்ட பெயர் போகும் என்றான். அது ஒரு வகையில் எனக்கும் என்னை டிபார்ட்மெண்ட்டுக்கு நிரூபிக்க அவகாசம் கொடுத்த மாதிரிதான் என்றாள் ஜானு. அப்போது ராமுக்கு ஃபோன் வந்தது. குமார் வக்கீலிடம் இருந்துதான் ஃபோன் வந்திருந்தது. குமார் உங்களிடம் ஏதோ சொல்ல விரும்புகிறான் என்றார் வக்கீல்.
நாளை காலை 10 மணிக்கு என்னுடைய ஆபீஸ் வந்து விடுங்கள் இருவரும் சேர்ந்தே அவனை பார்க்க போவோம் என்றார். சரி சார்.
குமார் சோர்ந்து போயிருந்தான். பரிதியை கொன்றது போல என்னையும் கொன்று விடுவார்கள் என்று பயமாக உள்ளது என்றான். நீ ஏதாவது மினிஸ்டருக்கு எதிராக ஏதாவது ஆதாரம் வைத்திருக்கிறாயா ?அதெல்லாம் எதுவும் இல்லை. எப்போதும் கந்தவேல்தான் என்னிடம் மினிஸ்டர் பார்த்துக்கொள்வார் நீ தைரியமாக இந்த காரியத்தை செய் என்று சொல்லுவார். சரி உன்னுடைய ஃபோன் இப்போது எங்கே என்றான் ராம். அதில் ஏதாவது மினிஸ்டர் நேரிடையாக உன்னிடம் பேசியது இருக்கிறதா ? ஒரே ஒரு முறை பேசினார் ஆனால் ரெகார்ட் ஆனதா என தெரியவில்லை. சரி அதை நான் பார்த்துக்கொள்கிறேன்.அந்த ஃபோன் என்னுடைய மனைவியிடம் இருக்கிறது. சரி நான் அதை வாங்கி சோதித்து பார்க்கிறேன் . நீ தைரியமாக இரு என்றான் ராம். குமாரின் வக்கீல் அந்த எண்ணுக்கு அழைத்த போது அது ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. குமாருடைய மனைவி நம்பருக்கு அழைத்த போது அவள் சற்று நேரம் கழித்து எடுத்தாள். சொல்லுங்க வக்கீல் சார் என்ன விஷயம் என்றாள். குமார் ஃபோன் வேணுமே இப்போ . இப்போ வீட்டுக்கு வந்தா வாங்கிக்கலாமா என்றார் வக்கீல். சரி வாங்க என்றாள் .
ராமும் வக்கீலும் அங்கு போய் சேர்ந்த போது மதியம் ஆகிவிட்டது.குமார் மனைவி அந்த போனை தேடினாள் . எங்கும் இல்லை. இங்கே தானே வச்சேன் என்றாள். அவள் பையன் ஒருவன் நேத்துதானே ரவி மாமா அந்த போனை எடுத்துட்டு போனாரு . நீதானே எடுத்து குடுத்தே என்றான். ஆமா அவன்கிட்டதான் குடுத்தேன் என்றாள். என்ன சார் ஏதும் பிரச்சனையா எப்படியாவது குமாரை காப்பாத்தி குடுத்துடுங்க சார் என கூறினாள். நாங்க பார்த்துக்கிறோம் . இனிமே யார் வந்து எது கேட்டாலும் அவசரப்பட்டு கொடுக்காதே என்றார் வக்கீல். ரவிக்கு ஃபோன் செய்தார் வக்கீல். அவன் எடுத்தான். ரவி உன்கிட்ட குமார் ஃபோன் இருக்காமே அது முக்கியமா தேவைப்படுதுப்பா என்றார் . அதெல்லாம் தர முடியாது அதிக வச்சு நான் வேற ஒரு பிளான் போட்டிருக்கேன் என்றான். இது குமாரோட உயிர் பிரச்சனை இதுல விளையாடாதே என்றார் வக்கீல். அவன் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டான். இப்போ என்ன ராம் சார் பண்ணுறது. அவனை தேடி பிடிச்சுதான் ஆகணும் என்றான்.
ராம் எப்படியும் ரவி அந்த போனில் இருக்கும் தகவல்களை அறிந்திருப்பான் என நினைத்தான். ஜானுவுக்கு விஷயத்தை சொன்னான். அவள் ரவியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என ஸ்டேஷனில் உள்ள சில தெரிந்த ஆட்களிடம் பேசி பார்த்தாள் . நாங்க முயற்சி பண்ணுகிறோம் என்றார்கள். கவலைப்படாதீர்கள் ராம் அவர்கள் எப்படியும் ரவியை பிடித்து விடுவார்கள் என்றாள். அவன் அதற்குள் போனை ஏதாவது செய்து விட்டால் அதுதான் ராமுக்கு கவலையாய் இருந்தது.பரிதியின் மகனை 3 ரவுடிகள் சுற்றி வளைத்து தாக்க தொடங்கினர் . அண்ணே மேலேயே கை வைக்கிறியா என சொல்லிக்கொண்டே தாக்கினர். இவனும் திருப்பி தாக்கினான். அடி தாங்க முடியாமல் ஓட துவங்கினான். அப்போது அவர்களும் துரத்த தொடங்கினர் . அவனுக்கு ராமின் கார்ட் பாக்கெட்டில் இருந்தது நினைவுக்கு வர உடன் ஃபோன் பண்ணினான். ஓடி கொண்டே இருந்ததில் அவன் பேசுவது ராமுக்கு சரி வர கேட்கவில்லை. பரிதி மகனுக்கு ஏதோ ஆபத்து என்று மட்டும் புரிந்தது. உடனே அவன் லொகேஷன் செக் பண்ணி சம்பவ இடத்துக்கு விரைந்தான். அங்கே கத்தி குத்து காயங்களுடன் மயக்கமாய் விழுந்து கிடந்தான் அவன்.
அவனை ஆம்புலன்ஸ் வரவழைத்து ஹாஸ்பிடல் வண்டில் சேர்த்தான். அவனுடைய குடும்பத்துக்கு தகவல் சொன்னான். அவர்கள் நன்றி சொன்னார்கள். அவன் பெயர் முத்து என தெரிந்தது. ராம் மறுபடி காலையில் வந்து பார்ப்பதாக சொன்னான் . ரவி தேனாம்பேட்டை பகுதியில் சுற்றி திரிவதாக தகவல் கிடைத்தது ஜானுவுக்கு. உடனே காரை எடுத்துகொண்டு விரைந்தாள்.ராமுக்கும் தகவல் சொன்னவுடன் அவனும் கிளம்பினான். ரவி அங்கிருந்த பார் ஒன்றில் இருப்பதாக தகவல். ஜானு நீங்கள் உள்ளே வரவேண்டாம் என்றான் ராம். இவன் மட்டும் உள்ளே போனான். இவனை பார்த்ததும் ரவி பாட்டில் ஒன்றை எடுத்து அடிக்க போனான். ராம் தடுத்து அவன் வயிற்றில் ஓங்கி ஒரு குத்து விட்டான்.குமார் ஃபோன் எங்கேடா என கேட்டபடி அவனை தாக்கினான். அவன் அங்கிருந்து தப்பி ஓடினான். ராமும் விடாமல் விரட்டினான்.ஜானு என்ன ஆச்சு ராம் அந்த ஃபோன் இப்போ அவன்கிட்ட இல்லை.சரி இப்போ என்ன பண்ணுறது. நான் அவன் வீட்டுக்கு போய் விசாரிச்சுட்டு வரேன் .
மறுநாள் காலையில் முத்துவை ஹாஸ்பிடலில் போய் பார்த்தான். அவன் இப்போது கண்விழித்து இருந்தான்.ரொம்ப தாங்க்ஸ் சார் அந்த கந்தவேல் ஆளுங்கதான் என்னை அடிச்சாங்க என்றான்.போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுத்தீங்களா ? வேணாம் சார் அவன் பெரிய இடம் என்றாள் முத்துவின் அம்மா. ராம் ஆறுதல் சொல்லிவிட்டு ரவி வீடு இருக்கும் ஏரியாவுக்கு போனான். அங்கே ரவி வீடு பூட்டி இருந்தது. ஒரு வாரமா பூட்டி இருக்கு சார் என்றார்கள். இவனுக்கு இப்போது என்ன செய்வது எங்கு போய் அவனை தேடுவது என தெரியவில்லை. மறுபடி பார் ஏதாவது போயிருப்பானோ என யோசித்தான். அதே சமயம் ரவி தன் திட்டத்தை தன் நண்பர்களுடன் போதையில் உளறிக்கொண்டிருந்தான் . இப்போ ஹெல்த் மினிஸ்டர் குடுமி நம்ம கையில் என்றான். என்னடா சொல்லுற.. அதெல்லாம் ரகசியம் என்று சொல்லிவிட்டு மட்டையானான்.ராமுக்கு 10 மணிக்கு அந்த கால் வந்தது.
யாரோ 4 பேர் ஜீப்புல வந்து போதையா இருந்த ரவியை அள்ளிப்போட்டுகிட்டு போறாங்க சார் என்றது குரல். சரி நான் உடனே வரேன் என்றான். ரவியின் எதிர் வீட்டு நபர்தான் ஃபோன் செய்திருந்தார். ரவியை எந்த பக்கம் அழைச்சுட்டு போனாங்க .. மெட்ரோ பக்கம் போன மாதிரி இருந்தது. மினிஸ்டரையே மிரட்டி பணம் கேக்குறியா ? குமார் ஃபோன் எங்கடா என அவர்கள் உதைத்த உதையில் மொத்த போதையும் தெளிந்தது ரவிக்கு.நீங்க என்ன கொன்னாலும் சொல்ல முடியாது என்றான். அவர்கள் கந்தவேலுக்கு ஃபோன் பண்ணினார்கள். முடிச்சிடுங்க அவனால் தொந்தரவுதான் என்றான். ராம் அதற்குள் அங்கு வரவே அவர்கள் ராமை தாக்க ஓடினார்கள். ரவி எதிர் திசையில் ஓடினான். ராம் அவர்களுடன் சண்டையிட்டான். போலீஸ் வந்துவிடவே ஜீப்பில் ஏறி தப்பித்தனர். ரவி ஓரிடத்தில் ஒளிந்திருந்தவன் வெளியே வந்தான். ராம் சார் என குரல் கொடுத்தான். அவன் பாக்கெட்டில் இருந்த பேப்பர் எடுத்தான். பின்னால் வந்த வந்த வண்டி மோதி பலத்த காயம் அடைந்தான். அவனை ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்கள்.
ராம் அந்த காகிதத்தை பிரித்து பார்த்தான். அது ஒரு லாக்கர் ரசீது. ரயில்வே ஸ்டேஷன் லாக்கர். ராம் ரவியின் போனையும் வைத்திருந்தான். ஜானு வந்து ராம் உங்களுக்கொன்னும் ஆகி விடவில்லையே என்றாள் . அதெல்லாம் ஒண்ணுமில்லை இந்த லாக்கர் போய் குமார் ஃபோன் எடுக்கணும் என்றான். அவர்கள் அங்கு போய் போனை மீட்டார்கள். ரவி இன்னும் கண் விழிக்கவில்லை. ராம் குமாரின் போனை ஆராய்ந்தான். அதில் மினிஸ்டர் குழந்தைவேலு குமாரிடம் அந்த சுமதிதான் பாண்டிய கொன்னவ.. அவளை கொல்ல என்ன தயக்கம்.. மத்த எல்லாத்தையும் கந்தவேல் பாத்துக்குவான் என்று பேசியது பதிவாகியிருந்தது.ராம் இதை உடனே மேலிடத்திற்கு
சொல்லுங்கள் ஜானு என்றான். வேண்டாம் சார் நாம மீடியா வச்சே மூவ் பண்ணலாம் என்றாள். ஆர் யு ஷூர் என்றான். நிச்சயமாக என்றாள் . அணைத்து சேனல்களிலும் குழந்தைவேலு பேசியது ஒளிபரப்பானது. உயரதிகாரிகள் ஜானுவையும், ராமையும் கூப்பிட்டு பேசினர்.
மினிஸ்டர் பதவியை குழந்தைவேலு ராஜினாமா செய்ய வற்புறுத்தப்பட்டது.கந்தவேலு அரெஸ்ட் செய்யபட்டான்.குழந்தைவேலுவுக்கு எதிராக கந்தவேல் சாட்சி சொன்னான். போலீஸ் குழந்தைவேலுவை தேடியது. அவர் தலைமறைவானார். ஜானு சஸ்பென்ஷன் ரத்து செய்து டூட்டியில் திரும்ப சேர தயாரானாள் . அந்த பரிதி கொலை கேஸ் சிசிடிவி ஃபுடேஜ் பார்த்த போது கடைசியாக வந்து சந்தித்தது மினிஸ்டர் பி ஏ தான் என தெரிந்தது. அவனும் இப்போது தலைமறைவாகியிருந்தான். ஜானு ராமுக்கு ஃபோன் பண்ணி நன்றி தெரிவித்தாள். ராம் வாழ்த்துக்கள் சொன்னான். ரவி ஹாஸ்பிடலில் கண்விழித்து விட்டதாக ஃபோன் வந்தது. ராம் உடனே அங்கு போக தயாரானான்.